ட்ரையம்ஃப் நிறுவனத்தின், 2016 போனிவில் மோட்டார்சைக்கிள்களுக்கு புக்கிங் துவக்கம்

Written By:

2016 ட்ரையம்ஃப் போனிவில் மோட்டார்சைக்கிள்-களின் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், ட்ரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் தங்கள் ரேன்ஜ்-களில் உள்ள அனைத்து வாகனங்களையும் இந்திய வாகன சந்தைகளில் வழங்குகிறது.

இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் இரு சக்கர வாகன உற்பத்தியாளர், தங்களின் ட்ரையம்ஃப் 2016 போன்வில் மோட்டார்சைக்கிள்களை 2016-ல் அறிமுகம் செய்ய உள்ளது. சமீபத்தில் தான், போன்வில் ரேன்ஜ் வாகனங்கள் இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட்டது.

ட்ரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தயாரிக்கும் போன்வில் ரேன்ஜ்-ல் உள்ள அனைத்து வாகனங்களின் இந்திய அறிமுகமும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நடைபெற உள்ளது.

மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள், இந்த மோட்டார்சைக்கிள்களை ஃபிப்ரவரி 5 முதல் ஃபிப்ரவரி 9-ஆம் வரை காணலாம். இந்த மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு இந்தியாவில் ஏற்கனவே துவங்கிவிட்டது.

இது வரை, போன்வில், போன்வில் டி100 மற்றும் த்ரக்ஸ்டன் மாடல்கள் மட்டுமே, இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. 2016-ல் அனைத்து சந்தைகளுக்கும் வழங்கபடும் போன்வில் ரேன்ஜ்-களில் உள்ள வாகனங்களையும், ட்ரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் குறிப்பிடதக்க வகையில் மேம்படுத்தி வழங்குகிறது. புதிய போன்வில் ரேன்ஜ்-ல், ஸ்ட்ரீட் ட்வின், போன்வில் டி120 மற்றும் த்ரக்ஸ்டன் ஆகிய மோட்டார்சைக்கிள்கள் அடங்கும்.

triumph-motorcycles-2016-bonneville-india-bookings-begun

இதற்கு முன்னதாக வழங்கபட்ட வாகனங்களை ஒப்பிடுகையில், புதிய போன்வில் ரேன்ஜ்-ல் உள்ள ஸ்ட்ரீட் ட்வின், போன்வில் டி120 மற்றும் த்ரக்ஸ்டன் ஆகிய 3 மோட்டார்சைக்கிள்களும் புதிய இஞ்ஜின் மற்றும் மேம்பட்ட திறன் கொண்டுள்ளதாக இருக்கும்.

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், இந்த 3 போன்வில் மோட்டார்சைக்கிள்களின் பொலிவும் கூட்டபட்டுள்ளது. வெவ்வேறு மாடல் மோட்டார்சைக்கிள்களின் புக்கிங் கட்டணமும், ஒரு டீலர்ஷிப்-பிடம் இருந்து மற்றொரு டீலர்ஷிப்-க்கு இடையே வேறுபட வாய்ப்புகள் உள்ளது.

தற்போதைய நிலையில், ட்ரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு இந்திய அளவில் 12 எக்ஸ்க்ளுசிவ் விற்பனை மையங்கள் மட்டுமே உள்ளது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள், அஹ்மதாபாத், பெங்களூரூ, சென்னை, சண்டிகர், டெல்லி, ஹைதராபாத். இண்டோர், ஜெய்ப்பூர்,

கொல்கத்தா, கொச்சி, மும்பை மற்றும் பூனே உள்ள விற்பனை மையங்கள் மேற்பட்ட தகவல்களை பெற்று, புக்கிங் செய்து கொள்ளலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

ரூ.9,999 மாதத் தவணையில் டிரையம்ஃப் போனிவில் பைக் - விபரம்

English summary
Bookings have begun for 2016 Bonneville range of vehicles from Triumph Motorcycles in India. For the year 2016, British-based manufacturer will introduce an all-new range of Bonneville motorcycles. The whole Bonneville range by Triumph Motorcycles would make their Indian debut at 2016 Delhi Auto Expo.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark