யமஹா எம்-ஸ்லாஷ் பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது?

Written By:

யமஹா எம்-ஸ்லாஷ் பைக்- 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் அறிமுகம் செய்யபட உள்ள யமஹா எம்-ஸ்லாஷ் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

அட்டோ எக்ஸ்போவில் யமஹா;

அட்டோ எக்ஸ்போவில் யமஹா;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், யமஹா நிறுவனம் ஏராளமான புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்கிறது.

எம்-ஸ்லாஷ் அறிமுகம்?

எம்-ஸ்லாஷ் அறிமுகம்?

யமஹா எம்-ஸ்லாஷ் பைக்-கின் இந்திய அறிமுகமும் இந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலேயே செய்யபட உள்ளது. இந்த நேகட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக், இந்திய சந்தைகளுக்கு என ரீ-பேட்ஜிங் (பெயர் மாற்றம்) செய்யபடு வழங்கபடும்.

தாய்லாந்தில் விற்பனை;

தாய்லாந்தில் விற்பனை;

தற்போதைய நிலையில், இந்த யமஹா எம்-ஸ்லாஷ் பைக் தாய்லாந்தில் விற்பனை செய்யபட்டு வருகிறது. விரைவில், இது அருகாமையில் உள்ள பிற வாகன சந்தைகளுக்கும் வழங்கபட உள்ளது.

தாய்லாந்து யமஹாவின் இஞ்ஜின்;

தாய்லாந்து யமஹாவின் இஞ்ஜின்;

தாய்லாந்தில் விற்பனை செய்யபடும் யமஹா எம்-ஸ்லாஷ் பைக்-கில், யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்-கில் உபயோகிக்கபடும் அதே இஞ்ஜினே உபயோகிக்கபடுகிறது.

ஆனால், இந்தியாவில் வழங்கபடும் யமஹா எம்-ஸ்லாஷ் பைக்-கிற்கு, அதிக டிஸ்பிளேஸ்மண்ட் திறன் கொண்டுள்ள இஞ்ஜின் பொருத்தபட வாய்ப்புகள் உள்ளது.

எம்டி மாடல்?

எம்டி மாடல்?

இந்திய வாகன சந்தைகளுக்கு, யமஹா எம்-ஸ்லாஷ் பைக், எம்டி மாடல் என ரீ-பேட்ஜிங் (பெயர் மாற்றம்) செய்யபடு வழங்கபடலாம்.

இதன் இஞ்ஜின் டிஸ்பிளேஸ்மண்ட் திறன், 150 சிசி மற்றும் 321 சிசி பைக்கிற்கு இடையே இருக்கும். ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்-கில் இருந்து உருவாக்கபட்ட 200சிசி அல்லது 250சிசி இஞ்ஜினை, எம்-ஸ்லாஷ் பைக்-கிற்கு யமஹா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

மாறாத அம்சங்கள்;

மாறாத அம்சங்கள்;

யமஹா எம்-ஸ்லாஷ் பைக் மற்றும் ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்-கிற்கும் இடையில் ஏராளமான பாகங்கள் பகிர்ந்து கொள்ளபட உள்ளது.

சிறப்பான கையாளும் திறனுக்காக, அதே டெல்டாபாக்ஸ் சேஸியையே யமஹா நிறுவனம் உபயோகிக்க உள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

பிரேக்-கள், எக்ஸ்ஹாஸ்ட், அல்லாய் வீல்கள் மற்றும் பல்வேறு சிறிய உபகரணங்கள் அப்படியே தொடரப்பட உள்ளது. செலவுகளை கட்டுக்குள் வைத்திருபதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது.

உற்பத்தி?

உற்பத்தி?

இந்தியாவில் விற்கபட உள்ள யமஹா எம்-ஸ்லாஷ் பைக், இந்தியாவில் உள்ள யமஹா உற்பத்தி ஆலையிலேயே உற்பத்தி செய்யபட உள்ளது.

விலை?

விலை?

எந்த ஒரு வாகனத்தின் வெற்றிக்கும், விலை நிர்ணயம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

இந்த விஷயத்தில், எம்-ஸ்லாஷ் பைக்-கை, யமஹா நிறுவனம் பிரிமியம் ரகத்திலேயே விலை நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Yamaha M-Slaz would make its Indian Debut at the 2016 Delhi Auto Expo. This naked street fighter bike would be rebadged in the Indian market. At present, the M-Slaz is sold in Thailand. It shall be offered to several neighbouring markets very soon. The new M-Slaz for Indian market will be manufactured at Yamaha's Indian facility.
Story first published: Thursday, January 28, 2016, 17:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark