மஹிந்திரா ஜென்ஸீ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

By Ravichandran

மஹிந்திரா நிறுவனம், தங்களின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிமுகம் செய்யபட உள்ளது.

மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ள இந்த புதிய ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஜென்ஸீ பற்றி...

ஜென்ஸீ பற்றி...

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், இந்தியாவில் ‘ஜென்ஸீ' என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யபடுகிறது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது, இந்த ஜென்ஸீ ஸ்கூட்டர் பொதுமக்கள் காணும் வகையில் அறிமுகம் செய்து வைக்கபட உள்ளது.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

ஜென்ஸீ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ரேஞ்ச் எஸ்டிமேஷன் (மதிப்பீடு), ரிமோட் டையக்னாஸ்டிக்ஸ், திருட்டு அல்லது மன அழுத்தம் தொடர்பான சமிஞ்சைகளை வழங்கும் திறன் கொண்டுள்ளது.

நிலைத்திருக்கக்கூடிய மாற்று;

நிலைத்திருக்கக்கூடிய மாற்று;

மஹிந்திரா ஜென்ஸீ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், மிகவும் திறன் மிக்கதாகவும், உபயோகிப்பதற்கு எளிமையானதாக இருக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.

மேலும், இது குறுகிய தூர போக்குவரத்துகளுக்கு, நிலைத்திருக்கக்கூடிய மாற்றாக விளங்குகிறது.

பேட்டரி பற்றி...

பேட்டரி பற்றி...

மஹிந்திரா ஜென்ஸீ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், அவிழ்த்து மாட்டக்கூடிய வகையிலான லித்தியம்-இயான் பேட்டரி கொண்டுள்ளது.

இதனால், இந்த பேட்டரியை எங்கு வேண்டுமானாலும் இருக்கும் ஸ்டாண்டர்ட் மின்சார அவுட்லெட்-டில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதனால், இந்த ஸ்கூட்டரை மேலும் சுலபமாகவும், கவலையின்றி சுதந்திரமாக உபயோகிக்க முடியும்.

டிசைன்;

டிசைன்;

மஹிந்திரா ஜென்ஸீ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், அலுமியத்தால் ஆன வெளிப்புற உடற்கூட்-டை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

மேலும், இது பொருட்களை தேக்கி வைத்து கொள்ளும் வகையில், பின் புறத்தில் பெரிய கூடை போன்ற அமைப்பு கொண்டுள்ளது. ஜென்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் உகந்த சவாரி தரத்தையும், பெரிய முன் சக்கர கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.

விலை;

விலை;

மஹிந்திரா ஜென்ஸீ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இது வரை வெளியிடப்படவில்லை.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபடும் போது, இதன் விலை குறித்த தகவல்கள் வெளியாகலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மஹிந்திரா ஜென்ஸீ 2.0 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம்!

அமெரிக்காவில் மட்டுமல்ல... இந்தியாவில் ஜென்ஸீயை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம்

அமெரிக்காவில் அறிமுகமான மஹிந்திரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Mahindra & Mahindra has planned to launch their new all-electric scooter named GenZe, in India. The new scooter is to be introduced to the public also at the 2016 Delhi auto expo. Mahindra GenZe Electric Scooter is equipped with a removable lithium-ion battery, which can be recharged at any standard electrical outlets.
Story first published: Wednesday, January 27, 2016, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X