ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

ட்ரையம்ஃப் நிறுவனத்தின் போனிவில் மோட்டார்சைக்கிள் வரிசையில் மிக பிரபலமான மாடல் ட்ரையம்ஃப் பாபர். போனிவில் வரிசையிலேயே மிகவும் உயர்தரமான மாடலாகவும் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ட்ரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளுக்கு அடுத்து மிகவும் அழகான கஃபே ரேஸர் மாடலாகவும் ட்ரையம்ஃப் பாபரை பைக் பிரியர்கள் குறிப்பிடுவதுண்டு. ட்ரையம்ஃப் நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகவும் தனித்துவம் கொண்ட மாடலாகவும் கூறலாம்.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த புதிய போனிவில் பாபர் மோட்டார்சைக்கிளை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. அதில், இந்த மோட்டார்சைக்கிளை ஓட்டியபோது கிடைத்த அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் வித்தியாசமான டிசைன் பார்ப்போரை வசியம் செய்கிறது. முரட்டுத்தனமான கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிளாக கூறும் அளவுக்கு கம்பீரமாக காட்சி தருகிறது. தேவையில்லாத, அலங்கார ஆக்சஸெரீகளை எடுத்துவிட்டு, ஒரு உண்மையான பாபர் பாரம்பரிய மோட்டார்சைக்கிளாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளின் அழகுகுக்கு முத்தாய்ப்பான விஷயம் இதன் ஒற்றை இருக்கை அமைப்புதான். இந்த இருக்கை மோட்டார்சைக்கிளுக்கு வித்தியாசமான டிசைன் தாத்பரியத்தை அளித்துள்ளது.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் பழமையை நினைவூட்டும் விதத்தில், வட்ட வடிவ ஹெட்லைட் பொருத்தப்பட்டு இருப்பதுடன், ஹாலஜன் பல்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட் பழமையை நினைவூட்டினாலும், இதன் டெயில் லைட், இன்டிகேட்டர்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இருக்கையின் கீழாக மோனோ ஷாக் அப்சார்பர் வெகு நேர்த்தியாக பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புற சக்கரம் தனியாக பிணைக்கப்பட்டது போன்ற ஸ்விங் ஆர்ம்களில் பொருத்தப்பட்டு இருக்கிறது. பேட்டரியை மூடுவதற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெட்டியும், இரட்டை புகைப்போக்கி குழல்களும் இந்த மோட்டார்சைக்கிளின் இதர அம்சங்கள்.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் ஒற்றை டயலுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில், அனலாக் ஸ்பீடோ மீட்டரும், கீழே உள்ள திரையில் டாக்கோமீட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், ட்ரிப் மீட்டர், நிகழ்நேர மைலேஜ் பற்றிய தகவல், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் பயணிக்கலாம் போன்ற தகவல்களை பெற முடியும்.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் குட்டையான ஃபென்டர் அமைப்பும், கத்தரிக்கப்பட்டது போன்ற மட்கார்டு போன்றவையும் இதற்கு பாபர் ஸ்டைல் மோட்டார்சைக்கிளாக காட்டுகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மொரெல்லோ என்ற விசேஷ சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. இந்த பெட்ரோல் டேங்க் பார்க்க பிரம்மாண்டமாக தெரிந்தாலும், வெறும் 8.5 லிட்டர் மட்டுமே கொள்ளளவு கொண்டது.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ட்ரையம்ஃப் நிறுவனத்தின் போனிவில் டி120 மற்றும் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1,200சிசி எஞ்சின்தான் இந்த மோட்டார்சைக்கிளிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்பு கொண்ட 1,200சிசி ஹை டார்க் எஞ்சின் அதிகபட்சமாக 76 பிஎச்பி பவரையும், 106 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் இக்னிஷன் அமைப்பு பெட்ரோல் டேங்கிற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறையும் பழமையான மோட்டார்சைக்கிள்களுக்கு உரிய பாங்காகவும், தனித்துவமாகவும் கூற முடியும்.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் பழமையை பரைசாற்றும் டிசைன் அம்சங்கள் இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியில் மாடர்ன் மோட்டார்சைக்கிளாகவே கூற முடியும். இந்த மோட்டார்சைக்கிளில் ரைடு பை ஒயர் தொழில்நுட்பத்தின் மூலமாக ஆக்சிலரேட்டர் இயக்கம் நடக்கிறது. ரோடு மற்றும் ரெயின் என்ற இருவிதமான நிலைகளில் பயன்படுத்தக்கூடிய ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிிறது.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளின் க்ளட்ச் இயக்குவதர்கு மிக மென்மையாக இருப்பதுடன், டார்க் அசிஸ்ட் தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால் நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு மிக எளிதான அனுபவத்தை தருகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் அதிக டார்க் திறனை வழங்கும் எஞ்சின் ஓவர்டேக் செய்வதை மிக எளிதாக்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டிவிடும் என்பதுடன், மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதுபோன்ற சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள்களில் எஞ்சின் வெப்பமடையும் போக்கு அதிகம் இருக்கும். இந்த மோட்டார்சைக்கிளின் எஞ்சின் வெப்பம் கால்களுக்கு தொந்தரவை கொடுத்தாலும், பெரிய அளவிலான பாதிப்பை தருவதாக சொல்ல முடியாது.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளின் இருக்கையின் வடிவமைப்பானது நீண்ட தூர பயணத்திற்கு சற்று பிரச்னையாக இருக்கும் என்று உணர முடிந்தது. நீண்ட தூர பயணத்திற்கு ஏதுவானதாக இல்லை. அதேநேரத்தில், இருக்கையின் அமைப்பை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிள் 228 கிலோ எடை கொண்டுள்ளது. அதிக எடை கொண்ட மோட்டார்சைக்கிளாக இருந்தாலும், வளைவுகளில் மிக எளிதாக திரும்புகிறது. அதேநேரத்தில், வளைவுகளில் சாய்த்து ஓட்டும்போது ஃபுட் பெக்குகள் தரையில் உரசுவதால் கவனமாக செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் பொருத்தப்பட்டருக்கும் அவோன் கோப்ரா டயர்கள் சிறந்த தரைப்பிடிப்பை வழங்குகிறது.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிள் நெடுஞ்சாலையில் சராசரியாக லிட்டருக்கு 28 கிமீ மைலேஜையும், நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜையும் கொடுத்தது. இதுபோன்ற சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிளில் இந்தளவு மைலேஜ் தருவது ஆச்சரியத்தக்க விஷயமாகவே கூற முடியும்.

டெஸ்ட் டிரைவ் எடிட்டர் கருத்து

டெஸ்ட் டிரைவ் எடிட்டர் கருத்து

மொத்தத்தில் ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிளின் ஃபிட் அண்ட் ஃபினிஷ் தரம், டிசைன், செயல்திறன் ஆகியவை மிக சிறப்பாக இருக்கிறது. தனித்துவமான டிசைன் இதற்கு வலு சேர்க்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ரூ.9.09 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ட்ரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் சில குறைகளும் உண்டு. கடினமான சஸ்பென்ஷன் அமைப்பு நீண்ட தூர பயணங்களின்போது சொகுசான உணர்வை தரவில்லை. அதேநேரத்தில், மிகவும் தனித்துவமான பிரிமியம் ரக மோட்டார்சைக்கிளை விரும்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக கூறலாம்.

English summary
We took the Triumph Bonneville Bobber for a short spin in the city and also on the open tarmac to see what exactly the #Bobberlifestyle is, and here is what we have to say about it.
Story first published: Tuesday, August 22, 2017, 10:16 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark