மிரட்டலான மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் விரைவில்...

Written By:

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட்டை, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்த மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எந்த ஒரு வாகனமும் அதிக அளவில் விற்பனையாவதற்கு, அதன் டிசைன் மிக முக்கிய அம்சமாக விளங்குவதை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் உணர்ந்துள்ளது. இதனால், மஹிந்திரா நிறுவனம் அதன் வாகனங்களின் டிசைன் மொழிகளில் இனி அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.

'எங்கள் நிறுவனத்தின் ஒரு சில மாடல்கள் அவற்றின் டிசைன் அம்சங்களினால் ஷோபிக்காமல் போய்விட்டது. இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது சற்று கூடுதலாக ஆரவாரமான மற்றும் அதிரடியான அம்சங்களை எதிர்பார்க்கின்றனர். எனவே டிசைன் விஷயத்தில் நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம்' என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி பவன் கோயன்கா தெரிவித்தார்.

மஹிந்திரா குழுமம் சமீபத்தில் தான், பினின்ஃபரினா என்ற சர்வதேச அளவிலான டிசைன் நிறுவனத்தை கையகபடுத்தியது. இந்த டிசைன் நிறுவனம், ஃபெர்ராரி போன்ற சூப்பர் கார்களின் வடிவமைப்பில் மிக முக்கிய பங்கு ஆற்றியுள்ளது.

mahindra-to-showcase-xuv-aero-concept-at-the-2016-delhi-auto-expo

இந்த எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட், மஹிந்திரா நிறுவனம் சார்பாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட உள்ள 20 முக்கிய மாடல்களில் மிகுந்த முக்கியத்துவத்துடன் காட்சிபடுத்தபடும்.

எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் காரின் டிசைன் முறைகளை எடுத்து உரைக்கும் வகையில், ஆட்டோ எக்ஸ்போ நிகழும் பகுதியிலேயே ஒரு டிசைன் ஸ்டூடியோவை அமைக்க மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது விசேஷ செய்தியாகும்.

நம் நாட்டை சேர்ந்த மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட்டின் மிரட்டும் மற்றும் அதிசயிக்க வைக்கும் டிசைன் அம்சங்கள் பிரமிக்கவைக்கிறது.

English summary
Mahindra & Mahindra is showcasing their XUV Aero concept at the upcoming 2016 Delhi Auto Expo. The XUV Aero would be displayed among the 20 vehicles on display in the 2016 Delhi Auto Expo. Just for the sake of highlighting the design process behind the XUV Aero concept, Mahindra & Mahindra has set up a design studio right at the Auto Expo venue.
Story first published: Saturday, January 30, 2016, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark