ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

Written By:

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரின் இந்திய அறிமுகம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நிகழ உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

விரைவில், வெளியாக உள்ள, ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ குறித்த தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோக்ஸ்வேகன்...

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோக்ஸ்வேகன்...

தங்கள் நிறுவனத்தின் சார்பாக தயாரிகப்படும் 3 புதிய தயாரிப்புகள், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபடும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உறுதி செய்தது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது, அமியோ காம்பேக்ட் செடான், டிகுவான் பிரிமியம் எஸ்யூவி மற்றும் பஸ்ஸாட் ஜிடிஇ பிலக்-இன் ஹைப்ரிட் ஆகிய கார்கள் அறிமுகம் செய்ய உள்ளது.

போலோ ஜிடிஐ-யும் அறிமுகம்?

போலோ ஜிடிஐ-யும் அறிமுகம்?

ஜெர்மன் கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், தங்களின் புதிய போலோ ஜிடிஐ காரையும் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. இந்த பெர்ஃபார்மன்ஸ் ஹேட்ச்பேக் காரின் சோதனைகள், இந்திய சந்தைகளில் துவங்கியுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் ஃபோக்ஸ்வேகன் புதிய போலோ ஜிடிஐ காரின் சோதனைகள், பூனே அருகே சகன் என்ற இடத்தில் உள்ள ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி ஆலையில் மேற்கொள்ளபட்டு வருகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ, 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 189.30 பிஹெபி-யையும், உச்சபட்சமாக 320 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ, 7-ஸ்பீட் டிஎஸ்ஜி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. ஆனால், இந்த மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் வெளியிடப்பட மாட்டாது என தெரிவிக்கபட்டுள்ளது.

திறன்;

திறன்;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், அதிகப்படியாக ஒரு மணி நேரத்திற்கு, 236 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

மேலும், நின்ற நிலையில் இருந்து 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை வெரும் 6.7 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், ஒரு லிட்டருக்கு 8.85 கிலோமிட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் உடையதாக விளங்குகிறது. இந்த எரிபொருள் திறன், டிரைவிங் முறைகளை பொருத்து வேறுபட வாய்ப்புகள் உள்ளது.

விற்கபடும் விதம்;

விற்கபடும் விதம்;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், இந்திய சந்தைகளில் சிகேடி அல்லது கம்ப்ளீட்லி நாக்ட் டவுன் (உபகரணங்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யபட்டு இங்கு அசம்பிள் செய்யபடும்) முறையில் அறிமுகம் செய்யபட உள்ளது.

எதிர்பார்க்கபடும் விலை;

எதிர்பார்க்கபடும் விலை;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரின் விலை, பிரிமியம் பெர்ஃபார்மன்ஸ் ஹேட்ச்பேக் கார் வடிவிலேயே நிர்ணயிக்கபட உள்ளது. ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், 20 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ஹேட்ச்பேக் மாடலாக வரும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ

பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி... வருகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ

புதிய ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா விற்பனைக்கு வந்தது - விபரம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Volkswagen Polo GTI Indian Debut is expected to be done at the 2016 Delhi Auto Expo. During the 2016 Auto Expo, Volkswagen India would be unveiling their Ameo compact sedan, Tiguan premium SUV, and the Passat GTE plug-in hybrid. This German automobile manufacturer shall introduce its all-new Polo GTI model also.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark