டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகமான புதிய கார்கள்!

Written By:

இதுவரை இல்லாத அளவு மிக பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் இனிதே நடந்தது இந்த மாத துவக்கத்தில் நடந்த டெல்லி சர்வதேச வாகன கண்காட்சி. கிட்டத்தட்ட 80க்கும் அதிகமான புதிய மாடல்கள் இந்த ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக பொது பார்வைக்கு வந்தன. இருப்பினும், எதிர்பார்த்த கார் மாடல்கள் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டாலும், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. இது சற்று ஏமாற்றத்தை தந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக சில புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அதன் விபரங்களையும், அதன் முழுமையான விபரங்களை தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புடனும் இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

ஃபியட் புன்ட்டோ ப்யூர்

ஃபியட் புன்ட்டோ ப்யூர்

பழைய புன்ட்டோ காரை புன்ட்டோ ப்யூர் என பெயரிட்டு மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது ஃபியட் கார் நிறுவனம். இந்த காரில் 67 பிஎச்பி பவரை அளிக்க வல்ல, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 75 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் ஆப்ஷனுடன் விற்பனைக்கு வந்துள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

ஃபியட் புன்ட்டோ ப்யூர் காரின் பெட்ரோல் மாடல் ரூ.4.49 லட்சம் விலையிலும், டீசல் மாடல் ரூ.5.59 லட்சம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

முழு விபரங்களுக்கு க்ளிக் செய்க.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ் 1

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ் 1

பல்வேறு நவீன அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 க்ராஸ்ஓவர் ரக சொகுசு கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த புதிய மாடலை அறிமுகம் செய்தார்.

விலை விபரம்

விலை விபரம்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 சொகுசு கார் ரூ.29.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கார் பற்றி முழுமையான விபரங்களை எமது பிரத்யேக செய்தித் தொகுப்பில் சென்று படிக்க க்ளிக் செய்க.

03. ஆடி ஆர்8 வி10 ப்ளஸ்

03. ஆடி ஆர்8 வி10 ப்ளஸ்

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் ஸ்போர்ட்ஸ் ரக காரை நட்சத்திர கிரிக்கெட் ஆட்டக்காரர் விராட் கோஹ்லி மற்றும் நடிகை அலியா பட் ஆகியோர் விற்பனைக்கு அறிமுகம் செய்தனர். விராட் கோஹ்லி ஒரு ஆடி கார் பிரியர் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்ததே. எனவே, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஆடி காரை அறிமுகம் செய்ய பறந்து வந்துவிட்டார்.

விலை விபரம்

விலை விபரம்

இந்தியாவில் புதிய ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் மாடல் ரூ.2.47 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த காரின் முழுமையான விபரங்களை படிப்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

04. புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

04. புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆஸ்தான விளம்பர தூதரும், கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படுபவருமான சச்சின் டெண்டுல்கர்தான் இந்த சொகுசு காரையும் அறிமுகம் செய்தார். மிக மிக சொகுசான வசதிகளை வழங்கும் இந்த கார் பல்வேறு சிறப்பம்சங்களையும், தாராள இடவசதியையும் கொண்டது.

விலை விபரம்

விலை விபரம்

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் சில வேரியண்ட்டுகள் இறக்குமதி செய்தும், சில வேரியண்ட்டுகள் சென்னையிலுள்ள ஆலையில் அசெம்பிள் செய்தும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த கார் ரூ.1.11 கோடி ஆரம்ப விலையிலிருந்து விற்பனைக்கு கிடைக்கும்.

முழு விபரங்களுக்கு க்ளிக் செய்க.

 05. ஆடி ஏ8எல் செக்யூரிட்டி

05. ஆடி ஏ8எல் செக்யூரிட்டி

ஆடி நிறுவனத்தின் குண்டு துளைக்காத கார் மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரகசிய அறையில் வைத்து தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் காட்டப்பட்டது. ஆடி ஏ8எல் காரின் அடிப்படையிலான இந்த குண்டு துளைக்காத கார் விவிஐபி,,களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.

விலை விபரம்

விலை விபரம்

ரூ.9.12 கோடி விலையில் ஆடி ஏ8எல் செக்யூரிட்டி கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் பல சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 06. ஜாகுவார் எக்ஸ்இ கார்

06. ஜாகுவார் எக்ஸ்இ கார்

மிகவும் பிரிமியம் மாடல்களை விற்பனை செய்து வரும் இங்கிலாந்தை சேரந்த ஜாகுவார் கார் நிறுவனம், தற்போது கீழே இறங்கி அடிக்க ஆரம்பித்துள்ளது. அதாவது, ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் நிறுவனங்களின் நடுத்தர வகை மாடல்களுக்கு நேரடி போட்டியை தரக்கூடிய புதிய சொகுசு காரான எக்ஸ்இ என்ற புதிய மாடலை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃப் இந்த புதிய காரை அறிமுகம் செய்தார்.

விலை விபரம்

விலை விபரம்

அருமையான வடிவமைப்பு, வசதிகள் என வசீகரிக்கும் புதிய ஜாகுவார் எக்ஸ்இ கார் ரூ.39.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அழகிய சொகுசு காரின் கூடுதல் சிறப்பம்சங்களை படிப்பதற்கு கீழே உள்ள செய்தி இணைப்பை சொடுக்கவும்.

புதிய ஜாகுவார் எக்ஸ்இ காரின் முழு விபரம்

 
English summary
Here’s a list of cars that were launched during the Auto Expo 2016
Story first published: Saturday, February 20, 2016, 11:21 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark