செவர்லே பீட் ஆக்டிவ்... புதிய க்ராஸ்ஓவர் மாடல் அறிமுகம்

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களை கவர்ந்த மாடல்களில் ஒன்று செவர்லே பீட் ஆக்டிவ் கார். தற்போது விற்பனையில் இருக்கும் செவர்லே பீட் காரின் அடிப்படையிலான க்ராஸ்ஓவர் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

அட்டகாசமான எலுமிச்சை பழ நிறத்தில், கூடுதல் அலங்காரத்துடன் காட்சிக்கு நின்றிருந்த இந்த புதிய க்ராஸ்ஓவர் மாடலின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

செவர்லே பீட் காரில் கூடுதலாக ஸ்கிட் பிளேட், ரூஃப்ரெயில் மற்றும் பாடி கிளாடிங்குகள் சேர்க்கப்பட்டு க்ராஸ்ஓவர் மாடலாக மாற்றப்பட்டிருக்கிறது. புதிய அலாய் வீல்களும் காரின் தோற்றத்திற்கு வலு சேர்க்கிறது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

புதிய செவர்லே பீட் க்ராஸ்ஓவர் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

செவர்லே பீட் காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த காரிலும் பயன்படுத்தப்படும்.

உற்பத்தி

உற்பத்தி

இந்த ஆண்டு மத்தியில் மஹாராஷ்டிர மாநிலம், தலேகானில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையில், புதிய செவர்லே பீட் ஆக்டிவ் காரின் உற்பத்தி துவங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு இந்த புதிய செவர்லே பீட் ஆக்டிவ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹேட்ச்பேக் க்ராஸ்ஓவர் மார்க்கெட்டில் குறைவான விலை கொண்ட காராக இது எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி

போட்டி

தற்போது விற்பனையில் இருக்கும் ஹேட்ச்பேக் அடிப்படையிலான க்ராஸ்ஓவர் மாடல்களுடன் போட்டி போடும். விரைவில் வரும் ஃபோர்டு ஃபிகோ க்ராஸ்ஓவர் மாடலுடன் விலையில் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஸ்டைல்

ஸ்டைல்

குறைவான விலையில் மிக ஸ்டைலான க்ராஸ்ஓவர் மாடலாக வரும் என்பதால், அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Most Read Articles
English summary
The all-new Chevrolet Beat Activ crossover has unveiled at the 2016 Auto Expo.
Story first published: Tuesday, February 9, 2016, 12:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X