மெர்சிடிஸ் ஏஎம்ஜி டபுள்யூ04 எஃப்1 ரேஸ் கார், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்

By Ravichandran

மெர்சிடிஸ் நிறுவனத்தின் மெர்சிடிஸ் ஏஎம்ஜி டபுள்யூ04 எஃப்1 ரேஸ் கார், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி டபுள்யூ04 ரேஸ் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

ஏஎம்ஜி டபுள்யூ04 பற்றி...

ஏஎம்ஜி டபுள்யூ04 பற்றி...

மெர்சிடிஸ் டபுள்யூ04 எஃப்1 ரேஸ் கார் தான், 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஃபார்முலா 1 சீசனின் போது லூயிஸ் ஹேமில்டன் மூலம் இயக்கபட்ட கார் ஆகும்.

2013-ஆம் ஆண்டில் தான், இந்தியாவில் ஃபார்முலா 1 தொடர் கடைசியாக இந்தியாவில் நடத்தபட்டது என்பது குறிப்பிடதக்கது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மெர்சிடிஸ் டபுள்யூ04 எஃப்1 ரேஸ் கார், 2.4 லிட்டர் வி8 இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், கேஇஆர்எஸ் சிஸ்டத்தின் உதவியுடன் 830 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த டபுள்யூ04 எஃப்1 ரேஸ் கார் தான், மெர்சிடிஸ் நிறுவனம் சார்பாக, எஃப்1-ன் வி8 காலகட்டத்தில் தயாரிக்கபட்ட கடைசி கார் ஆகும்.

சேஸி;

சேஸி;

மெர்சிடிஸ் டபுள்யூ04 எஃப்1 ரேஸ் காரின் சேஸி, மோல்டட் கார்பன் ஃபைபர் காம்போஸிட் மோனோகாக் ஆகும். இது ஃப்ரண்ட் மற்றும் சைட் இம்பேக்ட் ஸ்ட்ரக்சர்களை உள்ளடக்கியதாக உள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன் பொருத்த வரை, இந்த மெர்சிடிஸ் டபுள்யூ04 எஃப்1 ரேஸ் காரின் முன் பக்க சஸ்பென்ஷன் புஷ்ராட் வெரைய்டியாகவும், இதன் பின் பக்க சஸ்பென்ஷன் புல்ராட் வகையாகவும் உள்ளது.

சிறப்பம்சம்;

சிறப்பம்சம்;

2013-ஆம் ஆண்டின் எஃப்1 கன்ஸ்ட்ரக்டர்ஸ் சேம்பியன்ஷிப் போட்டி, மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெட்ரோனாஸ் 2-வது இடத்தை அடைவதற்கு, இந்த மெர்சிடிஸ் டபுள்யூ04 பெரிய வகையில் உதவிகரமாக இருந்தது.

Most Read Articles
English summary
Mercedes showcased their W04 F1 race car at the 2016 Delhi Auto Expo. This Mercedes AMG W04 F1 race car was driven by Lewis Hamilton in the 2013 season of Formula One. This was also the last season, when F1 came to India. This W04 is also the last of the F1 cars, which Mercedes produced in the V8 era of F1.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X