சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் பார்வைக்கு அறிமுகப்படுத்திய மஹிந்திரா

By Ravichandran

மஹிந்திராவிற்கு சொந்தமான சாங்யாங் நிறுவனத்தின் தயாரிப்பான டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

அசத்தலான டிசைன் அம்சங்கள், வசதிகளுடன் வரும் புதிய சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

சாங்யாங் டிவோலி

சாங்யாங் டிவோலி

மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான தென் கொரிய துணை நிறுவனமான சாங்யாங் பிராண்டின் கீழ் தான் இந்த டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி தயாரிக்கபடுகிறது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கின்றது.

பெட்ரோல் இஞ்ஜின் விவரங்கள்;

பெட்ரோல் இஞ்ஜின் விவரங்கள்;

இஞ்ஜின் எரிபொருள் வகை - பெட்ரொல்

கொள்ளளவு - 1.6 லிட்டர்

பவர் - 6,000 ஆர்பிஎம்களில் 126 பிஹெச்பி

டார்க் - 4,600 ஆர்பிஎம்களில் 160 என்எம்

டீசல் இஞ்ஜின் விவரங்கள்;

டீசல் இஞ்ஜின் விவரங்கள்;

இஞ்ஜின் எரிபொருள் வகை - டீசல்

கொள்ளளவு - 1.6 லிட்டர்

பவர் - 3,400-4,000 ஆர்பிஎம்களில் 113 பிஹெச்பி

டார்க் - 1,500-2,500 ஆர்பிஎம்களில் 300 என்எம்

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்ட 2 வகையிலான சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவிகளின் இஞ்ஜின்களும், 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின் கொண்ட சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி, ஒரு லிட்டர் டீசலுக்கு 23.2 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

முகப்பு டிசைன்;

முகப்பு டிசைன்;

சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி, முன்புறத்தில், பகல்நேர ரன்னிங் எல்ஈடி விளக்குகளுடன் ஒருங்கிணைக்கபட்ட ஹெட்லேம்ப்கள், மெலிதான கிரில் அமைப்பு மற்றும் பெரிய ஏர் டேம் பகுதியை கொண்டுள்ளது.

இவற்றுடன் காண்கையில், இது மிகவும் கூர்மையான தோற்றம் கொண்டுள்ள எஸ்யூவியாக காட்சியளிக்கிறது.

பக்கவாட்டுத் தோற்றம்;

பக்கவாட்டுத் தோற்றம்;

சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி, பக்கவாட்டுப் பகுதியில் வீல் ஆர்ச்கள் மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொண்டுள்ளது.

பின் பகுதியில், வளைந்த அமைப்புடைய டெய்ல் லேம்ப்கள் உள்ளன.

இண்டீரியர்;

இண்டீரியர்;

சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவியின் இண்டீரியர் பிரிமியமாக இருக்கும். இதில், வெப்பப்படுத்தும் வசதியுடன் கூடிய லெதர் இருக்கைகளை கொண்டுள்ளது. இந்த லெதர் இருக்கைகள் கருப்பு, சிவப்பு மற்றும் பீஜ் ஆகிய 3 வண்ணங்களின் தேர்வுகளில் கிடைக்கின்றது.

இதோடு மட்டுமல்லாமல், இதன் இண்டீரியரில், 3.5 அளவிலான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

ஏபிஎஸ், ஈஎஸ்பி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 7 ஏர்பேக்குகள் ஆகிய பாதுகாப்பு வசதிகள், இந்த சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவியில் உள்ளது.

போட்டி;

போட்டி;

சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி, இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்?

அறிமுகம்?

சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி, இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யபடும் என்பது குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களையும் மஹிந்திரா நிறுவனம் இது வரை வெளியிடவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டம்!

சாங்யாங் டிவோலி எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது

சாங்யாங் டிவோலி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் மஹிந்திரா!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Mahindra's South Korean subsidiary Ssangyong showcased their Tivoli SUV at the 2016 Delhi Auto Expo. Ssangyong Tivoli Compact SUV is available in both Petrol and Diesel Engine options. Mahindra has not revealed any official information as to when the Tivoli is coming to India.It has lots of safety features like 7 airbags, ABS, ESP and Tyre Pressure Monitoring system.
Story first published: Monday, February 15, 2016, 20:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X