ரெனோ க்விட் ஏஎம்டி மாடலில் கியர் லிவருக்கு பதில் டயல்... வெரி ஸ்மார்ட் ஐடியா!

Written By:

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெனோ க்விட் காரின் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலும், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பிற தயாரிப்பாளர்களை தாண்டி, மேலும் ஒரு படி மேலே யோசித்து, ஏஎம்டி மாடலில் கியர் லிவருக்கு பதிலாக டயல் ஒன்றை சிம்பிளாக கொடுத்து அசத்தியிருக்கிறது ரெனோ கார் நிறுவனம். கீழே உள்ள கேலரியில் அந்த படங்களையும், கேலரிக்கு கீழே தகவல்களையும் காணலாம்.

புதிய ரெனோ க்விட் ஏஎம்டி மாடல்

 

தற்போது 800சிசி எஞ்சினுடன் ரெனோ க்விட் கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையி்ல், ஸ்மார்ட் கன்ட்ரோல் எஃபிசியன்சி தொழில்நுட்பம் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சினின் பவர் விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி எனப்படும் புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ரெனோ க்விட் 1.0 லிட்டர் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் ஸ்மார்ட்டான வசதி ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, கியர் லிவருக்கு பதிலாக சென்டர் கன்சோலுக்கு கீழே ஒரு சிறிய டயல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், நியூட்ரல், டிரைவ் மற்றும் ரிவர்ஸ் ஆகிய மூன்று ஆப்ஷன்கள் உள்ளன. இது மிகவும் எளிதாக இருக்கும் என்பதுடன், பொருட்கள் வைப்பதற்கான இடவசதியும் மேம்பட்டிருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்களிடத்தில் இந்த மாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக, பெண் வாடிக்கையாளர்கள், முதியோருக்கும், நகர்ப்புற வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவரும் வசதியாக கூறலாம். மற்றபடி, தோற்றத்தில் 800சிசி ரெனோ க்விட் காருக்கும், 1.0 லிட்டர் மாடலுக்கும் வித்தியாசங்கள் ஏதுமில்லை. பக்கவாட்டில் கதவுகளில் கொடுக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் சட்டத்தில் மட்டுமே மாற்றம் இருக்கிறது. புதிய 1.0 லிட்டர் மாடலில் ஃபார்முலா ஒன் போட்டிகளில் இறுதிச் சுற்றை தெரிவிக்கும் செக்கர்டு கொடி போன்ற பிளாஸ்டிக் சட்டம் பதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.

மாருதி ஆல்ட்டோ கே10 காருடன் இந்த புதிய ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலும், ஏஎம்டி மாடலும் நேரடியாக போட்டி போடும்.

Story first published: Saturday, February 6, 2016, 11:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X