புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

Written By:

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் காரின் இந்திய அறிமுகம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது நிகழ்ந்தது.

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

புதிய டொயோட்டா பிரையஸ் பற்றி...

புதிய டொயோட்டா பிரையஸ் பற்றி...

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்ட இந்த புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் கார், 4-ஆம் தலைமுறை பிரையஸ் ஹைப்ரிட் கார் ஆகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

எரிபொருள் வகை - பெட்ரோல் - எலக்ட்ரிக் ஹைப்ரிட் இஞ்ஜின்

இஞ்ஜின் - 1.8 லிட்டர் + எலக்ட்ரிக் மோட்டார்

கம்பைண்ட் பவர் (கூட்டு சக்தி) - 121 பிஹெச்பி

கம்பைண்ட் டார்க் (கூட்டு டார்க்) - 163 என்எம்

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் காரின் இஞ்ஜின், சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

திறன்;

திறன்;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் கார் உச்சபட்சமாக, மணிக்கு 180 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்ட முடியும்.

மைலேஜ்;

மைலேஜ்;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட், ஒரு லிட்டருக்கு 22.11 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

முந்தைய தலைமுறை பிரையஸ் மாடல்களில் இருந்த ஈர்ப்பு இல்லாத தோற்றம் முழுவதுமாக மாற்றபட்டுள்ளது.

தற்போதைய தலைமுறையின் புதிய டொயோட்டா பிரையஸ் காருக்கு, ஈர்க்கும் வகையிலான ஏரோடைனமிக் தோற்றம் வழங்கபட்டுள்ளது. மேலும்,

காரின் 2 முனைகளிலும் உள்ள கூர்மையான ஆங்குளார் விளக்குகளும், காரின் கூரையும் கண்ணை கவரும் வகையில் உள்ளது.

பொழுதுபோக்கு அம்சங்கள்;

பொழுதுபோக்கு அம்சங்கள்;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் கார், 7 இஞ்ச் அளவிலான டச்ஸ்கிரீன் வசதியுடனான புதிய இன்ஃபோடெய்ன்மண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.

மேலும், இதில் 10 ஸ்பீக்கர்கள் உடைய ஜேபிஎல் ஆடியோ சிஸ்டமும் உள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் கார், 9 ஏர்பேக்கள் உள்ளது.

மேலும், இதில் பிரேக் அசிஸ்ட் மற்றும் ஈபிடி உடனான ஏபிஎஸ் உள்ளது. இதோடு மட்டுமல்லாமல், விஎஸ்சி மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் வழங்கபட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

தற்போதைய நிலையில், இந்திய வாகன சந்தையில், இந்த புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் வாகனத்திற்கு போட்டியாக எந்த காரும் இல்லை.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைபிரிட் காரின் இந்திய வருகை விபரம்

லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் தரும் புதிய டொயோட்டா பிரையஸ் கார்

டொயோட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Toyota has unveiled their 4th generation Prius Hybrid at the 2016 Delhi Auto Expo. This New Prius Hybrid is designed with a more aerodynamic look, which makes the Car even stylish. New Prius Hybrid can hit a top Speed of 180km/h. It gives a mileage of about 22.11km/l. The new Toyota Prius is expected to launch later this year.
Story first published: Saturday, February 6, 2016, 17:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark