புதிய டொயோட்டா இன்னோவா, இந்தியாவில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

Written By:

புதிய டொயோட்டா இன்னோவா காரின் இந்திய அறிமுகம் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நடைபெற உள்ளது.

டொயோட்டா நிறுவனம் சார்பாக அறிமுகம் செய்யபட்ட தயாரிப்புகளில், டொயோட்டா இன்னோவா தான் அதிக அளவில் விற்பனையாகும் காராக உள்ளது. முதன் முதலாக 2009-ல் அறிமுகம் செய்யபட்ட இந்த எம்பிவி அல்லது மல்டி-பர்பஸ் வெஹிகிள் என அழைக்கபடும் காருக்கு தொடர்ந்து சில மேம்பாடுகள் செய்யபட்டு வருகிறது.

new-toyota-innova-indian-debuts-2016-delhi-auto-expo

எப்போது அறிமுகம்?

2016-ஆம் ஆண்டிற்காக, டொயோட்டா இன்னோவா-வை சீர்திருத்தி பிரீமியம் மற்றும் உயர் சந்தை தோற்றத்தை வழங்க டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மிகவும் எதிர்பார்க்கபட்ட தயாரிப்புகளில் ஒன்றான புதிய டொயோட்டா இன்னோவா எம்பிவி காரின் அறிமுகம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட உள்ளது. எனினும், இதன் அறிமுகம் தொடர்பான எந்த விதமான தெளிவான தகவல்களும் உறுதிபடுத்த படவில்லை.

இஞ்ஜின்;

புதிய டொயோட்டா இன்னோவா, 2.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆகிய தேர்வுகளுக்கு இடையே தங்களுக்கு பிடித்த தேர்வை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ள இதன் புதிய டீசல் இஞ்ஜின், 147 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 342.25 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இண்டீரியர், எக்ஸ்டீரியர்;

இந்த ஆண்டில் அறிமுகம் செய்யபட உள்ள 2016 புதிய டொயோட்டா இன்னோவா எம்பிவி-யின் இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைன்கள் மேம்படுத்தி வழங்கபட உள்ளது.

இதன் கேபின் பகுதிக்கு தான் அதிகபடியான மாறுதல்கள் செய்யபட்டு, கூடுதலான பிரிமியம் தோற்றம் வழங்கபட உள்ளது. 2016 புதிய டொயோட்டா இன்னோவா எம்பிவி-யின் இன்னும் ஸ்போர்ட்டியான மற்றும் நேர்த்தியான முறையில் மாற்றியமைக்கபட உள்ளது.

எதிர்பார்க்கபடும் விலை;

தற்போதைய தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவி-யின் பேஸ் வேரியண்ட், 10.48 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (மும்பை) விலையிலும், இதன் டாப்-எண்ட் வேரியண்ட், 16.01 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (மும்பை) விலையிலும் விற்கபடுகிறது. புதிய 2016 டொயோட்டா இன்னோவா-வின் விலை சற்று கூடுதலான விலையில் விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

English summary
New Toyota Innova is all set for its Indian Debut at the 2016 Delhi Auto Expo. The Innova is the Toyota's best-selling product in the Indian market, since its initial launch in the year 2009. For the year 2016, Toyota has planned to overhaul the Innova with premium and upmarket aura.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X