டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்?

Written By:

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

டாடா நெக்ஸன் பற்றி...

டாடா நெக்ஸன் பற்றி...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பாக உருவாக்கபட்டு, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்ட டாடா நெக்ஸன், உற்பத்தி நிலைக்கு தயாராக உள்ள நெக்ஸன் கான்செப்ட் ஆகும்.

நெக்ஸன் மூலமாக தான், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், முதன் முதலாக சப் - 4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் தடம் பதிக்கிறது.

உற்பத்திக்கான மாடல்?

உற்பத்திக்கான மாடல்?

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்ட டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, உற்பத்திக்கு தயாராக உள்ள மாடல் தான் என தகவல்கள் வெளியாகின்றன.

இஞ்ஜின் வகைகள்;

இஞ்ஜின் வகைகள்;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, 2 விதமான இஞ்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியின் பெட்ரோல் வேரியண்ட், 1.2 லிட்டர் ரெவோட்ரோன் பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுடன் கிடைக்கும். இதே இஞ்ஜின் தான் ஸீக்கா மாடலிலும் பயன்படுத்தபடுகிறது.

இதில் உபயோகிக்கபட உள்ள பெட்ரோல் இஞ்ஜின் குறித்து எந்த விதமான தெளிவான தகவல்களும் வெளியிடப்படவில்லை.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியின் டீசல் வேரியண்ட், 1.5 ரெவோடார்க் டீசல் இஞ்ஜின் தேர்வுடன் கிடைக்கிறது.

இதில் உபயோகிக்கபட உள்ள டீசல் இஞ்ஜின், 110 பிஹெச்பியையும், 260 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டிருக்கும் தகவல்கள் வெளியாகிறது.

டிசைன்;

டிசைன்;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காணப்பட்ட நெக்ஸன் கான்செப்ட் மாடலை போலவே உள்ளது என கூறலாம்.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்ட டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி-க்கும், 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காணப்பட்ட நெக்ஸன் கான்செப்ட் மாடலுக்கும் உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிக்க மைக்ரோஸ்கோப் தேவைப்படும் என்று கூறினாலும் அது மிகையாகாது.

இந்த இரண்டு மாடல்களுக்கு இடையில், அவ்வளவு ஒருமைப்பாடுகள் உள்ளன.

ஹெட்லேம்ப், டெய்ல்லேம்ப்;

ஹெட்லேம்ப், டெய்ல்லேம்ப்;

உற்பத்திக்கு தயாராக உள்ள டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, சற்று கூடுதலாகவே ஆங்குலார் தோற்றம் கொண்டுள்ளது.

இதன் புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் டெய்ல்லேம்ப்கள், இதன் ஆங்குலார் தோற்றத்தை கூட்டும் வகையில் உள்ளது.

ஃப்ரண்ட்;

ஃப்ரண்ட்;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியின், ஃப்ரண்ட் கிரில் பகுதியில் க்ரோம் பூச்சு சற்று குறைவாகவே சேர்க்கபட்டுள்ளது.

இதற்கு பதிலாக, இதன் இரு பகுதிகளிலும் வேறு சில டிசைன்கள் வழங்கபட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் நிலையில், புதிதாக அறிமுகம் செய்யபட்ட மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஃபோர்டு இகோஸ்போர்ட் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்?

அறிமுகம்?

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

விலை;

விலை;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி குறித்து எந்த விதமான அதிகாரப்பூரவ தகவல்களும் வழங்கபடவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டாடா மோட்டார்ஸின் ஆஸ்பிரே காம்பேக்ட் எஸ்யூவி - தகவல்கள்!

இண்டிகாவைவிட குறைவான விலையில் புதிய காரை வடிவமைக்கும் டாடா!

டாடா நெக்ஸன் காம்பெக்ட் எஸ்யூவி விற்பனை எப்போது?

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Tata Motors have unveiled their Nexon Concept at the 2016 Delhi Auto Expo. This Nexon Concept, which is unveiled now, seems to be the production ready version. Tata Nexon Compact SUV, is Tata Motors first venture into the sub-4 metre SUV category. Tata Nexon Compact SUV would be launched in the coming months.
Story first published: Friday, February 12, 2016, 11:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark