டெல்லி ஆட்டோ எக்ஸ்போ: இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதி!

Written By:

கடந்த இரண்டு நாட்களாக பத்திரிக்கையாளர்களுக்கான நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த நிலையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போ இன்று முதல் பொது பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ
 

பல புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஸ்போர்ட்ஸ் கார், ஃபார்முலா ஒன் கார், விண்டேஜ் கார், பைக்குகள், கான்செப்ட் மாடல்கள் என்று அங்கு பலதரப்பட்ட வகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் மாடல்களை காண்பதற்கு பார்வைாளர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இரண்டாவது நாளான நேற்று, பத்திரிக்கையாளர்களுக்கான நாளாக குறிப்பிடப்பட்டாலும், பொது பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டனர். இதனால், பார்வையாளர்கள் கூட்டத்தால், ஆட்டோ ஷோ களை கட்டியிருக்கிறது. வரும் 9ந் தேதி வரை பொது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் விரிவானத் தகவல்களை இன்று முதல் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வழங்க இருக்கிறோம். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் நிகழ்வுகளின் பிரத்யேக படங்கள் மற்றும் தகவல்களை இன்று முதல் தொடர்ந்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

Please Wait while comments are loading...

Latest Photos