புதிய மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு கூடிக்கொண்டே செல்கிறது. பெரு நகரங்களில் மட்டுமே வரவேற்பு என்ற காலம் மாறி தற்போது சிறிய நகரங்கள் வரை ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களை விரும்பும் நிலை வந்துவிட்டது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனையும் இதற்கு அத்தாட்சியாக நிற்கிறது. இதனால், பல நிறுவனங்களும் ஹோண்டா ஆக்டிவா மார்க்கெட்டை குறிவைத்து புதிய மாடல்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில், லேட்டஸ்ட் வரவாக மஹிந்திராவிடமிருந்து ஓர் புதிய 110சிசி மாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

செஞ்சூரோ பைக் போன்றே பல புதுமையான வசதிகளுடன் கஸ்ட்டோ என்ற பெயரில் இந்த புதிய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இறங்கியிருக்கிறது கடந்த வாரம் இந்த புதிய ஸ்கூட்டர் மாடலை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். அதில் கிடைத்த அனுபவங்கள் மற்றும் இந்த புதிய ஸ்கூட்டரின் சாதக, பாதகங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.


 பொறியாளர்களின் உழைப்பு

பொறியாளர்களின் உழைப்பு

மஹிந்திரா பொறியாளர்கள் மற்றும் வடிவமைப்பு வல்லுனர்களின் நீண்ட கால உழைப்பில் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் இந்த ஸ்கூட்டரின் சாதகங்கள் மற்றும் பாதகங்களை காணலாம்.

முன்புற டிசைன்

முன்புற டிசைன்

பிற ஸ்கூட்டர் மாடல்களிலிருந்து எளிதாக வித்தியாசப்படுத்தும் வகையில் பிரத்யேக அம்சங்களுடன் முன்புறம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிற மஹிந்திரா ஸ்கூட்டர்களைவிட இது குறை சொல்ல முடியாத அளவிற்கு டிசைன் செய்துள்ளனர்.

 பக்கவாட்டு வடிவமைப்பு

பக்கவாட்டு வடிவமைப்பு

பக்கவாட்டு டிசைனிலும் சிறப்பாக இருக்கிறது பெரிய ரியர் வியூ கண்ணாடிகள், கூர்மையாக தெரியும் ஹெட்லைட், புடைப்பான வயிற்றுப்பகுதி, அதில் மஹிந்திரா பேட்ஜ் என பார்ப்போரை கவரும் என சொல்லலாம்.

பின்புற வடிவமைப்பு

பின்புற வடிவமைப்பு

பின்புறத்தில் டெயில்லைட் கன்சோல் தனித்துவமாக இருக்கிறது. அதில் மையத்தில் மஹிந்திரா பேட்ஜ் கொடுக்கப்பட்டிருருக்கிறது. கிராப் ரெயிலை எளிதாக பிடித்துக் கொள்ளும் வகையிலும், கெட்டியாகவும் உள்ளது.

 கையாளுமை

கையாளுமை

12 இஞ்ச் ட்யூப்லெஸ் டயர்கள், முன்புறத்தில் டெலிஸ்கோப்பில் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர் கையாளுமையில் வெகு ஜோராக உள்ளது. இதுவே இந்த ஸ்கூட்டரின் முக்கிய ப்ளஸ் பாயிண்ட்டாக கூறலாம்.

சொகுசு

சொகுசு

இருக்கையும் மிகச்சிறப்பான இடவசதியையும், சொகுசையும் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரின் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வசதிகளில் ஒன்று, ஓட்டுபவரின் இருக்கை பகுதியின் உயரத்தை கூட்டிக் குறைக்க முடியும் என்பதே.

அட்ஜெஸ்ட் வசதி

அட்ஜெஸ்ட் வசதி

இருக்கையை இரண்டுவிதமான உயரங்களில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். முதல் பாயிண்ட்டில் அட்ஜெஸ்ட் செய்யும்போது உயரமானவர்களுக்கு வசதியாக இருக்கும். இரண்டாவது பாயிண்ட்டில் வைக்கும்போது உயரம் குறைவானர்களுக்கு வசதியாக இருக்கும். அதாவது, ஆண், பெண் என இருபாலரும் எளிதாக பயன்படுத்த முடியும். ஸ்கூட்டர் செக்மென்ட்டில் முதல்முறையாக இந்த வசதியை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது.

 ஸ்டோரேஜ் வசதி

ஸ்டோரேஜ் வசதி

இருக்கைக்கு கீழே Half-Face ஹெல்மெட் வைப்பதற்கு மட்டுமே கச்சிதமான இடவசதி உள்ளது. கூடுதலாக ஒரு பொருளையும் அதில் வைத்துவிட முடியாது. அதேவேளை, கிளவ் பாக்ஸ் இருப்பதால், அதில் கூடுதல் பொருட்களை வைத்துக் கொள்ள முடியும்.

கிக் ஸ்டார்ட்டர்

கிக் ஸ்டார்ட்டர்

சென்டர் ஸ்டான்ட் போட்டிருக்கும்போது எளிதாக கிக் செய்து ஸ்டார்ட் செய்யும் வசதி இருப்பது பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும். பிற ஸ்கூட்டர் மாடல்களை ஒப்பிடும்போது கிக் ஸ்டார்ட் செய்வதும் எளிதாக இருக்கிறது.

 இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

மஹிந்திராவிடமிருந்து வந்த இந்த மாடலில் டிஜிட்டல் மீட்டர் இல்லாமல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஏமாற்றமே என்றாலும், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பார்ப்பதற்கு கவர்ச்சியாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருக்கு கீழே மொபைல்போன், பர்ஸ் போன்றவற்றை வைத்துக் கொள்ளும் வகையில் சிறிய பாக்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 சுவிட்ச் கியர்

சுவிட்ச் கியர்

சுவிட்சுகள் மற்றும் பிளாஸ்டிக் தரம் நன்றாக இல்லை. வடிவமைப்பும் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், சுவிட்சுகளை எளிதாக இயக்க முடிகிறது. கைப்பிடிகள் பிடிமானம் நன்றாக இருக்கிறது. பார்க்கிங் மற்றும் எல்இடி பைலட் விளக்குகள் உள்ளன.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஸ்கூட்டர் மாடலில் 8 பிஎச்பி பவரையும், 8.5 என்எம் டார்க்கையும் அளிக்கும் 109.6சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 85 கிமீ வேகம் வரை அதிக அதிர்வுகள் இல்லாமல் எளிதாக எட்டுகிறது. குறைந்த தூரம் மட்டுமே டெஸ்ட் டிரைவ் செய்ததால், இதன் உண்மையான மைலேஜ் விபரத்தை கணக்கிட இயலவில்லை. லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என மஹிந்திரா தெரிவிக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் பர்கண்டி வண்ணங்களில் கிடைக்கிறது. டிஎக்ஸ் மற்றும் விஎக்ஸ் என்ற இரு மாடல்களில் வருகிறது. பேஸ் மாடலில் ஃப்ளிப் கீ மற்றும் ஃபைன்ட் மீ லேம்ப் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

ஃப்ளிப் கீ

ஃப்ளிப் கீ

செஞ்சூரோ பைக் போன்றே இந்த புதிய ஸ்கூட்டரும் ஃப்ளிப் கீ வசதியுடன் வந்துள்ளது. சிறிய எல்இடி விளக்கு கொடுக்கப்பட்டிருப்பதால் சாவி துவாரத்தை இருளிலும் எளிதாக கண்டுகொண்டு ஸ்டார்ட் செய்ய முடியும்.

 ஒப்பீடு

ஒப்பீடு

மார்க்கெட் லீடரான ஆக்டிவா 110, டிவிஎஸ் ஜுபிடர், மேஸ்ட்ரோ ஆகிய ஸ்கூட்டர்களுடன் ஓர் சிறிய ஒப்பீடு.

பணத்திற்கு மதிப்பு

பணத்திற்கு மதிப்பு

கொடுக்கும் பணத்திற்கு சிறந்த வசதிகளுடன் கூடிய ஓர் புதிய ஸ்கூட்டர் மாடலை கொடுக்க மஹிந்திரா முனைந்துள்ளது. ஹோண்டா ஆக்டிவாவுக்கு போட்டியை கொடுக்க ஓர் ஸ்திரமான மாடலை மார்க்கெட்டில் இறக்கும் நோக்கோடு இந்த ஸ்கூட்டரை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பிற மஹிந்திரா மாடல்களைவிட ஓர் சிறந்த மாடல் என்பதில் மாற்று கருத்தில்லை.

Most Read Articles
English summary
The scooter has been built and developed from ground up by Mahindra engineers. From the look and feel of it, Mahindra has definitely outdone themselves in this instance. The Gusto is unique to Mahindra in terms of styling and cannot be mistaken for anything else.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X