டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களை கவர்ந்த டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி!

Written By:

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாடல்களில் ஒன்று டட்சன் கோ க்ராஸ். மிக குறைவான விலையில் வரும் எஸ்யூவி வகையறா மாடல் என்பதே இதன் மீதான எதிர்பார்ப்புக்கு காரணம்.

அதனை மெய்ப்பிக்கும் விதத்தில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் டட்சன் கோ க்ராஸ் என்ற மினி எஸ்யூவி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பார்வையாளர்களை கவர்ந்த இந்த காரின் பிரத்யேக படங்களையும், தகவல்களையும் உங்கள் பார்வைக்கும் வழங்குவதில் பெரு மகிழ்வு அடைகிறோம்.

முதல் தரிசனம்

முதல் தரிசனம்

கடந்த ஆண்டு இறுதியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஆட்டோ ஷோவில்தான் முதல்முறையாக டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, தற்போது முதல்முறையாக இந்தியாவில் இந்த கான்செப்ட் கார் காட்சிக்கு வைக்கப்பட்டது.

அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட க்ராஸ்ஓவர் ரக மாடல்தான் டட்சன் கோ க்ராஸ்.

மினி எஸ்யூவி

மினி எஸ்யூவி

இந்த கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, வரிச்சலுகையுடன் மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும்.

டிசைன்

டிசைன்

இதன் டிசைன் மிக அசத்தலாக இருக்கிறது. குறைவான விலை என்றாலும், டிசைனை பொறுத்தவரை பிரமாதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் வாடிக்கையாளர்களை கவர்ந்ததற்கும் காரணம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

புரோஜெக்டர் ஹெட்லைட்ஸ், எல்இடி பகல்நேர விளக்குகள், ஸ்கிட் பிளேட்டுகள், கம்பீரமான அலாய் வீல்கள், பிளாஸ்டிக் பாடி கிளாடிங்குகளுடன் அசத்துகிறது.

உற்பத்தி நிலை

உற்பத்தி நிலை

உற்பத்தி நிலையை எட்டும்போது சிறிய வித்தியாசங்கள் மேற்கொள்ளப்படும்.

இன்டீரியர்

இன்டீரியர்

டட்சன் கோ குடும்பத்தில் உள்ள கார்களின், பல பாகங்களை இந்த காரும் பங்கிட்டுக் கொள்ளும். அதேபோன்று, இன்டீரியரிலும் அதிக ஒற்றுமைகள் இருக்கும் என நம்பலாம்.

உற்பத்தி எப்போது?

உற்பத்தி எப்போது?

இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய கார் உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

சென்னையில் உற்பத்தி

சென்னையில் உற்பத்தி

சென்னையில் உள்ள ரெனோ- நிசான் ஆலையில்தான் இந்த கார் உற்பத்தி செய்யப்படும்.

விலை

விலை

ரூ.4.5 லட்சம் விலையில் டட்சன் கோ க்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு இந்த புதிய மினி எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
Datsun has showcased the Go Cross Concept crossover at their stall at the 2016 Auto Expo.
Story first published: Wednesday, February 10, 2016, 10:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark