டெக்னாலஜி, பெர்ஃபார்மென்ஸில் தூள்... எப்படி இருக்கு அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6? ரோடு டெஸ்ட் ரிவியூ!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது முதன்மையான மாடல்களில் ஒன்றான அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் லேட்டஸ்ட் வெர்ஷனை நடப்பாண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த பைக்கை ரேஸ் டிராக்கில் நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது அதன் செயல்திறன் மற்றும் பிஎஸ்-6 வெர்ஷனுக்காக செய்யப்பட்ட புதுப்பிப்புகள் எங்களை வெகுவாக கவர்ந்தது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் 2020 வெர்ஷனில், பெரிய அளவிலான டிசைன் மாற்றங்கள் எதுவுமே செய்யப்படவில்லை. அதே கவர்ச்சிகரமான டிசைன் வழக்கம் போல தொடர்கிறது. ஆனால் செயல்திறனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பை காட்டிலும் செயல்திறன் சிறப்பாக உள்ளது. அதேபோன்று பிஎஸ்-4 மாடல்களில் இருந்த அதிர்வுகள் குறைக்கப்பட்டுள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் பிஎஸ்-6 வெர்ஷனை, சென்னையில் உள்ள எம்எம்ஆர்டி-யில் (MMRT - Madras Motorsport Race Track) நாங்கள் முதலில் ஓட்டி பார்த்தோம். அப்போது இந்த பைக் எங்களை வெகுவாக கவர்ந்தது. எனினும் புதிய அப்டேட்கள், நிஜ உலகில் இந்த பைக்கின் செயல்திறனை பாதித்துள்ளனவா? ஆம், என்றால் எவ்வாறு? என்ற கேள்விகள் மட்டும் எஞ்சி நின்றன.

இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக, 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் பிஎஸ்-6 வெர்ஷன் மீண்டும் எங்கள் கைகளுக்கு சமீபத்தில் கிடைத்தது. பெங்களூரின் போக்குவரத்து நெரிசலில் மட்டுமின்றி, வெவ்வேறு சூழ்நிலைகளின் கீழ், நெடுஞ்சாலைகளிலும் நாங்கள் இந்த பைக்கை ஓட்டினோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

டெக்னாலஜி, பெர்ஃபார்மென்ஸில் தூள்... எப்படி இருக்கு அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6? ரோடு டெஸ்ட் ரிவியூ!

டிசைன் & ஸ்டைல்

ஏற்கனவே குறிப்பிட்டபடி முந்தைய மாடல்களை போலவே, 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கும் அதே டிசைனைதான் பெற்றுள்ளது. என்றாலும் புதிய வண்ண தேர்வு வழங்கப்பட்டுள்ளது. ஷார்ப் ஆன தோற்றம் கொண்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310, அதன் செக்மெண்ட்டில் மிகவும் ஸ்டைலான பைக்குகளில் ஒன்று என்ற பெருமையை தக்க வைத்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட க்ளோஸ்-ப்ளாக் வண்ண தேர்விற்கு பதிலாக, 'டைட்டானியம் ப்ளாக்' என அழைக்கப்படும் ட்யூயல்-டோன் வண்ண தேர்வை டிவிஎஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் வழங்கப்படும் சிகப்பு வண்ண அலங்கார ஸ்டிக்கர்களும் இந்த பைக்கிற்கு கூடுதலான கவர்ச்சியை வழங்குகின்றன.

இந்த புதிய வண்ண தேர்வு தவிர, 2020 அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் மிகவும் புகழ்பெற்ற 'ரேஸிங் ரெட்' வண்ண தேர்வையும் டிவிஎஸ் நிறுவனம் வழங்குகிறது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2017ம் ஆண்டு முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து இந்த வண்ண தேர்வு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னாலஜி, பெர்ஃபார்மென்ஸில் தூள்... எப்படி இருக்கு அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6? ரோடு டெஸ்ட் ரிவியூ!

அதேபோன்று இந்த பைக்கில் சிகப்பு நிற ட்ரெல்லிஸ் ஃப்ரேமும் தொடர்கிறது. ரைடர் இருக்கைக்கு அடியில் இது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிகப்பு நிற ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் எப்போதும் போன்று, 'Race Spec' ஸ்டிக்கரையும் டிவிஎஸ் வழங்கியுள்ளது. அதே சமயம் இந்த பைக்கின் முன் பகுதியில், அதே Bi-LED ஹெட்லேம்ப்கள் தொடர்கின்றன. அதன் கீழாக ரேம் ஏர்-இன்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் பக்காட்டு பகுதியும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் ஷார்ப்பான மடிப்புகள் மற்றும் லைன்களை கொஞ்சம் பார்க்க முடிகிறது. மேலும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபேரிங், வெண்ட்கள் உடன் வருகிறது. இன்ஜினில் இருந்து வெளிவரும் சூடான காற்றை திசைமாற்றி, பைக் ஓட்டுபவரின் கால்களை இது பாதுகாக்கிறது.

இந்த பைக்கின் பின் இருக்கை நன்கு உயரமாக உள்ளது. அத்துடன் பின் பகுதியில் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

டெக்னாலஜி, பெர்ஃபார்மென்ஸில் தூள்... எப்படி இருக்கு அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6? ரோடு டெஸ்ட் ரிவியூ!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் வழங்கப்பட்டுள்ள புதிய வண்ண தேர்வு, இது பிஎஸ்-6 வெர்ஷன் என்பதை அடையாளம் காணவும், பழைய மாடலில் இருந்து வேறுபடுத்தி பார்க்கவும் உதவி செய்கிறது. ஆனால் ரேஸிங் ரெட் வண்ண தேர்வில் உள்ள புதிய அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை, பழைய மாடல் என தவறாக புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இருந்தாலும் ரேஸிங் ரெட் வண்ண தேர்வில் உள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் பிஎஸ்-6 வெர்ஷன், ஸ்டிக்கரிங் மற்றும் பாடி கிராஃபிக்ஸில் சிறிதளவு மாற்றங்களுடன் வருகிறது. அவை மட்டுமே பழைய மாடலில் இருந்து வேறுபடுத்தி பார்க்கும் காரணிகளாக இருக்கும்.

டெக்னாலஜி, பெர்ஃபார்மென்ஸில் தூள்... எப்படி இருக்கு அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6? ரோடு டெஸ்ட் ரிவியூ!

முக்கியமான வசதிகள்

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் டிசைன் பெரிதாக மாற்றப்படாத நிலையில், இந்த பைக்கின் வசதிகள் பட்டியலில்தான் முக்கியமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் பிஎஸ்-6 வெர்ஷன், புதிய வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பெற்றுள்ளது. இது பைக்கை இன்னும் பிரீமியமாக காட்டுவதுடன், முழுமை அடைந்த உணர்வையும் தருகிறது.

புதிய 5.2 இன்ச் முழு கலர் டிஎஃப்டி ஸ்க்ரீன் சேர்க்கப்பட்டிருப்பதை 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6 பைக்கின் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாக கூறலாம். இந்த புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரானது, டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைமுறை 'ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட்' தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது பைக்கை ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைத்து கொள்ள அனுமதிக்கிறது.

பிரத்யேகமான அப்ளிகேஷன் மூலமாக, பைக் தொடர்பான பல்வேறு தகவல்களை ரைடருக்கு இந்த புதிய கனெக்டட் தொழில்நுட்பம் வழங்குகிறது. நேவிகேஷன், சராசரி எரிபொருள் சிக்கனம், கால்ஸ் & மெசேஜ் அலர்ட்கள் மற்றும் சர்வீஸ் இன்ஃபர்மேஷன் உள்பட பல்வேறு ஸ்மார்ட் வசதிகள் இதில் அடங்கியுள்ளன.

மேலும் 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் தற்போது, ரைடு-பை-ஒயர் தொழில்நுட்பத்துடனும் வருகிறது. அர்பன், ரெயின், ஸ்போர்ட்ஸ் மற்றும் டிராக் என நான்கு விதமான ரைடிங் மோடுகளை இது வழங்குகிறது. இது தவிர இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரானது, பிரத்யேகமான 'டே' மற்றும் 'நைட்' மோட்களுடனும் வந்துள்ளது.

டெக்னாலஜி, பெர்ஃபார்மென்ஸில் தூள்... எப்படி இருக்கு அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6? ரோடு டெஸ்ட் ரிவியூ!

அத்துடன் இந்த பைக்கின் ஹேண்டில்பாரில் முற்றிலும் புத்தம் புதிய பட்டன்கள் மற்றும் டாகில் ஸ்விட்சகள் வழங்கப்பட்டுள்ளன. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் காண்பிக்கப்படும் அனைத்து தகவல்களையும் கட்டுப்படுத்துவதற்கான டாகில் ஸ்விட்ச்கள், ஹேண்டில்பாரின் இடது பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. இதே ஸ்விட்ச்களை பயன்படுத்தி, ரைடர்கள் வெவ்வேறு ரைடிங் மோடுகளுக்கும் மாறி கொள்ள முடியும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் முந்தைய வெர்ஷன்களில், இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளேவிற்கு அடுத்தபடியாக 'ஹசார்டு லைட் ஸ்விட்ச்' வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த புதிய வெர்ஷனில் நன்கு வசதியாக ஹேண்டில் பாரின் இடது பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாஸ் லைட் ஸ்விட்ச் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் இந்த பைக்கின் வலது பக்க ஹேண்டில் பாரில், அதிக ஸ்விட்ச்கள் இல்லாமல் தெளிவாக உள்ளது. இக்னீஷன் கண்ட்ரோல்கள் மற்றும் ஒருங்கிணைந்த கில்-ஸ்விட்ச் ஆகியவை மட்டுமே இடம்பெற்றுள்ளன.

டெக்னாலஜி, பெர்ஃபார்மென்ஸில் தூள்... எப்படி இருக்கு அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6? ரோடு டெஸ்ட் ரிவியூ!

இன்ஜின், பெர்ஃபார்மென்ஸ் & ஹேண்ட்லிங்

சென்னை எம்எம்ஆர்டி-யில் 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை ஓட்டியபோது, இது ரேஸ் டிராக்கிற்கு சிறப்பான பைக் என்பதை நிரூபித்தது. அதே போன்ற பெர்ஃபார்மென்ஸை வழக்கமான சாலைகளிலும், இந்த பைக் ரைடர்களுக்கு வழங்கும் என்பதை நாங்கள் இம்முறை சோதனை செய்தபோது நிரூபித்து காட்டியுள்ளது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் வழங்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பிஎஸ்-6 இன்ஜின் 'ஸ்மூத்' ஆக இருப்பதையும், ரீஃபைன்மெண்ட் நன்றாக உள்ளதையும் உடனடியாக கவனிக்க முடிகிறது. முந்தைய வெர்ஷன்களுடன் ஒப்பிடும்போது இன்ஜின் தற்போது மிகவும் சிறப்பாக உள்ளது. அதேபோல் முந்தைய வெர்ஷன்களில் காணப்பட்ட அதிர்வுகள் தற்போது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருப்பதும் மிகவும் சிறப்பான விஷயம். அத்துடன் த்ராட்டில் ரெஸ்பான்சும் மென்மையாக உள்ளது. ஜெர்க்குகள் எதுவும் இல்லை. கியர் மாற்றங்களும் 'ஸ்மூத்' ஆகவே நடைபெறுகின்றன.

டெக்னாலஜி, பெர்ஃபார்மென்ஸில் தூள்... எப்படி இருக்கு அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6? ரோடு டெஸ்ட் ரிவியூ!

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில், அதே 312 சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது ரைடிங் மோடுகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம், ஒவ்வொரு ரைடிங் மோடிற்கும் ஏற்ற வித்தியாசமான செயல்திறன் வெளிப்படுகிறது.

இந்த பைக்கின் அர்பன் மற்றும் ரெயின் மோடுகள், இருப்பதிலேயே மிகவும் குறைவான செயல்திறனை வழங்குகின்றன. இந்த மோடுகளில் பைக்கின் இன்ஜின் அதிகபட்சமாக 7,600 ஆர்பிஎம்மில் 25.4 பிஎச்பி பவரையும், 6,700 ஆர்பிஎம்மில் 25 என்எம் டார்க் திறனையும் மட்டுமே வழங்குகிறது. ஆனால் குறைவான பவர் மற்றும் டார்க் திறன் காரணமாக எரிபொருள் சிக்கனம் மற்றும் கட்டுப்பாடு சிறப்பாக உள்ளது. எனவே தினசரி நகர பயன்பாடுகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

டெக்னாலஜி, பெர்ஃபார்மென்ஸில் தூள்... எப்படி இருக்கு அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6? ரோடு டெஸ்ட் ரிவியூ!

ஆனால் ஸ்போர்ட் மற்றும் டிராக் மோடில், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மிக சிறப்பான பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது. இந்த மோடுகளில், முழுமையான பவர் மற்றும் டார்க் திறனை இன்ஜின் உருவாக்குகிறது. இதன்படி 9,400 ஆர்பிஎம்மில் 34 பிஎச்பி பவரும், 7,700 ஆர்பிஎம்மில் 28 என்எம் டார்க் திறனையும் இன்ஜின் வழங்குகிறது. நெடுஞ்சாலைகளில் ரைடு செல்வதற்கு இது ஏற்றதாக இருக்கும்.

அதே சமயம் க்ளைட் த்ரூ டெக்னாலஜியும் (Glide Through Technology - GTT) இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. பீக் ஹவர்களின்போது, நின்று நின்று செல்லும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சமயங்களில், இந்த தொழில்நுட்பம் உதவி செய்யும்.

இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள வெவ்வேறான ரைடிங் மோடுகள், எரிபொருளை சேமிக்கவும், மைலேஜ் திறனை மேம்படுத்தவும் உதவி செய்கின்றன. அர்பன் மற்றும் ரெயின் மோடுகளில், எங்களுக்கு ஒரு லிட்டருக்கு சுமார் 32 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைத்தது. அதே சமயம் செயல்திறன் சார்ந்த ஸ்போர்ட் மற்றும் டிராக் மோடுகளில், ஒரு லிட்டருக்கு சுமாராக 28 கிலோ மீட்டர் என்ற அளவில் மைலேஜ் கிடைத்தது. பைக்கை அதிவேகத்தில் செலுத்தும்போது கூட இந்த அளவிற்கான மைலேஜ் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னாலஜி, பெர்ஃபார்மென்ஸில் தூள்... எப்படி இருக்கு அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6? ரோடு டெஸ்ட் ரிவியூ!

நெடுஞ்சாலை அல்லது நகர பகுதிகள் என எதுவாயினும், 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் ஓட்டுவதற்கு மிகவும் சௌகரியமாக உள்ளது. அமர்ந்து ஓட்டும் நிலை நன்றாக இருப்பதால், நீண்ட தொலைவு பயணம் செய்வதற்கும் சௌகரியமாகவே இருக்கிறது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் பவர் டெலிவரியானது, பழைய வெர்ஷன்களை போலவே இருந்தாலும், தற்போது நன்றாக மேம்பட்டிருப்பதை உணர முடிகிறது. இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 160 கிலோ மீட்டர்கள். அதனை எளிதாகவே எட்ட முடிகிறது.

இந்த பைக்கின் சஸ்பென்ஸன் அமைப்பானது, முன்பகுதியில் டெலஸ்கோபிக் போர்க்குகள் மற்றும் பின் பகுதியில் மோனோ-ஷாக் வடிவில் வருகிறது. குண்டும், குழியுமான மோசமான சாலைகள் மற்றும் சீரற்ற சாலைகளில் அது சிறப்பாக செயல்படுகிறது. இந்த பைக்கின் முன் பகுதியில் அதே 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன.

டெக்னாலஜி, பெர்ஃபார்மென்ஸில் தூள்... எப்படி இருக்கு அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6? ரோடு டெஸ்ட் ரிவியூ!

அதே சமயம் இந்த பைக்கில் புதிய டயர்களை டிவிஎஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் தற்போது மிஷலின் நிறுவனத்தின் புத்தம் புதிய 'ரோடு 5' ரேஞ்ச் டயர்களுடன் வருகிறது. இரு பக்கமும் இந்த டயர்கள்தான் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அலாய் டிசைன் அப்படியேதான் உள்ளது. இந்த டயர்களில் நல்ல 'க்ரிப்' கிடைக்கிறது. ஈரமான மற்றும் உலர்ந்த என அனைத்து சூழல்களிலும், மிஷலின் ரோடு 5 டயர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. வளைவுகளில் வேகமாக திரும்புவதிலும், பிரச்னைகள் இல்லை.

முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது புதிய மாடல் சுமார் 5 கிலோ எடை கூடியுள்ளது. தற்போதைய மாடலின் எடை 174 கிலோ ஆகும். பொதுவாக வாகனத்தின் எடை கூடினால், பெர்ஃபார்மென்ஸ் பாதிக்கப்படும். ஆனால் எடை கூடியுள்ள சமயத்திலும், அதே வேகமான பெர்ஃபார்மென்ஸ் இந்த பைக்கில் கிடைக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் டிவிஎஸ் நிறுவனம் சிறப்பாக வேலை செய்துள்ளது. அதேபோல் அதிகப்படியான வேகத்தில் செல்லும்போதும், பைக் நிலையாக உள்ளது.

டெக்னாலஜி, பெர்ஃபார்மென்ஸில் தூள்... எப்படி இருக்கு அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6? ரோடு டெஸ்ட் ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் முதலில் ரேஸ் டிராக்கிலும், தற்போது நகர சாலைகளிலும் எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உண்மையில் டிவிஎஸ் நிறுவனம் மிக சிறப்பாக வேலை செய்துள்ளது. முந்தைய மாடல்களில் இருந்த ஒரு சில குறைபாடுகள் தற்போது களையப்பட்டுள்ளன. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 தற்போது மிகவும் 'ஸ்மூத்' ஆக உள்ளது. மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. அத்துடன் பல்வேறு புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் வெறும் 17,000 ரூபாய் என்ற அதிகப்படியான விலையில் டிவிஎஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது தற்போதைய மாடலின் விலை 17,000 ரூபாய் மட்டுமே அதிகம் என்பது ஈர்க்ககூடிய ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. 2020 வெர்ஷனில் செய்யப்பட்டுள்ள அப்டேட்கள் மூலம் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 தற்போது முழுமையான உணர்வை தருவதுடன், பிரீமியமாகவும் இருக்கிறது. 2.45 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) என்ற விலைக்கு மதிப்பு வாய்ந்த மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6 பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
2020 TVS Apache RR310 BS6 Road Test Review - Engine, Performance & Handling. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X