பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய கார் மாடல்கள் விரைவில் அறிமுகமாகிறது

By Ravichandran

பிஎம்டபிள்யூ இந்தியா 3 புதிய கார் மாடல்களை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிமுகம் செய்ய உள்ளது.

இன்னும் சில நாட்களில் நிகழவிருக்கும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது, தங்கள் நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் 3 புதிய மாடல்கள் காட்சிபடுத்தபடும் என பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. பிஎம்டபிள்யூ-வின் ஸ்டால்களில் புதிய 7-சீரிஸ் லக்சுரி செடான், மேம்படுத்தபட்ட 3 சீரிஸ் செடான் மற்றும் புதிய எக்ஸ்1 காம்பேக்ட் எஸ்யூவி மாடல் ஆகியவை காட்சிபடுத்தபட உள்ளது.

இந்த 3 மாடல்களில், எந்த மாடலின் விற்பனைக்கான அறிமுக தேதியும் இது வரை உறுதி செய்யபடவில்லை. இந்த கார்களின் அறிமுகங்கள், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நிறைவடைந்த பின் நிகழலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த புதிய மாடல்கள், அதிக அளவிலான வாடிக்கையாளர்களை பிஎம்டபிள்யூ-வை நோக்கி வரவைக்கும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

bmw-india-three-new-models-at-2016-delhi-auto-expo-bmw-7-series

7-சீரிஸ் லக்சுரி செடான் பற்றி...

6-வது தலைமுறை 7-சீரிஸ் லக்சுரி செடான் காரை கோவாவில் நடந்த ஒரு பிரத்யேக நிகழ்ச்சியில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் காட்சிபடுத்தியது. இந்த 7-சீரிஸ் லக்சுரி செடான் தான், பிஎம்டபிள்யூ செடான் ரேன்ஜில் ஃபிளாக்‌ஷிப் தயாரிப்பாக விளங்குகிறது. இந்த 7-சீரிஸ் லக்சுரி செடான் காரை பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 தேர்வுகளிலும் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் வழங்குகிறது.

bmw-india-three-new-models-at-2016-delhi-auto-expo-x1

எக்ஸ்1 காம்பேக்ட் எஸ்யூவி பற்றி...

முதல் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை காட்டிலும், இந்த இரண்டாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காம்பேக்ட் எஸ்யூவி அதிக ஸ்போர்டியாகவும், கூடுதல் இடவசதி கொண்டதாகவும் உள்ளது. பிஎம்டபிள்யூ எஸ்யூவி ரேன்ஜ்களில், பேஸ் மாடல், 5-ஸீட்டர் மற்றும் 7-ஸீட்டர் தேர்வுகளுடன் வழங்கபட வாய்ப்புகள் உள்ளது. இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காம்பேக்ட் எஸ்யூவி-யை பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 தேர்வுகளிலும் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் வழங்கும்.

bmw-india-three-new-models-at-2016-delhi-auto-expo-3-series

3 சீரிஸ் செடான் பற்றி...

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான் காருக்கு, இந்திய சந்தைகளில் மிக அவசியமாக தேவைபட்ட மேம்பாடுகள் வழங்கபட உள்ளது. இந்தியாவில் 2012-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டதில் இருந்து, இந்த நுழைவு-நிலை செடான் காரின் பொலிவுகள் கூட்டபடவே இல்லை. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது, புதிய ஸ்போர்ட்டியான மற்றும் கூர்மையான ஈர்க்கும் தோற்றம் கொண்ட பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான் அறிமுகம் செய்யபட வாய்ப்புகள் உள்ளது.

Most Read Articles
English summary
BMW India has confirmed that, their three new models would be showcased at the upcoming 2016 Delhi Auto Expo. The BMW stalls would display all-new 7 Series luxury sedan, updated 3 Series sedan, and their all-new X1 compact SUV model. Anyhow, launch dates have not been confirmed for either of the 3 models.
Story first published: Saturday, January 23, 2016, 12:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X