செவர்லே கார்வெட் ஸ்ட்ரிங்ரே ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?

Written By:

செவர்லே கார்வெட் ஸ்ட்ரிங்ரே ஸ்போர்ட்ஸ் கார், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது, இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது.

செவர்லே கார்வெட் ஸ்ட்ரிங்ரே குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

கார்வெட் ஸ்ட்ரிங்ரே பற்றி...

கார்வெட் ஸ்ட்ரிங்ரே பற்றி...

செவர்லே நிறுவனம் சார்பாக உருவாக்கபட்டுள்ள, இந்த 7-வது தலைமுறை ஸ்போர்ட்ஸ் காருக்கு செவர்லே கார்வெட் ஸ்ட்ரிங்ரே என்று பெயரிடபட்டுள்ளது.

இது சமீபத்தில் நடைபெற்ற 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜின் கொள்ளளவு - 6.2 லிட்டர்

இஞ்ஜின் வகை - வி8

பவர் - 6,000 ஆர்பிஎம்களில் 460 பிஹெச்பி

டார்க் - 4,600 ஆர்பிஎம்களில் 624 என்எம்

திறன்;

திறன்;

செவர்லே கார்வெட் ஸ்ட்ரிங்ரே ஸ்போர்ட்ஸ் கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3.7 நொடிகளில் எட்டும் திறன் கொண்டதாகும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

செவர்லே கார்வெட் ஸ்ட்ரிங்ரே ஸ்போர்ட்ஸ் கார், உச்சபட்சமாக மணிக்கு 291 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

செவர்லே கார்வெட் ஸ்ட்ரிங்ரே ஸ்போர்ட்ஸ் கார், 7 - ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 8 - ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

செவர்லே கார்வெட் ஸ்ட்ரிங்ரே ஸ்போர்ட்ஸ் காரின் அனைத்து ஸ்டைலிங் அம்சங்களும் இதன் பெர்ஃபார்மன்ஸ் அதிகரிப்பதற்காக செய்யபடுகிறது.

பெரிய கிரில் ஒன்று, காரின் முன்பக்கத்தில் மிக தாழ்வான நிலையில் பொருத்தபட்டுள்ளது.

ஹெட்லேம்ப்கள்;

ஹெட்லேம்ப்கள்;

செவர்லே கார்வெட் ஸ்ட்ரிங்ரே ஸ்போர்ட்ஸ் காரின் ஹெட்லேம்ப்கள் மிகவும் கூர்மையான தோற்றம் கொண்டுள்ளது. மேலும் இதனோடு எல்இடி டே டைம் ரன்னிங் லைட்கள் ஒருங்கிணைக்கபட்டுள்ளது.

இதன் போனட் செதுக்கபட்டது போல் காட்சியளிக்கிறது. மேலும், வி8 இஞ்ஜினின் அடியில் ஒரு இன் டேக் பொருத்தபட்டுள்ளது.

ரியர்;

ரியர்;

செவர்லே கார்வெட் ஸ்ட்ரிங்ரே ஸ்போர்ட்ஸ் காரின் ரியர் பகுதியின் பூட்-டில் ஒரு சிறிய நகர்த்த முடியாத ஸ்பாய்ளர் உள்ளது.

இதன் ஆங்குலார் டெய்ல்லேம்ப்கள் ஏர் வெண்ட்கள் கொண்டுள்ளது. இந்த அமைப்பு ரியர் பிரேக்களை குளிர்விக்க உதவுகிறது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

செவர்லே கார்வெட் ஸ்ட்ரிங்ரே ஸ்போர்ட்ஸ் காரின் இண்டீரியர் அமைப்பை பொருத்த வரை, அதிக அளவிலான தோல் பொருட்கள் உபயோகிக்கபட்டுள்ளது. இதன் செண்டர் கன்சோல், டச் அடிப்படையிலான இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.

வீலின் பின்னால், ரெவ் கவுண்டரின் ஆதிக்கம் உடைய ஒரு சிறிய டிஎஃப்டி ஸ்கிரீன் உள்ளது. ஸ்பீடோ, இஞ்ஜின் டெம்பரேச்சர் கேஜ், ஃப்யூவல் கேஜ் ஆகிய அனைத்தும் ஆனலாக் அமைப்பு கொண்டுள்ளது.

அறிமுகம்?

அறிமுகம்?

செவர்லே கார்வெட் ஸ்ட்ரிங்ரே ஸ்போர்ட்ஸ் கார், எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் என்பது குறித்து, செவர்லே நிறுவனம் இது வரை எந்த விதமான தகவல்களையும் வெளியிடவில்லை.

போட்டி;

போட்டி;

செவர்லே கார்வெட் ஸ்ட்ரிங்ரே ஸ்போர்ட்ஸ் கார், இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் பட்சத்தில், நிஸான் ஜிடி-ஆர் மற்றும் போர்ஷே 911 மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஷோரூமிற்குள் சூப்பர் காரை மோதிய சேல்ஸ்மேன்... ஜீரணிக்க முடியாத காரணம்!!

விலை மதிப்பில்லா 8 கார்வெட் கார்களை உள்வாங்கிய மெகா பள்ளத்துக்கு வந்த மவுசு!

கார்வெட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Chevrolet Corvette Stingray Sports Car was showcased in India during the recently held 2016 Delhi Auto Expo. Corvette Stingray Sports Car is the seventh generation of the Corvette sports car. Chevrolet has not revealed any information about when this Corvette Stingray could be brought into India for sale.
Story first published: Thursday, February 11, 2016, 16:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark