2018 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

2018 ஹார்லி டேவிட்ச:ன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை இப்போது படிக்கலாம்.

By Saravana Rajan

வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் மேம்படுத்தப்பட்ட 2018 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிளை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். அப்போது கிடைத்த அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

2018 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் சாஃப்ட் டெயில் ரக மோட்டார்சைக்கிள் FXST மாடலானது 1984ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தனித்துவமான டிசைன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்ததால், வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது.

2018 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இருக்கைக்கு கீழே,வெளியில் தெரியாதபடி பின்புற ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்படும் மோட்டார்சைக்கிள்களை சாஃப்ட் டெயில் என்ற ரகத்தில் ஹார்லி டேவிட்சன் குறிப்பிடுகிறது. மேலும், சாஃப்ட் டெயில் என்ற வார்த்தைக்கும் காப்புரிமையை பெற்றிருக்கிறது.

2018 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வாடிக்கையாளர் இந்த வகை சாஃப்ட் டெயில் ரக மாடல்களுக்கு அளித்த வரவேற்பை பார்த்து, பல மோட்டார்சைக்கிள்களை ஹார்லி டேவிட்சன் அறிமுகம் செய்தது. அதில், வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடல்தான் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப். சரியான விலை, அசத்தும் டிசைன் அம்சங்களுடன் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் விற்பனையிலும் முக்கிய மாடலாக விளங்குகிறது.

2018 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தலைமுறை மாற்றத்திற்கு தக்கவாறு அவ்வப்போது நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வரும் இந்த மோட்டார்சைக்கிள் தற்போது 2018ம் ஆண்டு மாடலாக இந்தியாவில் விற்பனையில் இருந்து வருகிறது.

டிசைன்:

டிசைன்:

முதல் பார்வையிலேயே சொக்க வைக்கிறது புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிள். பாபர் ரக மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்து மாற்றியது போல ஒரு தோற்றத்தை பெற்றிருக்கிறது. குறிப்பாக, உயர்த்தப்பட்ட ஹேண்டில்பார் அமைப்பானது, இந்த மோட்டார்சைக்கிளின் தோற்றத்திற்கு கூடுதல் வசீகரத்தை ஏற்படுத்தி தருகிறது.

புதிய ஃப்ரேம்:

புதிய ஃப்ரேம்:

இந்த புதிய மோட்டார்சைக்கிளில் புதிய ட்யூப்லர் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே விற்பனையில் இருந்த டைனா ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிளைவிட, இந்த புதிய ஃப்ரேம் அதிக உறுதித்தன்மையும், இலகு எடை கொண்டதாகவும் இருக்கிறது. பின்சக்கரத்தை ஃப்ரேமுடன் இணைக்கும் ஸ்விங் ஆர்ம் அமைப்பு புதிது என்பதால் சற்று நீளமாகவும் தெரிகிறது.

2018 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் கண்ணீர்த் துளியை பிரதிபலிக்கும் விதத்திலான பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. மிக நேர்த்தியான வடிவமைப்பை பெற்றிருப்பதுடன், ஆலிவ் க்ரீன் என்ற வண்ணத்தில் இந்த மோட்டார்சைக்கிளின் வசீகரம் ஒருபடி மேலே நிற்கிறது.

புதிய ஹெட்லைட்:

புதிய ஹெட்லைட்:

புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிளில் புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்:

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்:

இந்த மோட்டார்சைக்கிளில் எல்சிடி திரையுடன் கூடிடய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்று இருக்கிறது. பகல்வேளையிலும் துல்லியமாகவும், தெளிவாகவும் காட்டுகிறது இந்த எல்சிடி திரை.

வண்டியின் வேகம், எரிபொருள் அளவு, கியர் பொசிஷன் மற்றும் பல்வேறு தகவல்களை பெற உதவுகிறது. இடதுபுற கைப்பிடியில் மெனுவை இயக்குவதற்கான வசதிகொடுக்கப்பட்டு இருக்கிறது. மெனுவில் உள்நுழையும்போது ஓடிய தூரம், டிரிப் மீட்டர் மற்றும் டாக்கோமீட்டர் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

புஷ் பட்டன் ஸ்டார்ட்:

புஷ் பட்டன் ஸ்டார்ட்:

இந்த மோட்டார்சைக்கிளில் சாவி போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்யும் அவசியம் இல்லை. வண்டியின் அருகில் அல்லது பாக்கெட்டில் சாவி இருந்தாலே, பட்டனை அழுத்தி ஸ்டார்ட் செய்ய முடியும். இந்த மோட்டார்சைக்கிளில் யுஎஸ்பி சார்ஜர் வசதியும் இருக்கிறது.

ஒற்றை இருக்கை:

ஒற்றை இருக்கை:

இந்த மோட்டார்சைக்கிளில் ஒற்றை இருக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது தனித்துவத்தை அளிக்கிறது. எனினும், பின்புறத்தில் கூடுதல் இருக்கையை கூடுதல் ஆக்சஸெரீயாக வாங்கி பொருத்திக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

 எஞ்சின்:

எஞ்சின்:

இந்த மோட்டார்சைக்கிளில் புத்தம் புதிய மில்வாக்கீ 8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 1,750சிசி திறன் வாய்ந்த வி-ட்வின் சிலிண்டர் அமைப்புடைய எஞ்சின் அதிகபட்சமாக 144 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமையை பெற்றிருக்கிறது. வெறும் 1,900 ஆர்பிஎம்.,லேயே இந்த அதிகபட்ச டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமையை இந்த மோட்டார்சைக்கிள் பெற்றிருக்கிறது. இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மிகவும் மென்மையான உணர்வையும், கியர் மாற்றத்தின்போது அதிர்வுகள் இல்லாத வகையில் சிறப்பாக இருக்கிறது.

எஞ்சின் வல்லமை:

எஞ்சின் வல்லமை:

இந்த மோட்டார்சைக்கிள் எஞ்சின் 5,500 ஆர்பிஎம் வரை சுழலும் திறன் பெற்றிருந்தாலும், அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமையை பெற்றிருக்கிறது. இந்த வேகத்தை தொடும்போது காற்று வீச்சு நம்மை பின்னோக்கி தள்ளுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

அசகவுரியம்:

அசகவுரியம்:

இந்த மோட்டார்சைக்கிளில் சக்திவாய்ந்த எஞ்சின் இருப்பதால், எதிர்பார்த்தபடியே அதிர்வுகள் இருக்கிறது. 120 கிமீ வேகம் வரை அதிர்வுகள் பெரிய பிரச்னையாக இல்லை. ஆனால், அதிவேகத்தில் செல்லும்போதுதான் இந்த அதிர்வுகள் அசகவுரியமான உணர்வை தருகிறது. எனினும், சராசரியாக 100 கிமீ வேகம் வரை க்ரூஸ் செய்து ஓட்டுவதற்கு சிறப்பாகவே இருக்கிறது.

சொகுசு:

சொகுசு:

இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் இருக்கை எதிர்பார்த்த அளவு பஞ்சு பொதி இல்லாமல் ஏமாற்றம் தருகிறது. மேலும், நீண்ட நேர பயணத்தின்போது சவுகரியமாக இல்லை. எனவே, வெளிச்சந்தையில் பேக்ரெஸ்ட் கொண்ட இருக்கையை வாங்கி பொருத்திக் கொள்வது பலன் தரும்.

கையாளுமை:

கையாளுமை:

2018 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிள் 300 கிலோ எடை கொண்டது. ஆனால், இந்த மோட்டார்சைக்கிள் போக்குவரத்து நெரிசல் அல்லது வளைவுகளில் மிகச் சிறப்பான கையாளுமையை வழங்குவதும் வியக்கத்தக்க விஷயம். 2,320 மிமீ நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் அசால்ட்டாக வளைவுகளில் திரும்புவது வியக்க வைக்கிறது.

2018 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கிளட்ச் லிவர் சற்றே கடினமான உணர்வை தருகிறது. இதனால், போக்குவரத்து சிக்னல்களில் அடிக்கடி நிறுத்தி எடுக்கும்போது கை விரல்கள் சோர்ந்து போகின்றன. அதேநேரத்தில், எஞ்சின் மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதால், கியரை குறைக்காமலேயே முந்தி செல்ல முடிகிறது. எஞ்சின் முறுக்குவிசை மிகச் சிறப்பானதாக உள்ளது.

மைலேஜ்:

மைலேஜ்:

இந்த மோட்டார்சைக்கிள் நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 15 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் 21 கிமீ மைலேஜையும் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 14 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. முழுமையாக எரிபொருள் நிரப்பினால், 225 கிமீ தூரம் வரை செல்ல இயலும்.

ஷோவா சஸ்பென்ஷன்:

ஷோவா சஸ்பென்ஷன்:

புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிளின் முன்புறத்தில் டியூவல் பெண்டிங் வால்வுகள்கொண்ட புதிய ஷோவா ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இது திடீரென பிரேக் பிடிக்கும்போது சஸ்பென்ஷன் சீராக இயங்குவதற்கு உதவுகிறது. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, இருக்கையின் கீழே வெளியில் தெரியாதபடி இருப்பது இதன் முக்கிய அம்சம்.

பிரேக் சிஸ்டம்:

பிரேக் சிஸ்டம்:

முன்சக்கரத்திலும், பின்சக்கரத்திலும் சிங்கிள் டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டசம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலைவிட இது மேம்படுத்தப்பட்டு இருப்பதால், சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்:

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்:

இந்த சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் பாதுகாப்பாக செல்வதற்கு ஏராளமான நவீன தொழில்நுட்பங்களும், மின்னணு கருவிகளும் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மட்டுமே முக்கிய பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்று இருக்கிறது.

ஏமாற்றம்:

ஏமாற்றம்:

இந்த மோட்டார்சைக்கிளில் டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமே. இதன் பட்ஜெட்டிலான மோட்டார்சைக்கிள்களில் டிராக்ஷன் கன்ட்ரோல் என்பது முக்கிய பாதுகாப்பு விஷயமாக இடம்பெற்று இருக்கும் நிலையில், ஹார்லி டேவிட்சன் இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொண்டிருப்பது ஆச்சர்யமே.

டயர்கள்:

டயர்கள்:

இந்த மோட்டார்சைக்கிளில் 100/90 பி19 அளவுடைய டயர் முன்சக்கரத்திலும், 150/80பி16 அளவுடைய டயர் பின்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த டன்லப் டயர்கள் மிகச் சிறப்பான தரைப்பிடிப்பை வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

டிரைவ்ஸ்பார்க் கருத்து

புதிய ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிளானது விற்பனையில் வழக்கம்போல் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மிக முக்கிய மாடலாக இருக்கும் விதத்தில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை பெற்று வந்திருக்கிறது. டிசைன், எஞ்சின் செயல்திறன் ஆகியவை இந்த மோட்டார்சைக்கிளுக்கு வலு சேர்க்கும் அம்சங்கள். அதேநேரத்தில், விலை சற்றே கூடுதலாக இருப்பது இதன் பாதகமான விஷயம்.

2018 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஹார்லி டேவிட்சன் பிராண்டுதான் வேண்டும் என்பவர்களுக்கு இந்த சாஃப்ட் டெயில் மாடல் நிச்சயம் ஒரு சிறந்த தேர்வாக அமையும். ரூ.12 லட்சம் என்பது இந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு பொருட்டாக கருத முடியாது.

Most Read Articles
English summary
Well, we have just ridden the the all-new 2018 Harley-Davidson Street Bob which is categorised under the 2018 Softail product line.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X