புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... 1,100 கிமீ தூரத்துக்கு ஓர் எக்ஸ்ட்ரீம் டெஸ்ட் டிரைவ்!

பட்ஜெட் விலையில் ஸ்போர்ட்ஸ் பைக் அனுபவத்தை தருவதால், நம் நாட்டில் 150சிசி பைக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த செக்மென்ட்டில் சமீபத்திய வரவு ஹீரோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் பைக். ஹோண்டா பிரிந்த பிறகு பல்வேறு மாற்றங்களுடன் புதிய மாடலாகவே இந்த பைக்கை களமிறக்கி இருக்கிறது ஹீரோ.

1999ம் ஆண்டு ஹீரோ ஹோண்டா பிராண்டில் வெளிவந்த முதல் 150சிசி பைக் மாடலான இதில், ஹோண்டாவின் 156.8சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு வந்தது. சிறந்த எரிபொருள் சிக்கனம், அதிர்வுகள் குறைவான எஞ்சின் போன்றவற்றால் மார்க்கெட்டில் நன்மதிப்பை பெற்றது. அந்த நன்மதிப்பை தக்கவைக்கவும், காலமாற்றத்துக்கு தக்கவாறு மேம்படுத்தியும் புதிய எக்ஸ்ட்ரீம் பைக்கை ஹீரோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

தற்போது கவர்ச்சிகரமான டிசைன் மற்றும் சிறப்பம்சங்களுடன் மார்க்கெட்டிற்கு வந்துள்ள புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பை சமீபத்தில் டிரைவ்ஸ்பார்க் தளம் பெற்றது. தென் இந்தியாவின் முக்கிய இடங்களை இணைக்கும் சாலைகள் வழியாக 1,100 கிமீ தூரத்துக்கு இந்த பைக்கை டிரைவ் செய்தோம். அப்போது இந்த பைக்கின் செயல்திறன் மற்றும் சாதக, பாதகங்கள் குறித்த தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


 1.டெஸ்ட் டிரைவ் மாடல்

1.டெஸ்ட் டிரைவ் மாடல்

டெஸ்ட் டிரைவுக்காக பயன்படுத்தப்படும் பைக் இல்லாமல் பெங்களூரிலுள்ள ஷோரூம் வழியாக புத்தம் புதிய Xtreme பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்கியது. 2014 ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கின் இருசக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொண்ட மாடலை டெஸ்ட் டிரைவ் செய்து, அதன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறோம்.

2.டிசைன்

2.டிசைன்

முந்தைய மாடலைவிட டிசைனில் பல படிகள் முன்னேறியிருக்கிறது. மிக ஸ்டைலான ஹெட்லைட், கிளியர் கிளாஸ் இன்டிகேட்டர்கள், டியூவல் கலர் ரியர் வியூ கண்ணாடிகள் போன்றவை கவர்ச்சியாக இருக்கிறது. ஆனால், ஹெட்லைட் ஹவுசிங் டிசைன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

 3.இதர டிசைன் அம்சங்கள்

3.இதர டிசைன் அம்சங்கள்

ஸ்போர்ட்டியான பெட்ரோல் டேங்க், சைலென்சர், டெயில்லைட், சாரிகார்டு, புதிய ரியர் ஃபென்டர் டிசைன், டபுள் ஸ்போக் அலாய் வீல்கள் போன்றவை இளைஞர்களை வெகுவாக கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் பிளேட் ரியர் ஃபென்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. சைலென்சர் மீது க்ரோம் பூச்சுடன் கூடிய சைலென்சர் கார்டு வசீகரிக்கிறது.

 4. எஞ்சின்

4. எஞ்சின்

இந்த புதிய எக்ஸ்ட்ரீம் பைக்கில் 14.2 பிஎஸ் பவரையும், 12.8 என்எம் டார்க்கையும் அளிக்கும் 149.2சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. இதில், கார்புரேட்டர் வழியாக எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தப்படுகிறது. 2006ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் அதே எஞ்சின்தான் தற்போதைய மாடலிலும் செயலாற்றுகிறது.

5.பெர்ஃபார்மென்ஸ்

5.பெர்ஃபார்மென்ஸ்

இந்த புதிய மாடல் 4,500 ஆர்பிஎம் முதல் 7,000 ஆர்பிஎம் வரையிலான மிட் ரேஞ்சில் மிகச்சிறப்பான பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது. அதிகபட்சமாக 9,000ஆர்பிஎம்.,மில் மணிக்கு 110கிமீ வேகம் வரை எட்ட முடிந்தது. 70 கிமீ வேகத்தில் க்ரூஸ் செய்து ஓட்டும்போது அதிர்வுகள் இல்லாமல் மிகச்சிறந்த ஓட்டுதல் தரத்தை காட்டுகிறது.

6.மைலேஜ்

6.மைலேஜ்

லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எமது டெஸ்ட் டிரைவின்போது சராசரியாக லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ் கொடுத்தது. தென் இந்தியாவின் ஏற்றங்கள் மிகுந்த மலைச்சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்த நிலையில், இது நிச்சயம் சிறந்த மைலேஜ் என்று கூறலாம்.

 7.கையாளுமை

7.கையாளுமை

கோத்தகிரி சாலையில் செல்லும்போது பலமான காற்று வீசியது. ஆனால், வெகு லாவகமாக எதிர்கொண்டு செல்கிறது இந்த புதிய எக்ஸ்ட்ரீம். இந்த பைக்கின் கையாளுமை மற்றும் வளைவுகளில் ஆளுமை திறனை சோதித்து பார்க்க முடிந்தது. இதுபோன்று, பைக்குகளின் கையாளுமையை சோதிக்க சிறந்த இடம் என்று கோத்தகிரியை சொல்லலாம். அதேவேளை, இந்த பைக்கின் ஹேண்டில்பார் அமைப்பு ஓட்டுவதற்கு சிறப்பாக இல்லை. இதன் ஹேண்டில்பார் அமைப்பு காரணமாக கழுத்து வலி ஏற்படுகிறது. உயரமானவர்கள் சற்று முன்னோக்கியும், உயரம் குறைவானவர்கள் ஹேண்டில்பாரை சிறிது கீழே இறக்கி வைத்து ஓட்டினால், பிரச்னை இருக்காது.

8.இருக்கை

8.இருக்கை

இருக்கை மிக சொகுசான அனுபவத்தை தருகிறது. இதன் சஸ்பென்ஷனும் சொகுசை கூட்டுகிறது. பள்ளம் மேடுகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு அதிக அதிர்வுகளை காட்டாமல் உள்வாங்கிக் கொள்கிறது. இந்த நீண்ட தூர பயணத்தை செவ்வனே முடிப்பதற்கு இருக்கையும், சஸ்பென்ஷனும் முக்கிய காரணம். ஆனால், இந்த பைக்கின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் இருக்கை உயரம். 6 அடி உயரம் கொண்ட எனக்கே இந்த பைக்கிலிருந்து காலூன்றும்போது மிக உயரத்தில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை தருகிறது. எனவே, உயரம் குறைவானவர்கள் நகர்ப்புறத்தில் இந்த பைக்கை ஓட்டுவதில் சிரமங்கள் நிச்சயம் இருக்கும்.

9.பிரேக் செயல்திறன்

9.பிரேக் செயல்திறன்

முன்புறத்தில் 240மிமீ ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டிருக்கிறது. புதிதாக ஓட்டுபவர்கள் முன்புற பிரேக்கை பிடிக்கும்போது சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின்புற பிரேக் மிகச்சிறப்பான செயல்திறனை கொடுப்பதால், ஓட்டும்போது நம்பிக்கையையும், பாதுகாப்பான உணர்வையும் வழங்குகிறது. பின்புறத்தில் டிரம் பிரேக் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் சில ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கில் இருக்கும் சில முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களை காணலாம்.

10.ஹெட்லைட்

10.ஹெட்லைட்

ஹீரோ தயாரிப்புகளில் பெரும்பாலானவற்றில் ஹெட்லைட் போதிய வெளிச்சத்தை தருவதில்லை என்ற குறை இருக்கும். ஆனால், இந்த புதிய பைக்கில் அந்த குறை போக்கப்பட்டிருக்கிறது. இதன் பிரிஸம் ஹெட்லைட் மிகப் பிரகாசமான வெளிச்சத்தை தருகிறது. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா வந்திறங்கிய கப்பாட் பீச் செல்லும்போது மழை கொட்டியது. அந்த இருள் சூழ்ந்த சமயத்தில், மழையும் சேர்ந்துகொண்டது. ஆனால், மிகச்சிறப்பான ஒளி வெள்ளத்தை ஹெட்லைட் வழங்கியதால் பயணம் தடைபடாமல் செல்ல முடிந்தது.

11.கிராப் ரெயில்

11.கிராப் ரெயில்

எக்ஸ்ட்ரீம் பைக்கின் சில முக்கிய விஷயங்களில் கிராப் ரெயிலும் ஒன்று. ஸ்பிளிட் கிராப் ரெயில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு சிறப்பான பிடிமானத்தை வழங்கும் என்பதோடு, ஸ்டைலாகவும் தெரிகிறது.

 12.மொபைல் சார்ஜர்

12.மொபைல் சார்ஜர்

இருக்கைக்கு கீழே மொபைல்சார்ஜர் செய்யும் சாக்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் கொடுக்கப்பட்டிருக்கும் சிறிய இடவசதியில் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். ஆனால், பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போனை வைக்க இயலவில்லை.

13.சாரிகார்டு

13.சாரிகார்டு

பல பைக்குகளில் சாரிகார்டு டிசைன் மற்றும் அளவு பைக்கின் தோற்றத்தை கெடுத்துவிடும். ஆனால், இந்த பைக்கில் மிகச் சிறிய சாரிகார்டு பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்போர்ட்டியான தோற்றத்தை கொடுப்பதால் இளைஞர்களை வெகுவாக கவரும்.

14.இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

14.இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

அனலாக் ஆர்பிஎம் மீட்டர் நடுவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கீழே ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், எரிபொருள் மானி போன்ற தகவல்களை தரும் நீலநிற பேக்லிட்டுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றுமொரு முக்கிய வசதி சைடு ஸ்டான்ட் போட்டிருக்கும்போது எஞ்சினை ஸ்டார்ட் செய்து கியர் போட்டால், எஞ்சின் தானாக அணைந்துவிடுகிறது.

15.டியூவல் கலர்

15.டியூவல் கலர்

இந்த பைக்கின் தோற்றத்திற்கு கூடுதல் வலு சேர்ப்பது டியூவல் கலர் கொண்டதாக கிடைக்கிறது. கச்சமுச்சா இல்லாத கிராஃபிக்ஸ் டிசைனும் கவர்ச்சியை தருகிறது.

 16.டெயில் லைட்

16.டெயில் லைட்

எல்இடி டெயில் லைட் கிளஸ்ட்டர் கவர்ச்சியாக இருக்கிறது. பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரிகிறது.

17.விலை

17.விலை

வாடிக்கையாளர்களை கவனத்தை ஈர்ப்பதற்கு விலையும் முக்கிய காரணம். இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் ரூ.70,829 விலையிலும், முன்புற டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் ரூ.67,829 விலையிலும் விற்பனைக்கு வந்திருக்கிறது. இரண்டும் பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை.

18.சாதகங்கள்

18.சாதகங்கள்

மென்மையான எஞ்சின், சிறந்த கையாளுமை கொண்ட பைக் மாடல். மிக ஸ்டைலாக டிசைன் செய்யப்பட்டிருப்பதும் இந்த பைக்கின் ப்ளஸ் பாயிண்ட்.

19.பாதகங்கள்

19.பாதகங்கள்

சுவிட்சுகள் தரமாக இருப்பதுடன், இயக்குவதற்கு எளிதாக உள்ளன. ஆனால், பல்சரில் இருப்பது போன்று எஞ்சினை அணைப்பதற்கான தனி சுவிட்ச் இதில் இல்லை என்பது ஏமாற்றமான விஷயம். இதேபோன்று, ஃபுட்ரெஸ்ட்டை விட்டு சிறிது கூடுதல் உயரத்தில் பிரேக் பெடல் பொருத்தப்பட்டிருப்பதோடு, உள்ளடங்கி இருப்பதால் பிரேக் பிடிக்கும்போது சிரமம் ஏற்படுகிறது.

20.டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

20.டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

ஒட்டுமொத்தத்தில் மிகச்சிறப்பான பைக் மாடலாக இருந்தாலும், போட்டியாளர்களான பல்சரின் பெர்ஃபார்மென்ஸ், ரைடிங் பொசிஷனுடன் ஒப்பிடும்போது இந்த பைக் பின்தங்குகிறது. ஆனால், பல்சர் டிசைன் போரடித்து போன நிலையில், கவர்ச்சியான டிசைன் மற்றும் மென்மையான ஓட்டுதலை விரும்புவர்களுக்கு இது சிறந்த சாய்ஸ்.


Most Read Articles
English summary
One of the latest addition to the 150cc segment of motorcycles is the Hero Xtreme. Being the first generation from Hero as an individual company, and the third overall, after the CBZ and the CBZ Xtreme, Hero have set their foot to compete in this highly demanding segment. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X