இந்தியாவில் ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி90 சொகுசு கார் அறிமுகம் செய்ய வாய்ப்பு!

Written By:

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த மாடல்களில் ஒன்று ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி90 சொகுசு கார். இதுவரை பட்ஜெட் கார் தயாரிப்பாளராக மட்டுமே பார்த்து வந்த ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றொரு முகமாக ஜெனிசிஸ் சொகுசு பிராண்டில் இந்த புதிய ஜி90 சொகுசு கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வந்த பார்வையாளர்களை கவர்ந்தது.

அடுத்த சில ஆண்டுகளில் இந்த ஜெனிசிஸ் பிராண்டு சொகுசு கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவோம் என்று நம்புவதாக ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யங் கீ கூ தெரிவித்துள்ளார். எனவே, இந்த காரின் சிறப்பம்சங்களை கண்டிப்பாக நாம் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. அதற்காக, சில முக்கியத் தகவல்கள் மற்றும் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

அறிமுகம்

அறிமுகம்

கடந்த ஆண்டு நடந்த ஆட்டோகார் பெர்ஃபார்மென்ஸ் ஷோவிலேயே இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்திய வருகைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.

புளூயிடிக் டிசைன்

புளூயிடிக் டிசைன்

ஹூண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்கள் உருவாகிய புளுயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்தில்தான் இந்த புதிய காரும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், சொகுசு கார் மார்க்கெட்டிற்காக டிசைனில் சில கூடுதல் விஷயங்களும் கையாளப்பட்டிருக்கின்றன.

 நடுத்தர வகை

நடுத்தர வகை

சொகுசு கார் மார்க்கெட்டில் நடுத்தர வகை சொகுசு காராக ஜெனிசிஸ் பிராண்டு கார்களை களமிறக்குவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டு இருக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

இந்த காரில் 12.3 இன்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின் இருக்கை பயணிகளின் பொழுதுபோக்கிற்காக 9.2 இன்ச் டேப்லெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளது.

சப்தத் தடுப்பு

சப்தத் தடுப்பு

இந்த காரின் கேபினில் வெளிப்புற சப்தம் மிக குறைவாக இருக்கும் விதத்தில், மிகச் சிறப்பான சப்த தடுப்பு கட்டமைப்பை பெற்றிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி90 காரில் 3.8 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 228 பிஎச்பி பவரையும், 396 என்எம் டார்க்கையும் வழங்கும். டாப் மாடலில் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 307 பிஎச்பி பவரையும், 519 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 டிரைவ் சிஸ்டம்

டிரைவ் சிஸ்டம்

ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி90 காரின் 3.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஹூண்டாய் நிறுவனததின் எச்-ட்ராக் தொழில்நுட்பமும் கொண்டதாக கிடைக்கிறது.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி, ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக் சிஸ்டம், பாதசாரிகள் குறுக்கே வருவதை கண்டறிந்து எச்சரிக்கும் தொழில்நுட்பம், வளைவுகளில் சரியான கோணத்தில் ஒளியை பாய்ச்சும் ஹெட்லைட்ஸ், ஓட்டுனர் அயர்ந்து விடுவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி என பல பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பெற்றிருக்கிறது.

இறக்குமதி

இறக்குமதி

ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி90 கார் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.45 லட்சம் முதல் ரூ.50 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கலாம்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மெர்சிடிஸ் எஸ் க்ளாஸ் போன்ற சொகுசு கார்களுடன் போட்டி போடும்.

 
English summary
Hyundai has unveiled the next-generation Genesis luxury sedan in India.
Story first published: Thursday, February 11, 2016, 11:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark