மாருதி சுஸுகி இக்னிஸ் கான்செப்ட் கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது

By Ravichandran

மாருதி நிறுவனம், தங்களின் இக்னிஸ் கான்செப்ட் காரை, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தியது.

இக்னிஸ் கான்செப்ட் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

மாருதி இக்னிஸ் கான்செப்ட் பற்றி...

மாருதி இக்னிஸ் கான்செப்ட் பற்றி...

மாருதி நிறுவனம் சார்பாக உருவாக்கபடும் மாருதி இக்னிஸ் கான்செப்ட் கார், முதன் முதலாக 2015 டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தபட்டது.

இக்னிஸ் கான்செப்ட் கார், காம்பாக்ட் க்ராஸ்ஓவர் செக்மண்ட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

மாருதி இக்னிஸ் கான்செப்ட் கார், பெட்ரோ இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய இரு தேர்வுகளில் கிடைக்க உள்ளது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

மாருதி இக்னிஸ் கான்செப்ட் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 6000 ஆர்பிஎம்-களில் 83 பிஹெச்பியையும், 4000 ஆர்பிஎம்களில் 115 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின் ஒரு லிட்டருக்கு 20.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையில் எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

மாருதி இக்னிஸ் கான்செப்ட் காரின் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின், ஃபியட் நிறுவனத்திடம் இருந்து பெறப்படுகிறது. இந்த இஞ்ஜின் 4000 ஆர்பிஎம்களில் 74 பிஹெச்பியையும், 2000 ஆர்பிஎம்களில் 190 என்எம் டார்க்கையும் வெளிபடுத்துகிறது.

இந்த இஞ்ஜின் ஒரு லிட்டருக்கு 25.2 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையில் எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, இந்த இக்னிஸ் கார், 2015 ஜெனிவா மோட்டார் ஷோசில் காணப்பட்ட சுஸுகி ஐஎம்-4 கான்செப்ட்-டை அடிப்படையாக கொண்டுள்ளது.

இக்னிஸ் காரின் முன்பக்கத்தில் உள்ள, பாக்ஸியான எஸ்யூவி போன்ற தோற்றம், வழக்கமான சிறிய எஸ்யூவி போன்றே காட்சி அளிக்கலாம். ஆனால், ரியரில் இதன் டிசைன் மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது.

இதன் பின் புற ஜன்னல் மேலிருந்து கீழே உள்ள பூட் லிட் வரை கூரான கோணத்தில் நீண்டு கொண்டே இருப்பது போல காட்சியளிக்கிறது.

அறிமுகம்?

அறிமுகம்?

இந்த மாருதி இக்னிஸ் கான்செப்ட் கார், வரும் தசரா அல்லது தீபாவளி பண்டிகைகாலங்களின் போது, நெக்ஸா ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

போட்டி;

போட்டி;

மாருதி இக்னிஸ் கான்செப்ட் கார், மஹிந்திரா கேயூவி100 மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆகிய கார்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை?

விலை?

மாருதி இக்னிஸ் கான்செப்ட் கார், 4 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி இக்னிஸ் காரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

சுஸுகி இக்னிஸ் காரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

மாருதியின் மினி எஸ்யூவியின் வருகை குறித்த தகவல்கள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Maruti Suzuki showcased their Ignis Concept at the 2016 Delhi Auto Expo. By this Ignis Concept, Maruti Suzuki would Ignite Compact Crossover Segment. Maruti Suzuki first showcased the Ignis Concept at the 2015 Tokyo Auto Show. Maruti Suzuki Ignis is expected to be launched in the price tag between Rs. 4–6 lakhs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X