"முழு போஜனம்"!... இந்தியன் சீஃப் விண்டேஜ் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Posted By:

நீண்ட தூர பயணங்களுக்கான க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் அமெரிக்க நிறுவனங்கள் நெடிய பாரம்பரியம் கொண்டவை. அந்நாட்டு க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு உலக அளவில் திரளான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் பிரிமியம் ரக பைக்குகளுக்கும், க்ரூஸர் மோட்டார்சைக்கிளுக்கும் ஏற்பட்டிருக்கும் வரவேற்பை பார்த்து பல வெளிநாடு நிறுவனங்கள் தொடர்ந்து கால் பதித்து வருகின்றன.

இந்த வரிசையில், க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் பாரம்பரிமிக்க அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கியுள்ளது. பழமையான டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களின் கலவையாக வரும் உயர்ரக இந்தியன் க்ரூஸர் மோட்டார்சைக்கிள்கள் இந்தியர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்தியன் ஸ்கவுட், சீஃப் கிளாசிக், சீஃப் விண்டேஜ், சீஃப்டெயின் மற்றும் ரோட்மாஸ்டர் ஆகிய மோட்டார்சைக்கிள்களை மாடல்களை இந்தியாவில் அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், இந்தியன் சீஃப் விண்டேஜ் மோட்டார்சைக்கிளை சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அந்த அனுபவத்தை இந்த செய்தித் தொகுப்பில் பகிரந்து கொண்டுள்ளோம்.

1.டெஸ்ட் டிரைவ்

1.டெஸ்ட் டிரைவ்

இந்தியன் சீஃப் விண்டேஜ் எப்படியிருக்கிறது, இதன் சாதக, பாதகங்கள் என்னென்ன என்பதை இந்த தொடர்ந்து ஸ்லைடரில் காணலாம்.

2.டெஸ்ட் டிரைவ் மாடல்

2.டெஸ்ட் டிரைவ் மாடல்

மாடல்: 2014 இந்தியன் சீஃப் விண்டேஜ்

எஞ்சின்: 1,811சிசி வி- ட்வின்

கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு மேனுவல்

இடம்: தானே, மஹாராஷ்டிரா

விலை: ரூ.28,49,600 எக்ஸ்ஷோரூம், டெல்லி.

3.டிசைன்

3.டிசைன்

தனித்துவமான டிசைன், பிரம்மாண்டம், வசதிகள் என வாடிக்கையாளர்களுக்கு முழு போஜனத்தை தருவதாக இருக்கின்றன இந்தியன் நிறுவனத்தின் தயாரிப்புகள். ஒவ்வொரு அங்கமும், தங்க ஆபரணம் போல் ரசிக்க வைக்கிறது. குரோம் பாகங்களின் எண்ணிக்கை தூக்கலாகவே இருப்பதும் கவனத்தை ஈர்க்கும் விஷயம். வைன்ட்ஷீல்டு, பெரிய மட்கார்டு, குரோம் கண்ணாடிகள் என அனைத்தும் சிறப்பு சேர்க்கின்றன.

4.டிசைனுக்கு வலுசேர்க்கும் ஆக்சஸெரீகள்

4.டிசைனுக்கு வலுசேர்க்கும் ஆக்சஸெரீகள்

இந்த பழமையான டிசைன் கொண்ட க்ரூஸர் மோட்டார்சைக்கிளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கூடுதல் ஆக்சஸெரீகள்தான் பிரம்மாண்ட தோற்றத்தையும், கவர்ச்சியையும் அளிக்கின்றன. பிரிமியம் லெதர் இருக்கைகள், சேடில் பேக்குகள், புகைப்போக்கி குழாய்கள், என ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் பிரிமியம் பாகங்கள் பளிச்சிடுகின்றன.

5. எஞ்சின்

5. எஞ்சின்

இந்தியன் சீஃப் விண்டேஜ் மோட்டார்சைக்கிளில் அதிசக்திவாய்ந்த 1,811சிசி வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதனை தண்டர்ஸ்ட்ரோக் 111 எஞ்சின் என்று பரவலாக குறிப்பிடுகின்றனர். அதிகபட்சமாக 100 பிஎச்பி சக்தியையும், 138.9 என்எம் டார்க்கையும் அளிக்கும் வல்லமை கொண்டது இந்த எஞ்சின். இதன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் எஞ்சின் ஆற்றல் சக்கரத்திற்கு கடத்தப்படுகிறது. இது பெல்ட் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

 6. சிறப்பு தொழில்நுட்ப வசதிகள்

6. சிறப்பு தொழில்நுட்ப வசதிகள்

இந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. க்ரூஸ் கன்ட்ரோல், கீ லெஸ் ஸ்டார்ட் (புஷ் பட்டன் ஸ்டார்ட்), தேவைப்படும்போது எளிதாக கழற்றும் வசதி கொண்ட விண்ட்ஷீல்டு, சேடில் பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும்போதே, ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் விருப்பம்போல் கஸ்டமைஸ் செய்து கொடுக்கப்படுகிறது.

7.கையாளுமை

7.கையாளுமை

364 கிலோ எடை கொண்ட இந்த மெகா மோட்டார்சைக்கிளை மும்பை போக்குவரத்து நெரிசலில் வைத்து ஓட்டுவது கடினமாக இருக்கும் என்று எண்ணினோம். மோட்டார்சைக்கிளை நகர்த்தும் வரைதான் கனமாக தெரிகிறது. ஓட்டும்போது மிக எளிதாகவே இருந்தது. சிக்னலில் நிற்கும்போதும், பைக்கை கிளப்பும்போதும் மட்டுமே சிறிது கனமான உணர்வை தந்தது. இதுபோன்ற மோட்டார்சைக்கிள்களை வாங்குவோர் நகர்ப்புறத்தை விட நீண்ட தூர பயணங்களின்போதே அதிகம் பயன்படுத்துவர் என்பதால் இது பெரும் பிரச்னையாக குறிப்பிட முடியாது.

 8.சிறப்பான எஞ்சின்

8.சிறப்பான எஞ்சின்

போக்குவரத்து நெரிசலில் ஓட்டும்போது இதன் 'ஏர்கூல்டு' எஞ்சின் அதிக சூடாகும் என்று கருதி ஸ்டார்ட் செய்தோம். ஆனால், எதிர்பார்த்த அளவு சூடாகும் பிரச்னை இல்லை. இதில், பெரிய ஃபுட் போர்டு கொடுக்கப்பட்டுள்ளதால், நீண்ட தூர பயணங்களின்போது கால்களுக்கு சோர்வு தராத பயணத்தை வழங்கும் எனலாம். இந்த பைக்கை வாங்குபவர்கள் கொஞ்சம் உடல் வலிமை இருப்பதும் அவசியமாக தோன்றுகிறது.

பிரேக், சஸ்பென்ஷன்

பிரேக், சஸ்பென்ஷன்

முன்புறத்தில் 4 காலிபர்கள் மற்றும் 300மிமீ டியூவல் ஃப்ளோட்டிங் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. பிநன்புறத்தில் 4 பிஸ்டன் காலிபர்கள் மற்றும் 300மிமீ டிஸ்க் கொண்ட ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அமைப்பு கொண்டிருக்கிறது. அதிசக்திவாய்ந்த இந்த மோட்டார்சைக்கிளை கட்டுப்படுத்துவதற்கு இந்த பிரேக் அமைப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது. முன்புறத்தில் 46 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிர்வுகள் இல்லா பயணத்தை தருகின்றன இந்த சஸ்பென்ஷன் அமைப்பு.

 9.கவர்ந்திழுக்கும் டிசைன்

9.கவர்ந்திழுக்கும் டிசைன்

சாலையில் செல்லும்போது அனைவரின் கவனத்தையும் நம் மீது திரும்ப செய்கிறது இதன் டிசைன். பிரபலத்தை பேட்டி காண்பது போன்று அனைவரும் வந்து வினவுகின்றனர். இதன் பிரம்மாண்ட தோற்றம் அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது.

பிடித்த விஷயம் - 1

பிடித்த விஷயம் - 1

முன்புற மட்கார்டில் கொடுக்கப்பட்டிருக்கும் பெருமைமிகு ரெட் இந்தியன் ஆபரண சின்னம் மிகவும் தனித்துவத்துமானது. கண்ணாடியிலும், தலைக்கவசம் குரோம் அலங்காரத்திலும் இந்த சின்னம் வசீகரிக்கிறது. 1947ம் ஆண்டு முதல் இந்த சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக இந்தியன் நிறுவனம் பெருமை கூர்கிறது.

பிடித்த விஷயம் - 2

பிடித்த விஷயம் - 2

இந்தியன் சீஃப் விண்டேஜ் மோட்டார்சைக்கிளின் வைன்ட்ஷீல்டும் மிக முக்கிய பயன்பாட்டை வழங்குவதுடன், பிரம்மாண்டமான தோற்றத்தையும் வழங்குகிறது. நீண்ட தூர பயணங்களின்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிடித்த விஷயம் -3

பிடித்த விஷயம் -3

லெதர் சேடில் பேக்குகள் நீண்ட தூர பயணத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், இதன் டிசைன் மோட்டார்சைக்கிளுக்கு அலங்காரமான ஆக்சஸெரீயாகவும் கூறலாம். சேடில் பேக்கை பார்த்தவுடனே இது இந்தியன் மோட்டார்சைக்கிள்தான் என்று எளிதாக கூறமுடியும்.

பிடித்த விஷயம் - 4

பிடித்த விஷயம் - 4

பெட்ரோல் டேங்கில் குரோம் அலங்காரத்தில் வீற்றிருக்கும் இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் சிறிய டிஜிட்டல் டிஸ்ப்ளேவும் கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டார்சைக்கிளை ஓட்டிச் செல்லும்போது பார்ப்பதற்கு எளிதாக பார்க்க முடிகிறது.

 குறைகள் - 1

குறைகள் - 1

கைப்பிடியில் பல சுவிட்சுகள் இருப்பதால் இயக்கும்போது குழப்பத்தை தருகிறது. மோட்டார்சைக்கிளின் பிரம்மாண்டத்துடன் ஒப்பிடும்போது இதன் கைப்பிடிகள் மிகவும் சிறியதாக இருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது. இன்னும் சற்று நீளமாக இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும்.

குறைகள் - 3

குறைகள் - 3

இருக்கைகள் மிகச்சிறப்பான இடவசதியையும், சொகுசான அனுபவத்தையும் தருகின்றன. நீண்ட தூர பயணங்களின்போது அலுப்பை தராத வகையில், இருக்கின்றன. ஆனால், பின்னால் அமர்பவருக்கு ஏதுவாக பேக் ரெஸ்ட் இல்லாதது குறையாக தெரிகிறது. மேலும், அதிசக்திவாய்ந்த இந்த மோட்டார்சைக்கிளை வேகமாக கிளப்பினால், பின்புறத்தில் இருப்பர் நழுவி விழுவதற்கும் வாய்ப்புள்ளது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் கிளைடு, டிரையம்ஃப் தண்டர்பேர்டு எல்டி, ஹோண்டா கோல்டுவிங், சுஸுகி எம்1800ஆர் ஆகிய மாடல்களை போட்டியாளர்களாக குறிப்பிடலாம். இருப்பினும், போட்டியாளர்களைவிட மிகவும் தனித்துவமான தோற்றமும், சக்திவாய்ந்த எஞ்சின், வசதிகள் இந்த பைக்கிற்கு அதிக வலுசேர்க்கின்றன.

 இந்தியன் நிறுவனத்தை பற்றி...

இந்தியன் நிறுவனத்தை பற்றி...

1901ம் ஆண்டு இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை ஜார்ஜ் எம். ஹெண்டி மற்றும் ஆக்கர் ஹெட்ஸ்ட்ரோம் ஆகியோர் துவங்கினர். அமெரிக்காவின் மாசாசூசெட்ஸில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்டு என்ற இடத்தில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. சீஃப் மற்றும் ஸ்கவுட் ஆகிய மோட்டார்சைக்கிள்கள் இதன் பிரபலமான மாடல்களாக குறிப்பிடலாம். இந்த நிறுவனம் பல்வேறு உரிமையாளர்கள் வசம் இருந்து வந்தது. 2011ல் அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் இந்தியன் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இந்தியன் மோட்டார்சைக்கிளின் பாரம்பரியம் பிறழாமல் மிகச்சிறப்பாக நிர்வகித்து வருகிறது போலரிஸ்,

யாருக்கு பெஸ்ட்?

யாருக்கு பெஸ்ட்?

தனித்துவத்தை விரும்பும் செல்வந்தர்களின் முதல் சாய்ஸாக கூறலாம். தோற்றம், சொகுசு, வசதிகள் போன்றவை இதனை ஓர் முழுமையான க்ரூஸர் பைக்காக கூறலாம்.

 

English summary
America has a long history of cruiser motorcycle manufacturers. Out of many, a popular brand that has stood the test of time is Indian Motorcycle. They specialise in retro-modern cruisers that will leave most observers drooling.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark