டிஎஸ்கே பெனெல்லி டிஆர்கே 502 அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் அறிமுகம்

Written By:

டிஎஸ்கே பெனெல்லி டிஆர்கே 502 அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிளின் இந்திய அறிமுகம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நடைபெற்றது.

டிஎஸ்கே பெனெல்லி டிஆர்கே 502 அட்வென்சர் டூரர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

இந்தியாவில் பிரவேசம்;

இந்தியாவில் பிரவேசம்;

டிஎஸ்கே பெனெல்லி டிஆர்கே 502 அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள், தற்போது 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது தான் முறையாக இந்தியாவில் காட்சிபடுத்தபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜின் திறன் ; 500 சிசி

இஞ்ஜின் வகை ; ஆயில்-கூல்ட், ட்யூவல் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட்கள் உடைய இன்லைன் ட்வின்

பவர் ; 8500 ஆர்பிஎம்களில் 48 பிஹெச்பி

டார்க் ; 4500 ஆர்பிஎம்களில் 45 என்எம்

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டிஎஸ்கே பெனெல்லி டிஆர்கே 502 அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், செய்ன் டிரைவ் மூலமாக பின் சக்கரத்திற்கு பவர் செலுத்துகிறது.

டேங்க்;

டேங்க்;

டிஎஸ்கே பெனெல்லி டிஆர்கே 502 அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள், 20 லிட்டர் எரிபொருள் தேக்கி வைத்து கொள்ளும் அளவிலான கொள்ளளவு கொண்ட டேங்க் கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

பெனெல்லி டிஆர்கே 502 அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள், முன்பக்கத்தில் தலைகீழாக பொருத்தபட்டுள்ள அட்ஜஸ்டபிள் 50 மில்லிமீட்டர் (அப்சைட் டவுன் அட்ஜஸ்டிபிள்) போர்குகளும், பின்பக்கத்தில் ப்ரீ-லோட் அட்ஜஸ்டிபிள் ரியர் மோனோஷாக் போர்குகளும் வழங்கபட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

டிஆர்கே 502 அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிளின் முன் சக்கரத்திற்கான பிரேக்கிங் பணிகள், 4-பிஸ்டன் கேளிப்பர் கொண்ட 320 மில்லிமீட்டர் ட்வின் ஃப்ளோட்டிங் டிஸ்க் பிரேக்கள் மூலம் மேற்கொள்ளபடுகிறது.

பின் சக்கரத்திற்கான பிரேக்கிங் பணிகள், ஏபிஎஸ் வசதியுடைய 2-பிஸ்டன் கேளிப்பர் கொண்ட 260 மில்லிமீட்டர் சிங்கிள் டிஸ்க் பிரேக் மூலம் மேற்கொள்ளபடுகிறது.

டிசைன்;

டிசைன்;

டிஆர்கே 502 அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள் லாங்க் சஸ்பென்ஷன் டிராவல், உயர்ந்த ஹேண்டிள் பார்கள் மற்றும் அப்-ஸ்வெப்ட் எக்ஸ்ஹாஸ்ட்-டுடன் உயர்ந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

இதனால், சிறிய அளவில் ஆன அசல் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள் போன்றே காட்சி அளிக்கிறது.

டிஆர்கே 502 அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிளின் ட்வின் ஹெட்லேம்ப்கள், பெனெல்லி வாகனத்திற்கே சொந்தமான தோற்றத்தை பிரதிபளிக்கிறது. இதனால், இது முன் திசையில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் அம்சமாக காணப்படுகிறது.

அறிமுகம்?

அறிமுகம்?

டிஎஸ்கே பெனெல்லி டிஆர்கே 502 அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

போட்டி?

போட்டி?

டிஎஸ்கே பெனெல்லி டிஆர்கே 502 அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிளுக்கு, முக்கியமான போட்டியாக சுஸுகி வி-ஸ்டார்ம் 650 மோட்டார்சைக்கிள் மட்டுமே விளங்குகிறது.

ஏற்க்குறைய ஒரே விலையில், சுஸுகி நிறுவனம், அதன் சுஸுகி வி-ஸ்டார்ம் 650 மோட்டார்சைக்கிளுக்கு சற்று பெரிய இஞ்ஜினை வழங்குகிறது.

விலை?

விலை?

டிஎஸ்கே பெனெல்லி டிஆர்கே 502 அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள், சுமார் 5 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பெனெல்லி டிஎன்டி25 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது- விபரம்

பெனெல்லி டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிள், இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம்

பெனெல்லி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Benelli showcased their TRK 502 Adventure tourer motorcycle for the very first time in India at the 2016 Delhi Auto Expo. TRK 502 Adventure tourer motorcycle is provided with a 20-litre fuel tank. DSK Benelli TRK 502 Adventure tourer motorcycle would be launched in India for Sales later this year. It is expected to be price around Rs. 5 lakhs.
Story first published: Monday, February 8, 2016, 14:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark