மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 எஸ்யூவி, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?

By Ravichandran

மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸலைடரில் தெரிந்து கொள்வோம்.

ஜிஎல்சி எஸ்யூவி பற்றி...

ஜிஎல்சி எஸ்யூவி பற்றி...

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, மெர்சிடிஸ் போர்ட்ஃபோலியோவில் உள்ள ஜிஎல்கே மாடலுக்கு மாற்றாக விளங்க உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஜெர்மானிய கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ், தங்களின் ஜிஎல்சி 300 4 -மேட்டிக் எஸ்யூவி வேரியண்ட்டை தங்களின் ஸ்டாலில் காட்சிபடுத்தினர்.

இஞ்ஜின் கான்ஃபிகரேஷன் மற்றும் ஃப்யூவல் வகை - ட்வின்-டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் (ஜிஎல்சி 300 4 -மேட்டிக்)

கொள்ளளவு - 2.0 லிட்டர்

பவர் - 5,500 ஆர்பிஎம்களில் 240 பிஹெச்பி

டார்க் - 1,300 ஆர்பிஎம்களில் 370 என்எம்

கியர்பாகஸ்;

கியர்பாகஸ்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 4 -மேட்டிக் எஸ்யூவியின் இஞ்ஜின், 9-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இதன் மூலமாக தான், இந்த எஸ்யூவியின் அனைத்து வீல்களுக்கும் பவர் செலுத்தபடுகிறது.

இதோடு மட்டுமல்லாமல், கியர்களை மாற்றுவதற்கு பேடல் ஷிஃப்டர்களை பயன்படுத்தி கொள்ளும் வசதியும் வழங்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 4 -மேட்டிக் எஸ்யூவி, ஒரு லிட்டருக்கு 10.2 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 4 -மேட்டிக் எஸ்யூவியின் பல்வேறு ஸ்டைலிங் அம்சங்கள், அது அதிகமாக தொடர்புள்ள மெர்சிடிஸ் சி-கிளாஸ் மாடலிடம் இருந்து பெறபட்டுள்ளது.

இது, இதன் ஹெட்லேம்ப்கள் மற்றும் டெய்ல்லேம்ப்களின் மூலம் உறுதியாகிறது.

ஃப்ரண்ட்;

ஃப்ரண்ட்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 4 -மேட்டிக் எஸ்யூவியின் ஃப்ரண்ட் பகுதி, செண்டரில் உள்ள 3-பாயிண்டட் ஸ்டார் உடைய 2-ஸ்லாட் கிரில் கொண்டுள்ளது.

இதன் 2 பக்கங்களிலும், ஆங்குலார் ஹெட்லேம்ப்களுடன் ஒறுங்கிணைக்கபட்ட டே-டைம் ரன்னிங் எல்ஈடி லைட்கள் உள்ளது.

சைட் தோற்றம்;

சைட் தோற்றம்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 4 -மேட்டிக் எஸ்யூவியின், பக்கவாட்டில் வீல் ஆர்ச்கள் உள்ளது. இதன் டெய்ல்லேம்ப்களும் எல்ஈடி விளக்குகளால் ஆனதாகும்.

மேலும், இதன் கிராபிக்ஸ்களும், சி-கிளாஸ் மாடலில் இருந்து எடுக்கபட்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 4 -மேட்டிக் எஸ்யூவியின் இண்டீரியர்கள், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. இது டேஷ்போர்ட் மீது மிதப்பது போல் காட்சியளிக்கிறது.

மேலும், அங்கும் இங்கும் பரவலாக லெதர் மற்றும் வுட்டன் இன்சர்ட்கள் காணப்படுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்:

பாதுகாப்பு அம்சங்கள்:

மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 4 -மேட்டிக் எஸ்யூவி, ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ஹில் அசிஸ்ட் மற்றும் ஏராளமான ஏர்பேக்குகள் ஆகிய வசதிகளுடன் வழங்கபடுகிறது.

போட்டி;

போட்டி;

மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 4 -மேட்டிக் எஸ்யூவி, பிஎம்டபுள்யூ எக்ஸ்3 மற்றும் ஆடி க்யூ5 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்?

அறிமுகம்?

மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 4 -மேட்டிக் எஸ்யூவி, இந்த ஆண்டின் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யபட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ-450 ஏஎம்ஜி கார் விற்பனைக்கு வந்தது!

அதிகம் திருடுபோகும் கார்களும், திருட்டிலிருந்து கார்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளும்!

மிக நீளமான மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு பஸ் அறிமுகம்... கேபிஎன் டிராவல்ஸுக்கு முதல் பஸ்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Mercedes has unveiled their GLC SUV at the 2016 Delhi Auto Expo. This GLC would soon replaces the GLK in the Mercedes SUV portfolio. The GLC has lots of safety features like ABS with EBD, Hill assist along with multiple airbags. The Mercedes GLC would be launched in India later this year. This may compete with BMW X3 and the Audi Q5.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X