பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி காரை, இந்தியாவில் அறிமுகம் செய்தார் சச்சின் டெண்டுல்கர்

Written By:

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தார்.

பிஎம்டபுள்யூ எக்ஸ்1 கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

பிஎம்டபுள்யூ எக்ஸ்1 பற்றி...

பிஎம்டபுள்யூ எக்ஸ்1 பற்றி...

பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி, மிகவும் எதிர்பார்க்கபட்ட சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி காரை, சச்சின் டெண்டுல்கர் அவர்கள் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது, இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

டீசல் இஞ்ஜின் வேரியண்ட்;

டீசல் இஞ்ஜின் வேரியண்ட்;

தற்போதைய நிலையில், இந்திய வாகன சந்தைகளில் பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி காரின் டீசல் வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

பெட்ரோல் இஞ்ஜின் வேரியண்ட்;

பெட்ரோல் இஞ்ஜின் வேரியண்ட்;

பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி காரின் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட வேரியண்ட் இந்த ஆண்டின் வரும் மாதங்களில் பின்னர் அறிமுகம் செய்யபட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜின் வகை - டீசல் இஞ்ஜின்

இஞ்ஜின் கொள்ளளவு - 2.0 லிட்டர்

பவர் - 4,000 ஆர்பிஎம்களில் 188 பிஹெச்பி

டார்க் - 1,750 - 2,500 ஆர்பிஎம்களில் 400 என்எம்

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி காரின் இஞ்ஜின், 8-ஸ்பீட் ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

திறன்;

திறன்;

பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி காரின் இஞ்ஜின், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 7.6 நொடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி, உச்சபட்சமாக மணிக்கு 219 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.

மைலேஜ்;

மைலேஜ்;

பிஎம்டபுள்யூ எக்ஸ்1, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு, 20.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்1, முன் பக்கத்தில், பெரிய பிஎம்டபுள்யூ-சிக்நேச்சர் கிட்னி கிரில்களையும், பெரிய ஏர் இன்-டேக்களையும் கொண்டுள்ளது.

மேலும், ஃபாக் லேம்ப்கள் மற்றும் ட்வின் சர்குளர் எல்ஈடி ஹெட்லைட்கள் மூலம் உருவாக்கபடும் ‘த்ரீ-ஐய்ட்' பேஸ் (3 கண்கள் உடையது போன்ற அமைப்பு) உள்ளது. இது ஹால்மார்க் எக்ஸ் சீரிஸ் மாடல்களை நினைவுபடுத்துவது போல் அமைந்துள்ளது.

ரியர்;

ரியர்;

புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்1 காரின் ரியர், இதன் முன் பக்கத்தில் உள்ள கட்டுமஸ்தான தோற்றத்திற்கு வலு சேர்ப்பது போல் அமைந்துள்ளது. இந்த காரின் பின் பகுதியில் உள்ள ரியர் பம்பருக்கு அடியில் 2 டெய்ல்பைப்கள் உள்ளது.

மேலும், இது 18 இஞ்ச் அளவில் இலகுவான எடை கொண்ட அல்லாய் வீல்கள் கொண்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்1 காரின் இண்டீரியர் (உட்புறத்தில்) லெதர் சீட்கள் மற்றும் 6.5 இஞ்ச் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் கொண்ட பிஎம்டபுள்யூ ஐ-டிரைவ் சிஸ்டம் உள்ளது.

மேலும், இந்த பிஎம்டபுள்யூ எக்ஸ்1 காரின் எக்ஸ்டிரைவ்20டி எம், 8.8 இஞ்ச் அளவிலான ஸ்கிரீன் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள் - 1;

பாதுகாப்பு அம்சங்கள் - 1;

புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்1 ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

(*) 6 ஏர்பேக்கள்

(*) பிரேக் அசிஸ்ட் வசதியுடன் கூடிய ஏபிஎஸ் (ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்)

(*) டிடிசி (டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல் உடைய டிஎஸ்சி (டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்)

(*) கார்னரிங் பிரேக் கண்ட்ரோல்

பாதுகாப்பு அம்சங்கள் - 2;

பாதுகாப்பு அம்சங்கள் - 2;

புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்1 ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

(*) ஹில் டிஸ்ஸெண்ட் கண்ட்ரோல்

(*) ரீ-இன்ஃபோர்ஸ்ட் சைட்வால்கள் கொண்ட ரன்ஃபிளாட் டைர்கள்

(*) எலெக்ட்ரானிக் வெஹிகிள் இம்மோபைலைஸர்

(*) கிராஷ் சென்ஸார்

அறிமுகம்?

அறிமுகம்?

பிஎம்டபுள்யூ எக்ஸ்1 மாடலை, இந்தியா முழுவதும் உள்ள பிஎம்டபுள்யூ ஷோரூம்களில் எங்கு வேண்டுமானாலும் புக்கிங் செய்து கொள்ளலாம்.

பிஎம்டபுள்யூ எக்ஸ்1 கார்களின் டெலிவரி வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கும்.

வேரியண்ட்கள், விலை விவரங்கள்;

வேரியண்ட்கள், விலை விவரங்கள்;

பிஎம்டபுள்யூ எக்ஸ்1 மாடலின் டீசல் வேரியண்ட் மட்டுமே தற்போது கிடைக்கும்.

ஆல் நியூ பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20டி எக்ஸ்பெடிஷன் : 29,90,000 ரூபாய்

ஆல் நியூ பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20டி எக்ஸ்லைன் : 33,90,000 ரூபாய்

ஆல் நியூ பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20டி எக்ஸ்லைன் : 35,90,000 ரூபாய்

ஆல் நியூ பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20டி எம் ஸ்போர்ட் : 39,90,000 ரூபாய்

குறிப்பு ; இந்த விலை விவரங்கள் அனைத்தும், எக்ஸ் ஷோரூம் (டெல்லி) விலை விவரங்கள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

காதலர் தின பரிசாக புதிய எக்ஸ்1 காரை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 அறிமுகம்: ஸ்லைடரில் முக்கிய அம்சங்கள்

பிஎம்டபுள்யூ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Little Master Sachin Tendulkar Launched the BMW X1 SUV in India at the 2016 Delhi Auto Expo. The BMW X1 is available only with diesel engine in India currently. The Petrol powered variant may be launched later this year. BMW X1 can be booked at any of the BMW's showrooms across India. Deliveries would begin in April.
Story first published: Tuesday, February 9, 2016, 12:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark