அடடா, புதிய மாருதி விட்டார பிரெஸ்ஸா அசத்தது போங்கோ!

Written By:

தலைப்பில் கூறியிருப்பது போலவே ரொம்பவே கலக்கலாகத்தான் இருக்கிறது புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி. இதன் இரட்டை வண்ணக் கலவை, கஸ்டமைஸ் மாடலைப் போன்று மிக கவர்ச்சியாக இருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்களை இந்த புதிய இரட்டை வண்ணக் கலவை வெகுவாகவே கவரும். இந்த காரின் பிரத்யேக படங்களை கேலரியில் பார்க்கலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி

தோற்றம், வசதிகளிலும் நிறைவாக இருப்பதால், ஹூண்டாய் க்ரெட்டா மீதான கவனத்தை சற்றே குறைக்கும் என்று கூறலாம். எனவே, இந்த புதிய மாருதி மாடல், நிச்சயம் ஒரு ரவுண்டு வருவது உறுதியாகியிருக்கிறது. வழக்கம்போல் மிக சவாலான விலையில் இந்த புதிய எஸ்யூவியை மாருதி களமிறக்கும் என்பதால், இப்போதே டவுண்ட் பேமன்ட்டை தயார் செய்யத் துவங்கியிருப்பவர்களுக்காக, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் பிரத்யேக படங்களை வாசகர்களின் கண்களுக்கு விருந்தாக்குகிறோம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா டீசல் மாடலில் மட்டுமே வர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் சியாஸ் கார் போன்றே ஹைபிரிட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருப்பதால், எஸ்யூவி செக்மென்ட்டில் சிறப்பான மைலேஜ் தரும் மாடலாக இருக்கும். பெட்ரோல் மாடல் இல்லாதது சற்று ஏமாற்றம்தான். ஏனெனில், பெட்ரோல் மாடலை விரும்புவோர்க்கும், சற்று குறைவான பட்ஜெட் திட்டத்தை வைத்திருப்போர், இந்த எஸ்யூவியை வாங்கும் வாய்ப்பை இழக்க வேண்டியிருக்கும்.

அதேநேரத்தில், பெட்ரோல் மாடலிலும் பிரெஸ்ஸாவை தயாரிக்க இருக்கிறது மாருதி. ஆனால், அவை ஏற்றுமதிக்கு மட்டும்தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஸ்யூவியில் பல நவீன தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் என்பதுடன், அவர்களது பயணத்தையும், ஓட்டுதல் அனுபவத்தையும் புதிய கோணத்தில் கொண்டு செல்லும் மாருதி காராக இது இருக்கும் என நம்பலாம்.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா - முழு விபரம்

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X