லிட்டருக்கு 100 கிமீ மைலேஜ் தரும் ரெனோ கார்... டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

By Saravana

லிட்டருக்கு 100 கிமீ மைலேஜ் தரும் தொழில்நுட்பம் கொண்ட புதிய கான்செப்ட் காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருக்கிறது ரெனோ கார் நிறுவனம். ரெனோ Eolab என்ற பெயரிலான இந்த கான்செப்ட், டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ரெனோ கான்செப்ட் கார்

அதிக மைலேஜ் தருவதற்காக இரட்டை எரிபொருள் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சம் 75 பிஎச்பி பவரையும், மின் மோட்டார் அதிகபட்சமாக 53 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், குறைவான வேகத்தில் செல்லும்போது இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் முதல் இரண்டு கியர்கள், மின் மோட்டாரிலிருந்து சக்தியை பெற்று சக்கரங்களுக்கு கடத்தும். 3 மற்றும் அதற்கு மேற்பட்ட கியர்களில் செல்லும்போது பெட்ரோல் எஞ்சினை தானாக இயக்கி, ஆற்றலை சக்கரங்களுக்கு கடத்தும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

அதிக மைலேஜ் தர வேண்டும் என்பதற்காக, முடிந்தவரை எடையை குறைத்துள்ளனர் ரெனோ எஞ்சினியர்கள். இந்த காரில் உறுதியும், இலகு எடையும் கொண்ட அலுமினியம் மற்றும் கலப்பு உலோக பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கூரை மெக்னீசியத்திலானது. தரைப்பகுதி கார்பன் ஃபைபர் பாகங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த காரின் மொத்த எடை 995 கிலோவாகும்.

வித்தியாசமான தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த ஹேட்ச்பேக் ரக கார் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் டிசைனை கொண்டுள்ளது. வரும் 2022ம் ஆண்டில் இந்த கார் உற்பத்திக்கு கொண்டு செல்ல ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரும் பட்சத்தில் டொயோட்டா பிரையஸ் காருடன் போட்டி போடும். ஆனால், அதற்குள் புதிய ஹைபிரிட் கார்கள் அதிகம் வரும் வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.

ஹைபிரிட் கார்களுக்கான மைலேஜ் கணக்கீடுகளின்படி, இந்த கார் லிட்டருக்கு 100 கிமீ மைலேஜ் தரும் என ரெனோ தெரிவித்துள்ளது. வாகனங்களின் புகையால் மூச்சுத் திணறி வரும் மாநகரங்களுக்கு இதுபோன்ற ஹைபிரிட் மற்றும் அதிக மைலேஜ் தரும் கார்கள் வரப்பிரசாதமாக அமையும்.

Most Read Articles
English summary
Renault is showcasing its crazy looking Eolab concept at the 2016 Auto Expo. The only thing crazier than the styling is the mileage figure of 100km/l.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X