மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் ஹேட்ச்பேக் கார், விரைவில் அறிமுகம்

Written By:

மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட உள்ளது.

விரைவில் காட்சிபடுத்தபட உள்ள, மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடர்களில் தெர்ந்து கொள்ளலாம்.

பலேனோ ஆர்எஸ் பற்றி...

பலேனோ ஆர்எஸ் பற்றி...

மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் ஹேட்ச்பேக் கார், மேலும் ஸ்போர்ட்டியாக மாற்றும் வகையில், பல்வேறு புதிய பாகங்கள் சேர்க்கபட உள்ளது.

மாருதி நிறுவனம், இந்த ஆர்எஸ் கான்செப்ட் காரை வருங்காலங்களில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் ஹேட்ச்பேக், டர்போசார்ஜர் உடைய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதே போன்ற இஞ்ஜின், ஐகே-2 கான்செப்ட் வாகனத்தை இயக்க உதவி கொண்டிருந்தது, 2015 ஜெனிவா மோட்டார் ஷோ-வில் காட்சிபடுத்தபட்ட போது காணபட்டது.

இதில் உள்ள பூஸ்டர் இஞ்ஜின், இந்த பெர்ஃபார்மன்ஸ் ஹேட்ச்பேக்-கை 110 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் வகையில் ட்யூன் செய்யபட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

உற்பத்திக்கு தயாராக உள்ள நிலையில் உள்ள புதிய மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் ஹேட்ச்பேக்-கே காட்சிபடுத்தபடலாம் என எதிர்பார்க்கலாம்.

டிசைன் பொருத்தவரை, இந்த பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் காருக்கு பெரிய மற்றும் ஏரோ டைனமிக் பாடி கிட்-டை மாருதி நிறுவனம் வழங்கலாம். ஸ்போர்ட்டியான உணர்வு வழங்கும் வகையில், இந்த பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் காருக்கு ஒரு ஏரோடைனமிக் ரியர் ஸ்பாய்ளர் சேர்க்கபட அதிக வாய்ப்புகள் உள்ளது.

அறிமுக தேதி;

அறிமுக தேதி;

இது வரை, இந்த புதிய மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் எப்போது அறிமுகம் செய்யபடலாம் என்பது குறித்து மாருதி சுஸுகி நிறுவனம் எந்த விதமான தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

இந்த மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் அறிமுகம் செய்யபடும் நிலையில், அபார்த் புண்டோ, ஹோண்டா ஜாஸ் ஆர்எஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி பெர்ஃபார்மன்ஸ் ஹேட்ச்பேக் ஆகிய கார்களுடன் போட்டி போட வேண்டியதாக இருக்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி...

ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி...

சில நாட்களில் நிகழும் இருக்கும் மாருதி சுஸுகி நிறுவனம், தங்கள் நிறுவனம் சார்பாக விரைவில் அறிமுகம் செய்யபட உள்ள ஏராளமான தயாரிப்புகளை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது காட்சி படுத்தபட உள்ளது.

இந்திய அறிமுகங்கள்;

இந்திய அறிமுகங்கள்;

மாருதி சுஸுகி நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் இக்னிஸ் மினி எஸ்யூவி, விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, மற்றும் மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் ஆகிய மாடல்களின் இந்திய அறிமுகங்கள் விரைவில் நடைபெற உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அட்வான்ஸ் புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி பலேனோ காரின் வெற்றிக்கான காரணங்கள்!

மாருதி பலேனோ காரின் எஞ்சின், மைலேஜ், வசதிகள் விபரம்!

மாருதி பலேனோ காரின் புதிய படங்கள் மற்றும் கூடுதல் விஷயங்கள்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Maruti Suzuki would showcase its Baleno RS Concept at the 2016 Delhi Auto Expo. This Baleno RS Concept would receive several new components to make this hatchback sportier. Maruti Suzuki would introduce the RS version later. Baleno RS would compete with Abarth Punto, Honda Jazz RS, and Volkswagen Polo GT performance hatchbacks after Launch.
Story first published: Saturday, January 30, 2016, 10:26 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark