பிஎம்டபுள்யூ ஜி310ஆர் ஸ்ட்ரீட் பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது

Written By:

பிஎம்டபுள்யூ ஜி310ஆர் பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

பிஎம்டபுள்யூ ஜி310ஆர் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

பிஎம்டபுள்யூ ஜி310ஆர் பைக் பற்றி...

பிஎம்டபுள்யூ ஜி310ஆர் பைக் பற்றி...

பிஎம்டபுள்யூ மோட்டாராட் நிறுவனம், தங்களின் சமீபத்திய தயாரிப்பான பிஎம்டபுள்யூ ஜி310ஆர் ஸ்ட்ரீட் பைக்-கை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தியது.

இந்த பிஎம்டபுள்யூ நிறுவனத்தால் வடிவமைக்கபட்டாலும், டிவிஎஸ் நிறுவனம் மூலம் இந்தியாவில் தயாரிக்கபட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜின் திறன் ; 313 சிசி

இஞ்ஜின் வகை ; வாட்டர்-கூல்ட், ட்யூவல் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட்கள் உடன் சிங்கிள் சிலிண்டர் கொண்ட இஞ்ஜின்

பவர் ; 9,500 ஆர்பிஎம்களில் 33.6 பிஹெச்பி

டார்க் ; 7,500 ஆர்பிஎம்களில் 28 என்எம்

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

பிஎம்டபுள்யூ ஜி310ஆர் ஸ்ட்ரீட் பைக், உச்சபட்சமாக மணிக்கு 145 கிலோமீட்டர் வேகம் செல்லும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

பிஎம்டபுள்யூ ஜி310ஆர் ஸ்ட்ரீட் பைக், ஒரு லிட்டருக்கு 30 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பிஎம்டபுள்யூ ஜி310ஆர் ஸ்ட்ரீட் பைக்கில் உள்ள இஞ்ஜினின் சிலிண்டர் ஹெட் தலைகீழாக வைக்கபட்டுள்ளது. இது இன்லெட் டிராக்டை முன் நோக்கிய நிலையிலும், எக்ஹாஸ்ட் எக்ஸிட்-டை பின் நோக்கிய திசையிலும் இருக்க உதவுகிறது.

பிஎம்டபுள்யூ ஜி310ஆர் ஸ்ட்ரீட் பைக்கின் இஞ்ஜின், செய்ன் டிரைவ் உடன் இணைக்கபட்டுள்ள 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் மூலமாக பின் சக்கரத்திற்கு பவர் செலுத்துகிறது.

டேங்க் கொள்ளளவு;

டேங்க் கொள்ளளவு;

பிஎம்டபுள்யூ ஜி310ஆர் ஸ்ட்ரீட் பைக்கின் டேங்க்கில், 11 லிட்டர் எரிபொருள் நிரப்பும் வகையிலான எரிபொருள் கொள்ளளவு உள்ளது.

எடை;

எடை;

பிஎம்டபுள்யூ ஜி310ஆர் ஸ்ட்ரீட் பைக்கின் டேங்க்கில், முழு எரிபொருள் கொள்ளளவான 11 லிட்டர் எரிபொருள் நிரப்பபடும் நிலையில், இதன் 158 கிலோகிராம்களாக இருக்கும்.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

பிஎம்டபுள்யூ ஜி310ஆர் ஸ்ட்ரீட் பைக், அதன் முன் பக்கத்தில் 140 மில்லிமீட்டர் சஸ்பென்ஷன் ட்ராவல் கொண்டுள்ளது.

பின் பக்கத்தில், 131 மில்லிமீட்டர் டிராவல் உடைய மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. இந்த அமைப்புகள் குழிகளாலும், வளைவிகளினாலும் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க உதவுகிறது.

பிரேக்;

பிரேக்;

300 மில்லிமீட்டர் அளவிலான ரேடியல் மவுண்டட் 4-பிஸ்டன் கேளிப்பர் மற்றும் சிங்கிள் பிஸ்டன் உடைய 240 மில்லிமீட்டர் ஃப்ளோட்டிங் டிஸ்க்-கள் பிரேக்கிங் பணிகளை மேற்கொள்கின்றன.

டிசைன்;

டிசைன்;

ஸ்டைல் பொருத்தவரை, பிஎம்டபுள்யூ ஜி310ஆர் ஸ்ட்ரீட் பைக்கிற்கு, பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் பிற மாடல்களில் இருந்து சில அம்சங்கள் ஏற்று கொள்ளபட்டுள்ளது. இதன் ஹெட்லைட் மற்றும் ஃப்ரண்ட் ஷ்ரௌட் ஆர் 1200 ஆர் மாடலை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது.

இதன் ஆங்குலார் சைட் பேனல்கள், எஸ் 1000 ஆர் மாடலில் உள்ளது போல் அமைக்கபட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, இதன் திடமான டேங்க்குடன் சேர்ந்து இந்த பிஎம்டபுள்யூ ஜி310ஆர் ஸ்ட்ரீட் பைக்கிற்கு ஆக்கிரோஷமான தோற்றத்தை வழங்குகிறது.

போட்டி;

போட்டி;

தற்போது, கேடிஎம் 390 பைக்-கின் ஆதிக்கத்தில் உள்ள சந்தையில் தான் இந்த பிஎம்டபுள்யூ ஜி310ஆர் ஸ்ட்ரீட் பைக் போட்டி போட வேண்டிய நிலை இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜி310ஆர், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

பிஎம்டபிள்யூ - டிவிஎஸ் கூட்டணியின் முதல் பைக் - அதிகாரப்பூர்வ படங்கள், தகவல்கள்

இது பிஎம்டபிள்யூ பைக்தான்... நம்பலையா, உள்ளே வாங்க

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
BMW Motorrad showcased their latest street bike the G310R at the 2016 Delhi Auto Expo. This BMW G310R Street Bike is designed by BMW. But, it will be manufactured by TVS Motors in India. BMW G310R Street Bike has a fuel tank which has capacity of 11-litre fuel. When the tank is fully loaded, BMW G310R Bike weighs 158 kilograms.
Story first published: Monday, February 8, 2016, 20:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark