புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்... ஆடம்பரத்தின் புதிய அடையாளம்!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிரிக்கெட் ஜாம்பவானும், பிஎம்டபிள்யூவின் ஆஸ்தான விளம்பர தூதருமான சச்சின் டெண்டுல்கர் இந்த புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நடந்த இந்த நிகழ்வின் படங்களை கேலரியிலும், தொடர்ந்து காரைப் பற்றியத் தகவவல்களையும் காணலாம்.

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் பெட்ரோல், டீசல் என இரு மாடல்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 450 எச்பி பவரையும், 650 என்எம் டார்க்கையும் வாரி வழங்க வல்ல 4.4 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த மாடல் 0- 100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

டீசல் மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சமாக 265 எச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது. இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் எட்டிவிடும். இதுவும் மணிக்கு அதிகபட்சமாக 250 கிமீ வேகத்தை தொட வல்லது. இரண்டு மாடல்களிலும் 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமான சிறுநீரக வடிவ இரட்டை க்ரில் அமைப்பு, புதிய ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டுகள் மாற்றம் கண்டிருக்கின்றன. பின்புற பம்பரில் புகைப்போக்கி குழாய்கள் இயைந்து காட்சி தருகின்றன. ஆப்ஷனலாக லேசர் ஹெட்லைட்டுகளையும் பெற முடியும். இன்டிரியரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், முந்தைய மாடலைவிட கூடுதல் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. மசாஜ் செய்யும் வசதியுடன் கூடிய இருக்கைகள் குறிப்பிட்டு கூற வேண்டியது.

மிக தாராளமான இடவசதி, தொழில்நுட்பம், பாதுகாப்பு கொண்டதாக உயர்வகை சொகுசு காராக புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் வந்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் மற்றும் ஆடி ஏ8எல் ஆகிய சொகுசு கார்களுடன் இந்த புதிய மாடல் நேரடியாக போட்டி போடும். பெட்ரோல் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் மூன்று வேரியண்ட்டுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

விலை விபரம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

பெட்ரோல் மாடல்

பிஎம்டபிள்யூ 750எல்ஐ டிசைன் ப்யூர் எக்ஸெலன்ஸ்: ரூ. 1.50 கோடி(இறக்குமதி மாடல்)
பிஎம்டபிள்யூ 750 எல்ஐ எம் ஸ்போர்ட்: ரூ.1.55 கோடி(இறக்குமதி மாடல்)

டீசல் மாடல்

பிஎம்டபிள்யூ 730எல்டி டிசைன் ப்யூர் எக்ஸெலன்ஸ்: ரூ.1.11 கோடி
பிஎம்டபிள்யூ 730எல்டி எம் ஸ்போர்ட்: ரூ.1.19 கோடி
பிஎம்டபிள்யூ 730எல்டி டிசைன் ப்யூர் எக்ஸெலன்ஸ்: ரூ.1.40 கோடி(இறக்குமதி மாடல்)

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 730எல்டி டிசைன் ப்யூர் எக்ஸெலன்ஸ் மற்றும் 730எல்டி எம் ஸ்போர்ட் ஆகிய இரு மாடல்களும் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
BMW has launched the 7 Series Luxury Limousine in India with the help of Indian cricketing legend Sachin Tendulkar. Prices for the new 7 series start at Rs. 1.1 Crores, ex-showroom(Delhi).
Story first published: Saturday, February 6, 2016, 10:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X