2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

இந்தியாவில் விற்பனையாகும் சில பாபர் ரக மோட்டார்சைக்கிள்களில் வாடிக்கையாளர்களின் கனவு மாடலாக விளங்குகிறது இந்தியன் நிறுவனத்தின் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிள். இந்த புதிய மாடலை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது இந்த மோட்டார்சைக்கிள் குறித்து கிடைத்த அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

 2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

1930களில் மோட்டார்சைக்கிள்களை கஸ்டமைஸ் செய்து அழகு பார்ப்பதில் ஒரு புதுமையாக பாபர் என்ற ரக மோட்டார்சைக்கிள் பாரம்பரியம் துவங்கியது. ஒற்றை இருக்கை, பின்சக்கர மட்கார்டுடன் ஒட்டியபடி கொடுக்கப்படும் நறுக்கப்பட்ட குட்டையான வால்பகுதியுடன் பாபர் ரக மோட்டார்சைக்கிள்கள் கஸ்டமைஸ் செய்யப்பட்டன. இந்த மோட்டார்சைக்கிள்களுக்கு இருந்த வரவேற்பை கண்டு ஜாம்பவான் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் சொந்தமாகவே வெளியிட்டன. அந்த வகையில், வந்த இந்த மாடல் எப்படி இருக்கிறது... வாருங்கள் பார்ப்போம்.

 2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தோற்றத்தை பொறுத்தவரையில் பாரம்பரியும், பழமையும் கலந்த பாபர் ரக மோட்டார்சைக்கிளாகவும், தொழில்நுட்பம் மற்றும் வசதிகளில் நவீன யுக மோட்டார்சைக்கிளாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் மேற்சொன்ன மாற்றங்களுடன் பாபர் ரக மோட்டார்சைக்கிளாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் மற்றும் முக்கிய பாகங்கள் இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளில் இருப்பதுதான். ஆனால், பின் இருக்கை இல்லாமல் ஓட்டுனருக்கு மட்டுமான இருக்கை அமைப்பு, முன்புற மற்றும் பின்புற மட்கார்டுகள் நறுக்கட்ட அமைப்புடன் இருக்கிறது.

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் பின்புற சஸ்பென்ஷன் தாழ்த்தப்பட்டு இருக்கிறது. மேலும், லெதர் இருக்கையுடன், உயர்த்தப்பட்ட கால் வைக்கும் ஃபுட்பெக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிளில் ஸ்ட்ரீட் டிராக்கர் என்ற தாழ்வான அமைப்புடைய ஹேண்டில்பார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் பிரம்மாண்ட டயர்கள் மோட்டார்சைக்கிளின் டிசைன் மிரட்டலாக காட்டுகிறது.

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்கில் புதிய இந்தியன் நிறுவனத்தின் பிராண்டு பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது மோட்டார்சைக்கிளுக்கு கூடுதல் வசீகரத்தை தருகிறது.

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே சக்கரங்கள்தான் இந்த மோட்டார்சைக்கிளிலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் வட்ட வடிவ ஹெட்லைட் இருப்பதுடன் ஹாலஜன் விளக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் டெயில் லைட்டுகளில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அனலாக் மானி மற்றும் சிறிய டிஜிட்டல் திரையுடன் வட்ட வடிவிலான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. எஞ்சின் வெப்பநிலை, எஞ்சின் சுழல் வேகம், பயணித்த தூரம் போன்ற தகவல்களை பெற முடியும். இதில், பெட்ரோல் அளவை காட்டும் கருவி இல்லை என்றாலும், பெட்ரோல் குறைந்துவிட்டதை எச்சரிக்கும் வசதி இருக்கிறது.

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளின் தோற்றம் மிகச் சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. குறிப்பாக, இந்த மோட்டார்சைக்கிளில் பல இடங்களில் ஸ்கவுட் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருப்பது வாடிக்கையாளர்களுக்கு பெருமிதத்தை தரும் விஷயமாக இருக்கும்.

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளில் 1,133சிசி வி-ட்வின், லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் மேட் பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணம் பூசப்பட்டு இருக்கிறது. எஞ்சின் ஹெட் பகுதி க்ரோம் பூச்சுடன் தனித்துவம் பெறுகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் எஞ்சினில் கவுன்ட்டர் பேலன்சர் மற்றும் 8 வால்வு டிஓஎச்சி வால்வுட்ரெயிந் சிஸ்டம் இருப்பதால் சீரான பவர் டெலிவிரியை வழங்கும்.

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளின் வி-ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 98.6 பிஎச்பி பவரையும், 100 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெல்ட் டிரைவ் மூலமாக எஞ்சின் சக்தி பின் சக்கரத்திற்கு கடத்தப்படுகிறது.

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளின் எஞ்சின் நடுத்தர சுழல் வேகத்தில் மிகச் சிறப்பான செயல்திறனையும், சீரான பயண அனுபவத்தையும் வழங்குகிறது. எஞ்சின் செயல்திறன் சிறப்பாக உள்ளதால் அடிக்கடி கியர் மாற்றம் செய்யும் அவசியமில்லை. டார்க் திறனை வெளிப்படுத்துவதில் கில்லியாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் எளிதாக ஓட்ட முடிகிறது.

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளை நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது 110 கிமீ வேகத்தில் க்ரூஸ் செய்து ஓட்டும்போது அலாதியான சுகத்தை பெற முடிகிறது. அதிர்வுகள் குறைவாகவும், சிறப்பான ஓட்டுதல் தரத்தை வழங்குகிறது. ஆக்சிலரேட்டரை முறுக்கினால் 190 கிமீ வேகம் வரை தொட முடியும்.

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சஸ்பென்ஷனும் இதன் ராட்சத தோற்றம் கொண்ட டயர்களும் அருமையான கையாளுமையும், ரோடு க்ரிப்பையும் வழங்குகின்றன. மேலும், ஓட்டும்போது மிக இலகுவாக இருப்பதுடன் தொழில்நுட்ப நேர்த்தி. வளைவுகளில் திரும்பும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டி இருக்கிறது. இதன் கால் வைப்பதற்கான ஃபுட்பெக்குகள் தரையில் உரசும் வாய்ப்பு இருக்கிறது.

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் கேட்ரிட்ஜ் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் உள்ள இரட்டை காயில் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர்கள் மிகச் சிறப்பாக ட்யூன் செய்யப்பட்டு இருக்கின்றன. 245 கிலோ எடை கொண்ட இந்த மோட்டார்சைக்கிளை அனாயசமாக அள்ளி செல்கிறது.

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளின் இருக்கை, ஃபுட்பெக்குகள் மற்றும் ஹேண்டில்பார் அமைப்பு உயரமானவர்கள் நீண்ட தூர பயணிக்கும்போது சவுகரியமாக இருக்காது. முதுகு வலி உள்ளவர்கள் இந்த மோட்டார்சைக்கிள் ஒத்துவராது. இதன் இருக்கை அமைப்பு எல்லோருக்கும் சிறப்பாக இருக்காது என்று கூறலாம்.

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் இரண்டு சக்கரங்களிலும் சிங்கிள் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அத்துடன், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சிறந்த பாதுகாப்பு நுட்பமாக இரு்ககும். இந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிளை அனாயசமாக அடக்கி வைக்கிறது இதன் பிரேக்குகள். அவசர காலங்களில் இந்த பிரேக் சிஸ்டம் சிறப்பான பாதுகாப்பை அளிக்கும்.

புரோமித் கோஷ் கருத்து

புரோமித் கோஷ் கருத்து

"உண்மையான பாபர் ரக மோட்டார்சைக்கிள் பாரம்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாக இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளை கூற முடியும். சில குறைகள் இருந்தாலும் தோரணை, ஓட்டுதல் தரம், எஞ்சின் செயல்திறன் என முக்கிய அம்சங்கள் அனைத்திலும் தன்னிறைவான மாடல். எனினும், ரூ.11.99 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த பைக் சற்றே கூடுதல் விலை கொண்ட மாடலாக இருப்பது இதன் பாதகம்"!

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப், ட்ரையம்ஃப் போனிவில் பாபர் ஆகிய மோட்டார்சைக்கிள்களுடன் போட்டி போடுகிறது. இந்த மோட்டார்சைக்கிள்களில் இந்தியன் ஸ்கவுட் பாபர் நிச்சயம் தனித்துவமான மாடலாக கூறலாம்.

மேலும்... #இந்தியன் #indian #review
English summary
Indian motorcycles have introduced the all-new Scout Bobber, keeping in mind the old-school Bobber styling and modern-day performance. We played around with the motorcycle for a couple of days and here is what we have to say about it.
Story first published: Thursday, April 12, 2018, 15:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark