புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

By Ravichandran

டொயோட்டா நிறுவனம், இன்னோவா க்ரிஸ்ட்டா என்ற பெயரில் புதிய எம்பிவி-யை, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தனர்.

இன்னோவா க்ரிஸ்ட்டா குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்வோம்.

இன்னோவா க்ரிஸ்ட்டா பற்றி...

இன்னோவா க்ரிஸ்ட்டா பற்றி...

டொயோட்டா நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் தயாரிப்புகளில், டொயோட்டா இன்னோவா மிகவும் அதிகமாக விற்பனையாகும் காராக விளங்குகிறது.

டொயோட்டா இன்னோவா எம்பிவியின் புதிய தலைமுறை வடிவமாக இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி அறிமுகம் செய்யபட்டுள்ளது.

மாற்றங்கள்?

மாற்றங்கள்?

இன்னோவாவின் புதிய தலைமுறை மாடலான க்ரிஸ்ட்டா-விற்கு, புதிய இஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் வழங்கபட்டுள்ளது. மேலும், கூர்மையான தோற்றம் வழங்கபட்டுள்ள இது, புதிய சேஸி மிது கட்டமைக்கபட்டுள்ளது.

சமீபத்தில் செய்யபட்டுள்ள இந்த மாற்றங்கள், ஏற்கனவே பரிசோதிக்கபட்டு வெற்றி பெற்ற இன்னோவா-விற்கு ஈடான மற்றொரு எம்பிவி-யாக விளங்குமா?

இதற்கான விடைகளை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

டிசைன்;

டிசைன்;

டொயோட்டா நிறுவனம், டிசைன் குறித்த மாற்றங்களுக்காக, தங்களால் ஆன அனைத்தையும் முயற்சித்துள்ளனர்.

இன்னோவா மாடலில் முன்னதாக, அங்கும் இங்கும் வளைவுகளாக இருந்த அனைத்தையும் மாற்றி, அவற்றிற்கு கூர்மையான தோற்றங்களை வழங்கியுள்ளனர்.

ஃப்ரண்ட்;

ஃப்ரண்ட்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் முன் தோற்றம் சற்று கூடுதல் கட்டு மஸ்தான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது.

இதற்கு பொருத்தபட்டுள்ள கூர்மையான ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் இதற்கு இன்னும் கூர்மையான தோற்றத்தை வழங்குகிறது. ட்வின் குரோம் ஸ்லாட் யூனிட்-டாக உள்ள இதன் ஃப்ரண்ட் க்ரில், கேபிங் ஏர் டேம் மீது பொருத்தபட்டுள்ளது.

ரியர்;

ரியர்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பின் பகுதியில், சமச்சீரற்ற நிலையில் இருந்த டெய்ல் லேம்ப்கள், ஒரே மட்டமாக தட்டையாக மாற்றி வடிவமைக்கபட்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியில் ஏராளமான உயர் தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியில் 8-இஞ்ச் அளவிலான இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இந்த கருவியின் முன்பு கைகள் காட்டுவதன் மூலமாகவும், இதனை இயக்கவும், கட்டுபடுத்தவும் முடியும்.

சீட்கள்;

சீட்கள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் முதன் 2 வரிசைகளில் கேப்டன் சீட்கள பொருத்தபட்டுள்ளது.

டேஷ்போர்ட்;

டேஷ்போர்ட்;

இதன் உயர் ட்ரிம் வேரியண்ட்களின் டேஷ்போர்களில் கட்டையிலான இன்செர்ட்கள் உள்ளன.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, புதிய 2.4 லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

திறன்;

திறன்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் இஞ்ஜின், 3,400 ஆர்பிஎம்களில் 147 பிஹெச்பியையும், 1,200-1,800 ஆர்பிஎம்களில் 359 என்எம் டார்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

இந்த இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிற்கு, டொயோட்டா நிறுவனம் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தபட்டுள்ளது.

6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தபட்டுள்ளதால், குடும்பத்துடன் நெடுந்தூர பயணங்கள் செல்பவர்களுக்கு பெரிய சந்தோஷத்தை அளிக்கும் விஷயமாக இருக்கும்.

நகரங்களிலுக்கும் ஏற்றது;

நகரங்களிலுக்கும் ஏற்றது;

உச்சபட்ச டார்க் மற்றும் பவர் ஆகியவற்றிற்கு லோ எண்ட் ஆக்சஸ் உள்ளதால், புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி நகரங்களுக்கும், நெடுஞ்சாலைகளுலும் இயக்குவதற்கு ஏற்ற வாகனமாக விளங்குகிறது.

மைலேஜ்;

மைலேஜ்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிக்கு, புதிய இஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் பொருத்தபட்டுள்ளது.

இதனால், முன்பு இருந்த இன்னோவா-வை காட்டிலும், புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா லிட்டருக்கு 13 கிலோமீட்டர் என்ற மேம்பட்ட மைலேஜ் வழங்கும் வகையில் எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

டொயோட்டா நிறுவனம், தங்களின் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிக்கு, புதிய பெயர், தோற்றம், இஞ்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் சேஸி ஆகிய புதிய அம்சங்களை வழங்கியுள்ளனர்.

ஆனால், இந்த நிறுவனம் இந்திய சந்தைகளில் பரிசோதித்து, வெற்றி கண்ட ஃபார்முலாவை கைவிடாமல் அப்படியே பின்பற்றுகின்றனர்.

விலை?

விலை?

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் விலைகள், தற்போதைய மாடல்களை காட்டிலும் சற்று விலை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

போட்டி?

போட்டி?

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிக்கு போட்டியாக, எக்ஸ்யூவி 500 மற்றும் மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ ஆகிய மாடல்கள் விளங்குகிறது.

இதனால், இதையும் கருத்தில் கொண்டு தான், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் விலைகள் நிர்ணயம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

விற்பனையில் உலகின் நம்பர்-1 பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட டொயோட்டா

புதிய டொயோட்டா இன்னோவா, இந்தியாவில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

புதிய டொயோட்டா இன்னோவா கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு... படங்களுடன், விபரங்கள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Toyota firm has unveiled their new generation of its bestselling Innova MPV, which is called as the Innova Crysta at the 2016 Delhi Auto Expo.Toyota have given this new Innova Crysta, brand new name, looks, engine, gearbox and chassis etc. Prices of this new Innova Crysta are expected to be slightly higher than that of the current model.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X