தயாரிக்கப்படும் தொழிற்சாலைக்கு அருகே சுற்றி திரிந்த எலெக்ட்ரிக் கார்! கியாவின் தலையெழுத்தையே மாற்ற போகுது!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், கியா (Kia) நிறுவனம் இவி6 (EV6), இவி9 மற்றும் கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Carens Clavis EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களை தொடர்ந்து, கியா சைரோஸ் இவி (Kia Syros EV) என்கிற தனது நான்காவது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. பலத்த எதிர்பார்ப்பில் இருக்கும் முற்றிலும் புதிய, இரண்டாம் தலைமுறை கியா செல்டோஸ் (Seltos) காரின் வெளியீட்டைத் தொடர்ந்து, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சைரோஸ் காரை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்த 2026ஆம் ஆண்டு முடிவதற்குள் கியா வெளியிடவுள்ளது.

இதற்கிடையில், கியா சைரோஸ் இவி காரின் சோதனை ஓட்டங்கள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சோதனை சைரோஸ் இவி கார்கள் பொது சாலைகளில் அடிக்கடி தென்படுகின்றன. அந்த வகையில் தற்போது, ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்த்பூரில், கியா தொழிற்சாலைக்கு அருகே சைரோஸ் இவி கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டபோது அடையாளம் காணப்பட்டுள்ளது.

kia syros ev electric car spotted

இந்தியாவில் கியா தனது கார்களைத் தயாரிக்கும் அதே ஆந்திர தொழிற்சாலையில்தான் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் உருவாக்க உள்ளது. தற்போதைய கியா சைரோஸ் காரை போன்று அதன் எலெக்ட்ரிக் வெர்சனிலும் இரண்டாக பிரிக்கப்பட்ட ஹெட்லேம்ப்கள் இருக்கும். ஆனால் காரின் முன்பக்க கிரில் வடிவமைப்பு மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைரோஸ் பெட்ரோல் காரில் இரண்டு கிரில் திறப்புகள் இருந்தாலும், சைரோஸ் இவி-யில் முன் பம்பரின் அடிப்பகுதியில் ஒரு கிரில் மட்டுமே இடம்பெறலாம். மேலும், இந்த தனித்துவமான கிரில், தேவைப்படும்போது மட்டும் திறக்கும் ஆக்டிவ் ஃப்ளாப்களைக் கொண்டிருக்கும். இது காரின் ஏரோடைனமிக்ஸ் திறனை மேம்படுத்தி, குறைந்த ஆற்றலில் காரை இயங்க வைக்கும்.

kia syros ev electric car spotted

17-இன்ச் அலாய் சக்கரங்கள் பிரத்யேக வடிவமைப்பையும், இரு நிறங்களில் ஃபினிஷையும் கொண்டிருக்கும். இந்த எலெக்ட்ரிக் காரில், சைரோஸ் பெட்ரோல் காரைப் போல் அல்லாமல், எதிர்காற்றின் தடையைக் குறைக்க, ஃப்ளஷ்-ஃபிட்டட் ரூஃப் ரெயில்கள் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்தில், கியா சைரோஸ் இவி புதிய நிறத்தைக் கொண்டிருக்கும்.

டாஷ்போர்டில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் திரை என இரண்டும் 12.3-இன்ச் HD டிஸ்ப்ளேக்களுடன் வர உள்ளதாக கூறப்படுகிறது. இதில் எலெக்ட்ரிக் கார்களுக்கே உண்டான பிரத்யேக செயல்பாடுகளும் இடம்பெறலாம். ரீஜெனரேட்டிவ் பிரேக்கை அட்ஜெஸ் செய்வதற்கு பேடில் ஷிஃப்டர்கள் கிடைக்கும். இவற்றுடன், கியா சைரோஸ் இவி-யில் நான்கு விதங்களில் பவர் அட்ஜஸ்ட்மென்ட் கொண்ட வென்டிலேட்டட் இருக்கைகள் முன்பக்கத்தில் வழங்கப்பட உள்ளன.

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், சாய்க்க & மடிக்கக்கூடிய வென்டிலேட்டட் பின் இருக்கைகள், 64-வண்ண கேபின் விளக்குகள் செட்-அப் மற்றும் 8-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களும் சைரோஸ் இவி காரில் இடம்பெறலாம். பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, 360º கேமரா சிஸ்டம், லெவல்-2 மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS), இரு கேமரா கொண்ட டேஷ்கேம் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

kia syros ev electric car spotted

கியா சைரோஸ் இவி இரண்டு சிங்கிள்-மோட்டார் வேரியன்ட்களில் வர வாய்ப்புள்ளது. இந்த இரண்டு வேரியன்ட்களிலும் மோட்டாரின் இயக்க ஆற்றல் ஆனது காரின் முன் சக்கரங்களுக்கு (FWD) செல்லும் வகையில் இருக்கும். இதில் ஒரு வேரியன்ட் சிறிய பேட்டரி பேக்குடனும், மற்றொன்று பெரிய பேட்டரி பேக்குடனும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு பேட்டரிகளுமே எக்ஸைட் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் (LFP) செல்களைக் கொண்டிருக்கும். அதிக ரேஞ்ச் கொண்ட வேரியன்ட், ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 475-500 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்புற மின்சாதனங்களுக்கு ஆற்றல் வழங்கும் வகையில், வாகனம்-டு-லோட் (V2L) என்கிற இருவழி சார்ஜிங் செயல்பாடு இந்த எலெக்ட்ரிக் காரில் இடம்பெறும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. அதனை பயன்படுத்திக் கொள்ளவே கியா நிறுவனம் தொடர்ந்து புது, புது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் வரும் 4வது கியா எலெக்ட்ரிக் காரான சைரோஸ் இவி-இன் சோதனை ஓட்டங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், இதன் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 25, 2026, 5:00 [IST]
English summary
Kia syros ev electric car spotted near andhra manufacturing facility check all details here
மேலும்... #kia motors #electric car #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X