புதிய டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் கார் அறிமுகம்

Written By:

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கைட் 5 என்ற பெயரில் டாடா நிறுவனம் காட்சிக்கு வைத்திருக்கும் புதிய காம்பேக்ட் செடான் காரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்கலை இந்த செய்தியில் காணலாம்.

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான்

 

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் செடான் கார் என்ற தாத்பரியத்தை அறிமுகம் செய்ததே டாடா மோட்டார்ஸ்தான். அதனை பிற நிறுவனங்கள் லாபகரமாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், டாடாவுக்கு போதிய பலன் கிட்டவில்லை.

டாடா இன்டிகோ இசிஎஸ் விற்பனையில் போதிய வரவேற்பை பெறாத நிலையில், ஸெஸ்ட் என்ற காம்பேக்ட் செடானை அறிமுகம் செய்தது. டிசைன் மற்றும் சிறப்பம்சங்களில் அசத்தலாக இருந்தும், இன்ன பிற காரணங்களால் மந்தமான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

இந்தநிலையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கைட் 5 என்ற குறியீட்டுப் பெயரில் புதிய காம்பேக்ட் செடான் காரை டாடா நிறுவனம் பார்வைக்கு வைத்துள்ளது.

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா ஸீக்கா ஹேட்ச்பேக் காரின் செடான் வெர்ஷன்தான் இந்த கைட் 5 கார். டாடா இன்டிகோ இசிஎஸ் காருக்கு மாற்றாக இந்த புதிய காம்பேக்ட் செடான் காரை அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த காரின் கூரை வடிவமைப்பு பூட் ரூமுடன் வெகு நேர்த்தியாக நேரடியாக சேர்க்கப்பட்டிருக்கிறது. அத்துடன் முகப்பு, பக்கவாட்டு, பின்புறம் என எந்தப் பக்கமும் ஒரு நேர்த்தியான அமைப்பை கொண்டுள்ளது.

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின்கள் முறையே 84 பிஎச்பி மற்றும் 69 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். பெட்ரோல், டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதோடு, ஏஎம்டி கியர்பாக்ஸும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி டிசையர், ஹூண்டாய் எக்ஸென்ட், ஃபோர்டு ஆஸ்பயர், ஹோண்டா அமேஸ் ஆகிய கார்களுடன் போட்டி போடும்.

ஆனால், டாடா நிறுவனம் விற்பனை செய்து வரும் டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் காரை விட இந்த புதிய காம்பேக்ட் செடான் விலை குறைவாக இருக்கும். எனவே, மிக குறைவான விலையில் செடான் காரை தேடுவோர்க்கு, பொருத்தமான மாடலாக இருக்கும்.

English summary
Tata has unveiled the Kite 5 sedan for the first time to the world at the 2016 Auto Expo. The Kite 5 is a sub 4-metre compact sedan and will replace the Indigo eCS.
Story first published: Tuesday, February 9, 2016, 14:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X