2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், 80 புதிய தயாரிப்புகள் அறிமுகமாகிறது

Written By:

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் என சுமார் 80 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ என்பது சர்வதேச அளவில் மிகவும் புகழ்வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாக விளங்குகிறது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ ஃபிப்ரவரி 5 முதல் 9-ஆம் தேதி வரை அனைவரும் பங்கேற்கும் வகையில் நடைபெற உள்ளது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ-வானது இந்தியாவில் நிகழும் 13-வது பதிப்பு ஆகும்.

காம்போனண்ட் ஷோ எனப்படும் உபகரணங்கள் தொடர்பான ஷோவனது, ஃபிப்ரவரி 4 முதல் 7-ஆம் தேதி வரை, பிரகதி மைதான் பகுதியில் நடைபெறுகிறது.

சுமார் 80 புதிய தயாரிப்புகளின் அறிமுகம் அல்லது காட்சிபடுத்தும் நிகழ்ச்சிகள், இந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நடைபெற உள்ளது. 20 நாடுகளில் இருந்து சுமார் 1,500-க்கும் மேற்பட்ட சப்ளையர்கள், இந்த ஆட்டோ ஷோவில் பங்கேற்கின்றனர். இவர்கள் தங்களின் புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு காண்பிக்க உள்ளனர்.

ஏறக்குறைய அனைத்து முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும், அதிக அளவிலான புதிய மற்றும் முதல்-முறை ஆட்டோ எக்ஸ்போ பங்கேற்பாளர்களும் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

80-new-products-to-be-unveiled-at-the-2016-delhi-auto-expo

அனைத்து இந்திய ஆட்டோமொபைல் துறை ஆர்வலர்களுக்கு, இந்த நிகழ்ச்சி பெரிய வரபிரசாதமாக அமையும். இதற்கு காரணம், இந்திய ஆட்டோமொபைல் துறை ஆர்வலர்களுக்கும், ஒரே இடத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆட்டோமொபைல் வருங்காலம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

வழக்கம் போல், முந்தைய பதிப்பை காட்டிலும், இந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை மாபெரும் எக்ஸ்போவாக மாற்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5 நாட்கள் நடைபெறும் இந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், குறைந்தது 7 லட்சம் பேர் பங்கேற்பாளர்கள் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கபதற்கான டிக்கெட்கள் bookmyshow.com என்ற தளத்திலும், ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் இடத்தில் பெற்று கொள்ளலாம் என முன்பே அறிவிக்கபட்டிருந்தது.

English summary
80 New Products are expected to be unveiled in India during the 2016 Delhi Auto Expo. The 2016 Delhi Auto Expo is open to all from February 5 to 9, 2016. Organisers expect over seven lakh visitors during these five days. Tickets can be bought via bookmyshow.com or shall be purchased at the entrance of the Venue.
Story first published: Thursday, January 21, 2016, 9:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark