ஜாகுவார் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் சலூன் காரை, கேட்ரினா கைஃப் இந்தியாவில் அறிமுகம் செய்தார்

Written By:

ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு கார், இந்தியாவில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஜாகுவார் எக்ஸ்இ பற்றி...

ஜாகுவார் எக்ஸ்இ பற்றி...

ஜாகுவார் நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் ஜாகுவார் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் சலூன், மிகவும் எதிர்பார்க்கபட்ட கார்களில் ஒன்றாக திகழ்ந்தது.

இது இந்தியாவில், தற்போது நடைபெறும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது, இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது.

கேட்ரினா கைஃப் மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஈ...

கேட்ரினா கைஃப் மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஈ...

ஜாகுவார் நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் ஜாகுவார் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் சலூன் காருக்கு, முன்னோடி பாலிவுட் நடிகையான கேட்ரினா கைஃப் தான் பிராண்ட் அம்பாஸிடராக உள்ளார்.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நடைபெற்ற ஜாகுவார் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் சலூன் காரின் இந்திய அறிமுக விழாவில், கேட்ரினா கைஃப் பங்கேற்று சிறப்பித்தார்.

இஞ்ஜின் விவரங்கள் - 1;

இஞ்ஜின் விவரங்கள் - 1;

வேரியண்ட் பெயர் ; ஜாகுவார் எக்ஸ்இ ப்யூர்

இஞ்ஜின் கொள்ளளவு - 1999 சிசி

பவர் - 5,500 ஆர்பிஎம்களில் 197 பிஹெச்பி

டார்க் - 1,750 ஆர்பிஎம்களில் 320 என்எம்

இஞ்ஜின் விவரங்கள் - 2;

இஞ்ஜின் விவரங்கள் - 2;

வேரியண்ட் பெயர் ; ஜாகுவார் எக்ஸ்இ போர்ட்ஃபோலியோ

இஞ்ஜின் கொள்ளளவு - 1999 சிசி

பவர் - 5,500 ஆர்பிஎம்களில் 237 பிஹெச்பி

டார்க் - 2,000 - 4,000 ஆர்பிஎம்களில் 340 என்எம்

திறன்;

திறன்;

ஜாகுவார் எக்ஸ்இ ப்யூர் வேரியண்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமிட்டர் வரையிலான வேகத்தை 7.7 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

ஜாகுவார் எக்ஸ்இ போர்ட்ஃபோலியோ வேரியண்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமிட்டர் வரையிலான வேகத்தை 6.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஜாகுவார் எக்ஸ்இ ப்யூர் வேரியண்ட், அதிகப்படியாக மணிக்கு 237 கிலோமிட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

ஜாகுவார் எக்ஸ்இ போர்ட்ஃபோலியோ வேரியண்ட், அதிகப்படியாக மணிக்கு 250 கிலோமிட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஜாகுவார் எக்ஸ்இ ப்யூர் வேரியண்ட், ஒரு லிட்டருக்கு 13.06 கிலோமிட்டர் மைலேஜ் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

ஜாகுவார் எக்ஸ்இ போர்ட்ஃபோலியோ வேரியண்ட், ஒரு லிட்டருக்கு 13.05 கிலோமிட்டர் மைலேஜ் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஜாகுவார் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் சலூனின் 2 இஞ்ஜின் வேரியண்ட்களும், 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

டிசைன் மற்றும் ஸ்டைலிங்;

டிசைன் மற்றும் ஸ்டைலிங்;

ஜாகுவார் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் சலூனின் டிசைனிங்-கிற்கு, இந்நிறுவனத்தின் பிற மாடல்களான எக்ஸ்எஃப் மற்றும் எக்ஸ்ஜே ஆகிய மாடல்களில் இருந்து சில அம்சங்கள் ஏற்கபட்டுள்ளது.

இதன் ஆங்குலார் ஹெட்லேம்ப்களும், பெரிய கிரில்களும் ஜாகுவார் கார்களின் ஹால்மார்க் அம்சங்கள் ஆகும். எக்ஸ்இ காரின் லைன்கள், இந்த காரின் பின்பக்கம் உள்ள சிறிய பூட் லிப் ஸ்பாய்ளர் வரையிலும் நீண்டு உள்ளது.

ரியர்;

ரியர்;

ஜாகுவார் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் சலூனின் ரியர் டெய்ல் லேம்ப்களும் ஆங்குலார் வடிவில் உள்ளது. இந்த அமைப்பு ஜாகுவார் எக்ஸ்இ காருக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.

இதுபோல், பல்வேறு அம்சங்கள் ஒன்று கூடி, யாராலும் எளிதில் கண்டுபிடிக்ககூடிய வகையில் ஜாகுவார் எக்ஸ்இ காம்பேக்ட் ஸ்போர்ட்ஸ் சலூனின் தனித்தன்மையை கூட்டுகிறது.

ஜாகுவார் எக்ஸ்இ சிறப்பம்சங்கள் - 1;

ஜாகுவார் எக்ஸ்இ சிறப்பம்சங்கள் - 1;

(*) இதன் கிளாஸ்ஸில் முதல் முறையாக, அலுமினியம் மோனோகாக் டிசைன்

(*) சொகுசுகள் நிறைந்த சாஃப்ட்-கிரெய்ன் லெதர் இண்டீரியர்

(*) பேனோரமிக் சன்ரூஃப்

(*) மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் உடைய 8 இஞ்ச் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம்

ஜாகுவார் எக்ஸ்இ சிறப்பம்சங்கள் - 2;

ஜாகுவார் எக்ஸ்இ சிறப்பம்சங்கள் - 2;

(*) லோ ஸ்பீட் க்ரூஸ் கண்ட்ரோல் உடைய ஏஎஸ்பிசி (ஆல் சர்ஃபேஸ் பிராக்ரஸ் கண்ட்ரோல்)

(*) டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (டிஎஸ்சி)

(*) 10 வே / 10 வே எலக்ட்ரிக் ஃப்ரண்ட் சீட்கள்

(*) எலக்ட்ரிக் பவர்ட் அசிஸ்டட் ஸ்டீயரிங் (ஈபிஏஎஸ்)

ஜாகுவார் எக்ஸ்இ சிறப்பம்சங்கள் - 3;

ஜாகுவார் எக்ஸ்இ சிறப்பம்சங்கள் - 3;

(*) நேவிகேஷன் சிஸ்டம்

(*) சர்ரவுண்ட் கேமரா சிஸ்டம்

(*) ஜாகுவார் ஸ்மார்ட் கீ சிஸ்டம்

(*) 20.32 செண்டிமீட்டர் கலர் டச்-ஸ்கிரீன் டிஸ்பிளே

போட்டி?

போட்டி?

ஜாகுவார் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் சலூன், மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், ஆடி ஏ4 மற்றும் பிஎம்டபுள்யூ 3-சிரீஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

உற்பத்தி?

உற்பத்தி?

புதிய ஜாகுவார் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் சலூன், மஹாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவில் தயாரிக்கபட உள்ளது.

விற்பனைக்கு அறிமுகம்?

விற்பனைக்கு அறிமுகம்?

புதிய ஜாகுவார் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் சலூன், இந்தியாவில் உள்ள அனைத்து அங்கிகரிக்கபட்ட ஜாகுவார் ரீடெய்ல் விற்பனை மையங்களிலும், ஃபிப்ரவரி இறுதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

ஜாகுவார் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் சலூனின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஜாகுவார் எக்ஸ்இ 2.0 லிட்டர் பெட்ரோல் ப்யூர் - 39.90 லட்சம் ரூபாய்

ஜாகுவார் எக்ஸ்இ 2.0 லிட்டர் பெட்ரோல் போர்ட்ஃபோலியோ - 46.90 லட்சம் ரூபாய்

குறிப்பு; இங்கு குறிப்பிடபட்டுள்ள அனைத்து விலை விவரங்களும் எக்ஸ் ஷோரூம் (டெல்லி) விலைகளாகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஆய்வுப் பணிகளுக்காக புதிய ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு கார் இறக்குமதி

2016 ஜாகுவார் எக்ஸ்ஜே சொகுசு செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ஜாகுவார் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Bollywood Heart throb Katrina Kaif has has launched Jaguar's XE Sports Saloon in India at the 2016 Delhi Auto Expo. Jaguar XE Sports Saloon is availabale in 2 variants namely - Jaguar XE Pure and Jaguar XE Portfolio. All New Jaguar XE is to be locally manufactured in Pune, India. Jaguar XE Sports Saloon would be available for sale from February end.
Story first published: Wednesday, February 10, 2016, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark