ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

By Saravana

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் புதுப்பொலிவு பெற்ற மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. சிறிய டிசைன் மாற்றங்களுடன், போட்டியாளர்களால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை குறைப்பதற்காக, புதிய டஸ்ட்டர் ஏஎம்டி மாடலிலும் விற்பனைக்கு வருகிறது. இந்த புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பிரத்யேக படங்கள் மற்றும் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஹெட்லைட், முகப்பு க்ரில் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முன்புற பம்பர் டிசைன் மாற்றப்பட்டிருப்பதுடன், புதிய பனி விளக்குகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எல்இடி டெயில் லைட்டுகள், புதிய அலாய் வீல்களுடன், புதிய ரூஃப் ரெயில்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பின்புற பம்பரிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளுத.

தற்போது இன்டீரியர் க்ரிம்சன் பிளாக் தீம் என்ற கருப்பு நிற ஃபினிஷிங் செய்யபப்பட்டிருக்கிறது. செடர்வுட் பிளாக் தீம் என்ற மற்றொரு இன்டீரியர் அலங்காரத்தையும் ஆப்ஷனலாக தேர்வு செய்து கொள்ளலாம். புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி ஆகியவற்றுடன் கூடிய புதிய சென்டர் கன்சோல் இடம்பெற்றுள்ளது.

எஞ்சினில் மாற்றம் இல்லை. 103 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் புதிய மாடலிலும் இடம்பெறுகிறது. அதேபோன்று, 84 பிஎச்பி பவர் மற்றும் 109 பிஎச்பி பவர் என இரு விதமான ட்யூனிங்கில் டீசல் எஞ்சின் மாடல் கிடைக்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.2 கிமீ மைலேஜை வழங்கும். டீசல் மாடலின் 84 பிஎச்பி மாடல் லிட்டருக்கு 20.64 கிமீ மைலேஜையும், 109 பிஎச்பி பவர் மாடல் லிட்டருக்கு 19.1 கிமீ மைலேஜையும் வழங்கும்.

புதிய ரெனோ டஸ்ட்டரின் மிக முக்கிய மாற்றம், ஏஎம்டி மாடலில் வந்திருப்பதே ஆகும். இந்த செக்மென்ட்டில் இது புதிது. 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட இந்த மாடலை Easy- R கியர்பாக்ஸ் என்று ரெனோ குறிப்பிடுகிறது. இந்த புதிய ஏஎம்டி மாடல் டஸ்ட்டரை விரும்பும் நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சாய்ஸாக இருக்கும்.

புதிய டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் நுட்பத்துடன் கூடிய இபிடி தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட், டியூவல் ஏர்பேக்ஸ், ஸ்பீடு லிமிட்டர் வசதியுடன் கூடிய க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் வியூ கேமரா போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலத்தையொட்டி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் க்ரெட்டா போன்ற மாடல்களுடன் இது போட்டி போடும்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X