விரைவில் வரும் டிவிஎஸ் அகுலா ஸ்போர்ட்ஸ் பைக்: சிறப்பு பார்வை

By Saravana Rajan

சில நாட்களுக்கு முன் ஓசூர்- பெங்களூர் இடையே ரகசியமாக சோதனை செய்யப்பட்ட டிவிஎஸ் அகுலா 310 ஸ்போர்ட்ஸ் பைக்கின் பிரத்யேக படங்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் பார்த்திருப்பீர்கள். அதுமுதல் இந்த பைக்கின் அறிமுகத்தை எதிர்பார்த்து பரபரத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மற்றுமொரு நல்ல செய்திதான் இது.

ஆம், நடப்பு நிதி ஆண்டிலேயே இந்த புதிய டிவிஎஸ் அகுலா 310 ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதை, டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி கே.என்.ராதாகிருஷ்ணன் உறுதி செய்திருக்கிறார். இந்த நிலையில், மிகவும் விசேஷ தொழில்நுட்ப அம்சங்களுடன் வரும் இந்த அட்டகாசமான பைக்கின் முக்கியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.

பிஎம்டபிள்யூ கூட்டணி

பிஎம்டபிள்யூ கூட்டணி

அப்பாச்சி பிராண்டில் ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை விற்பனை செய்து வரும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் விதத்தில் இந்த புதிய பைக் மாடல் வருகிறது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடலாக வருவதும், தமிழகத்தை சேர்ந்த நிறுவனத்திடமிருந்து சர்வதேச தரத்துடன் வரும் மாடல் என்பதுன் இதன் மீதான ஆவலை தூண்டியிருக்கிறது.

 ஏமாற்றம்

ஏமாற்றம்

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனமும் இணைந்து பல புதிய நடுத்தர வகை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றன. அதில், முதல் மாடலாக பிஎம்டபிள்யூ 310ஆர் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், துரதிருஷ்டவசமாக அந்த பைக் இந்தியாவில் உடனடியாக விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால் ஏமாற்றம் ஏற்பட்டது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பிஎம்டபிள்யூ 310ஆர் பைக் வருவது தாமதமானாலும் கூட, அந்த ஏமாற்றத்தை போக்கும் விதத்தில், அந்த மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டிவிஎஸ் அகுலா 310 பைக் வருவது மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதாவது, பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் நேக்டு ஸ்டைல் மாடல். அதாவது, ஃபேரிங் பேனல்கள் இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், டிவிஎஸ் அகுலா 310 பைக் முழுவதும் ஃபேரிங் பேனல்களால் உடல் அமைப்பை போர்த்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வருகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கில் இருக்கும் அதே 313சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின்தான் இந்த பைக்கிலும் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். இந்த எஞ்சின் ரேஸ் பைக் போன்ற ஓட்டுதல் உணர்வை தரும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும். அதாவது, செயல்திறன் மிகச் சிறப்பாகவும், சீரான பவர் டெலிவிரியை வழங்கும்.

விசேஷ தொழில்நுட்பம்

விசேஷ தொழில்நுட்பம்

சமீபத்தில் வந்த அப்பாச்சி 4வி பைக் மாடலில் ராம் ஏர் இன்டேக் என்ற விசேஷ தொழில்நுட்பத்தை டிவிஎஸ் மோட்டார்ஸ் பயன்படுத்தியிருந்தது. அதாவது, திரவம் மூலமாக எஞ்சினை குளிர்விப்பு செய்யும் முறையை தவிர்த்து, காற்று மூலமாக எஞ்சினை குளிர்விப்பு செய்யும் விசேஷ தொழில்நுட்பம் என்பதுடன், செயல்திறனை வெகுவாக அதிகரிக்கும் தொழில்நுட்பம் இது. சாதாரண பைக்குகளில் எஞ்சினுடன் இணைந்த முறையிலேயே ஏர் இன்டேக் எனப்படும் காற்றை எஞ்சினுக்குள் செலுத்தும் அமைப்பு இருக்கும்.

எளிய நுட்பம்

எளிய நுட்பம்

இதுபோன்று, எஞ்சினுடன் இணைந்து கொடுக்கப்பட்டிருக்கும் ஏர் இன்டேக்கில் இருந்து செல்லும் காற்று, எஞ்சினின் வெப்பம் காரணமாக, எளிதாக சூடாகி, ஆக்சிஜன் அளவு குறையும். ஏனெனில், வெப்பக் காற்றில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த அறிவியல்தான் இது.

ரெண்டு மாங்காய்...

ரெண்டு மாங்காய்...

எனவே, குளிர்ந்த காற்று அடர்த்தி அதிகமாக இருப்பதுடன், அதில் ஆக்சிஜன் அளவும் அதிகமாக இருக்கும். இதனால், எஞ்சினின் காம்பூஷன் அறைக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைக்கும் என்பதால், மிகச் சிறப்பான செயல்திறனை எஞ்சின் வெளிப்படுத்தும். அதேநேரத்தில், குளிர்ந்த காற்று மூலமாக எஞ்சின் குளிர்விப்பும் சிறப்பாக இருக்கு. அதாவது, ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் தொழில்நுட்பம் இது. இந்த வகை தொழில்நுட்பம் ரேஸ் பைக் மற்றும் உயர்வகை பைக் மாடல்களில் மட்டுமே இருக்கும்.

டிராக்கிற்கும் சிறப்பு...

டிராக்கிற்கும் சிறப்பு...

இந்த பைக்கை சாதாரண சாலைகளுக்கு மட்டுமின்றி, ரேஸ் டிராக்குகளில் ஓட்டுவதற்கும் மிகச் சிறப்பான மாடலாக உருவாக்கியிருக்கிறது டிவிஎஸ் மோட்டார்ஸ். தனது 33 ஆண்டு கால மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையின் அனுபவத்தில், இந்த பைக்கை மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக நிலைநிறுத்த விரும்புகிறது.

அலுமினிய ஃப்ரேம்

அலுமினிய ஃப்ரேம்

ரேஸ் டிராக்குகளில் அதிவேகத்தில் பைக்கை செலுத்தும்போது அதிக நிலைத்தன்மையுடன் செல்லும் விதத்தில் யமஹா ஆர்15 பைக்கில் இருப்பது போன்ற அலுமினியம் ஃப்ரேம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், மிகச் சிறந்த கையாளுமை கொண்டதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கார்பன் ஃபைபர் பேனல்கள்

கார்பன் ஃபைபர் பேனல்கள்

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி அருகே நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ கண்காட்சியில், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டிவிஎஸ் அகுலா 310 பைக் கார்பன் ஃபைபர் பாடி பேனல்கள் கொண்டதாக இருந்தது. ஆனால், உற்பத்தி நிலை மாடலில், விலை குறைப்புக்காக கார்பன் ஃபைபர் பேனல்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பேனல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், கார்பன் ஃபைபர் பாடி கொண்ட டிவிஎஸ் அகுலா பைக் லிமிடேட் எடிசன் மாடலாக குறைந்த எண்ணிக்கையில் விற்பனைக்கு வரும் என்ற தகவலும் உள்ளது.

 பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

டிவிஎஸ் அகுலா பைக்கின் தயாரிப்பு நிலை மாடல், அந்த நிறுவனத்தின் பிரபலமான RTR வரிசையில் RTR300 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று ஒரு தகவல் இருக்கிறது. இருப்பினும், டிவிஎஸ் அகுலா பைக்கை புதிய பிராண்டில் வெளியிடும் முடிவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

விலை

விலை

இந்த பைக் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.1.75 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கேடிஎம் ஆர்சி200 பைக்கிற்கு இது கடும் சவாலாக இருக்கும்.

 ஏற்றுமதி

ஏற்றுமதி

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அட்டகாசமான பைக் மாடல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. ஸ்பெயின், லத்தீன் அமெரிக்கா, ஐக்கிய அமீரகம், வங்கதேசம் மற்றும் சில ஆப்ரிக்க நாடுகளிலும் இந்த புதிய பைக் மாடலை அறிமுகம் செய்ய டிவிஎஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது.

தூக்கம் தொலைந்த கேடிஎம்

தூக்கம் தொலைந்த கேடிஎம்

கேடிஎம் ஆர்சி வகை ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இந்த புதிய மாடல் கடும் நெருக்கடியை தரும் வாய்ப்புள்ளது. ஏனெனில், கையாளுமை, செயல்திறன், விலை என அனைத்திலும் கேடிஎம் ஆர்சி பிராண்டு பைக்குகளுக்கு இது கடும் சந்தைப் போட்டியை கொடுக்கும். அதனை வைத்தே

அதெல்லாம் சரி...

அதெல்லாம் சரி...

அதெல்லாம் சரி, எல்லாம் சொன்னீர்கள். அந்த அகுலா என்றால் என்ன அர்த்தம் என்று கேட்கிறீர்களா? அகுலா என்றால் ரஷ்ய மொழியில் சுறா மீன் என்று பொருள்படுகிறதாம். அகுலா என்ற பெயரில் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களும் இந்தியாவில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
15 Important Things To Know About TVS Akula 310cc Sportsbike.
Story first published: Saturday, August 6, 2016, 12:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X