ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ரிவியூ!

2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் நிறுவனம் புதிய கான்செப்ட் பைக்கை காட்சிப்படுத்தியது. அப்போது டிவிஎஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியது அகுலா 310 கான்செப்ட் ஆகும். டிவிஎஸ் நிறுவனம் முறையான Faired பைக் ஒன்றை காட்சிக்கு வைத்தது அதுதான் முதல் முறையாகும். அப்போதே இந்த கான்செப்ட் அனைவரையும் கவர்ந்தது.

இதை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 (TVS Apache RR 310) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை மோட்டார் ரேஸ் டிராக்கில் இந்த பைக்கை முதல் முறையாக நாங்கள் ஓட்டியபோதே, இது எங்களை வெகுவாக கவர்ந்தது. அப்போதே இந்த பைக்கில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டிருந்தன. இருந்தாலும் கூட 2018, 2019 மற்றும் 2020 என அதன்பின் வந்த ஆண்டுகளில் டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை தொடர்ச்சியாக அப்டேட் செய்தது.

இந்த வரிசையில் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் 2021 மாடலை டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதில், வசதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை TVS Built-To-Order பிளாட்பார்ம் மூலமாக வாடிக்கையாளர்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். Dynamic Kit மற்றும் Race Kit என இரண்டு கிட்களையும் இந்த பைக் பெற்றுள்ளது. முன் மற்றும் பின் பகுதிகளில் முழு அளவில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஸனை வழங்கியிருப்பதுதான், புதிய மாடலின் பெரிய அப்டேட்.

சென்னை மோட்டார் ரேஸ் டிராக்கில் மீண்டும் ஒரு முறை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை நாங்கள் டெஸ்ட் ரைடு செய்தோம். இம்முறை நாங்கள் ஓட்டியது 2021 மாடல். இந்த பைக் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ரிவியூ!

TVS Built-To-Order பிளாட்பார்ம்

பைக் பற்றிய தகவல்களுக்கு செல்வதற்கு முன்பாக TVS Built-To-Order பிளாட்பார்ம் பற்றி தெரிந்து கொள்வது முக்கியமானது. இது டிவிஎஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ள அருமையான முயற்சி ஆகும். தொழிற்சாலையிலேயே பைக்கை கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கு இந்த திட்டம் அனுமதிக்கிறது. இணையதளம் சார்ந்த Configurator அல்லது TVS ARIVE ஸ்மார்ட்போன் செயலி மூலம் இதனை செய்யலாம்.

இந்த Configurator-ல் வாடிக்கையாளர்கள் தங்களது பைக்கிற்கு என்ன கிராபிக்ஸ் வேண்டும்? என்பதை தேர்வு செய்யலாம். ரேஸ் நம்பர்களை சேர்க்கலாம். அத்துடன் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில், Dynamic அல்லது Race Kit-டை தேர்வு செய்யலாம். மேலும் அலாய் வீல்களின் நிறத்தை கூட உங்களால் தேர்வு செய்ய முடியும். எனவே தொழிற்சாலையில் இருந்து பைக் வெளியே வரும்போதே உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ரிவியூ!

டிசைன்

சரி, இனி பைக் பற்றிய தகவல்களுக்கு வருவோம். ரேஸ் டிராக்கில் பைக்கை ஓட்டுவதற்கு முன்பாக முதலில் அதன் டிசைனில் டிவிஎஸ் என்ன செய்துள்ளது? என்பதை நாங்கள் பார்த்தோம். உண்மையில் இந்த பைக்கின் டிசைன் எங்களை கவர்ந்து விட்டது. சென்னை மோட்டார் ரேஸ் டிராக்கில் ஓட்டி பார்ப்பதற்காக எங்களிடம் வழங்கப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்குகள், Race Replica Livery உடன் இருந்தது. TVS Built-To-Order பிளாட்பார்ம் மூலம் இதனை பெறலாம்.

மோட்டார்ஸ்போர்ட் அரங்கில் டிவிஎஸ் ரேஸிங் மற்றும் அதன் சாதனைகளின் கொண்டாட்டத்தின் அடையாளம்தான் Race Replica Livery. சிகப்பு, வெள்ளை மற்றும் நீல நிறத்துடன் இது வருகிறது. இது டிவிஎஸ் ரேஸிங்கின் அதிகாரப்பூர்வ வண்ணங்கள் ஆகும். கிட்டத்தட்ட இந்த பைக்கின் அனைத்து பாகங்களிலும், கவர்ச்சிகரமான கிராபிக்ஸ் மற்றும் Decals-களை நீங்கள் பெற முடியும்.

உதாரணத்திற்கு சில Decals-களை இங்கே கூறுகிறோம். TVS Racing, Apache, DOHC, RR 310 போன்ற Decals-களை நீங்கள் பெறலாம். ஹெட்லேம்ப் Fairing-ன் மீது 'Racing Since 1982' என்ற Decal இருந்தது. இவை அனைத்தும் சேர்ந்து இந்த பைக்கிற்கு முறையான ரேஸ் பைக் தோற்றத்தை வழங்குகின்றன. இந்திய சாலைகளில் இந்த பைக் நிச்சயமாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ரிவியூ!

அதே நேரத்தில் நமக்கு நன்கு அறிமுகமான அதே டிசைன் மொழியில்தான் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 உள்ளது. 2017ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து டிசைன் மொழி பெரிதாக மாற்றம் செய்யப்படவில்லை. இந்த பைக்கின் முன் பகுதியில், எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் Bi-LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹெட்லேம்ப்பிற்கு கீழே இருக்கும் Ram Air Intake அமைப்பும் தக்க வைக்கப்பட்டுள்ளது.

ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ரிவியூ!

ஹெட்லேம்ப்பிற்கு மேலே பெரிய விண்டுஸ்க்ரீன் தொடர்ந்து வழங்கப்படுகிறது. அதே சமயம் இந்த பைக்கின் பின் பகுதியில் நமக்கு நன்கு பரிட்சயமான தனித்துவமான எல்இடி டெயில்லைட் இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தம் மாறியுள்ளது. இதை பற்றி பின்னால் பார்க்கலாம். நாங்கள் ஓட்டிய மோட்டார்சைக்கிளில் Race Kit மற்றும் Dynamic Kit பொருத்தப்பட்டிருந்தது. எனவே முழு அளவில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஸன் மற்றும் Aggressive Handlebar ஆகியவற்றுடன் இது வந்தது.

ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ரிவியூ!

வசதிகள்

Race Kit, Dynamic Kit மற்றும் Built To Order பிளாட்பார்ம் ஆகியவற்றை தவிர 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் இன்னும் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. ஸ்டாண்டர்டு பைக்கில் கூட நிறைய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்டேஷனில்தான் புதிதாக சேர்க்கப்பட்ட நிறைய வசதிகளை பார்க்க முடிகிறது. 2020ம் ஆண்டில் இருந்து டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் 5.2 இன்ச் முழு கலர் டிஎஃப்டி திரையுடன் வருகிறது.

இந்த சூழலில் டிவிஎஸ் நிறுவனம் தற்போது மிகவும் பயனுள்ள பல வசதிகளை சேர்த்துள்ளது. இதில், சில வசதிகள் பின்வருமாறு:

 • Digi Docs
 • Dynamic Rev Limit Indicator
 • Day Trip Meter
 • Overspeed Indication
 • இதில், வாகனத்தின் ஆவணங்களை ஸ்டோர் செய்து வைத்து கொள்வதற்கு Digi Docs உதவுகிறது. எனவே நீங்கள் பைக்கில் எங்கு சென்றாலும், ஆவணங்கள் கையிலேயே இருக்கும். காப்பீடு, பதிவு ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் ஸ்டோர் செய்து கொள்ள முடியும். அதே சமயம் ஒரு நாளில் எவ்வளவு தொலைவு பயணம் செய்துள்ளோம்? என்பதை ரைடர் அறிந்து கொள்வதற்கு Day Trip Meter உதவுகிறது. அதே நேரத்தில் செட் செய்து வைத்த வேக வரம்பை கடந்தால், Overspeed Indication ரைடரை எச்சரிக்கும். இந்த வேக வரம்பை ரைடரே தேர்வு செய்து கொள்ளலாம். வேக வரம்பு நிர்ணயம் செய்யப்பட்ட பகுதிகளில் பயணம் செய்யும்போது இந்த வசதி மிகவும் உதவிகரமாக இருக்கும்.

  ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ரிவியூ!

  புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த வசதிகள் தவிர, நாங்கள் மேலே கூறியவாறு டிவிஎஸ் நிறுவனம் Dynamic மற்றும் Race Kit-களையும் அறிமுகம் செய்துள்ளது.

  Dynamic Kit:

  • Fully Adjustable KYB Upside-Down Fork
  • (20-step rebound & compression damping; 15mm pre-load adjustment)

   • Fully Adjustable KYB Monoshock
   • (20-step rebound damping; 15-step pre-load adjustment)

    • Brass-Coated, Anti-Rust Chain
    • விலை 12 ஆயிரம் ரூபாய்
    • Race Kit:

     • Race Ergonomic Handlebar
     • Raised Footrest Assembly
     • Knurled Footpegs
     • விலை 5 ஆயிரம் ரூபாய்
     • புதிதாக இந்த வசதிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரைடு மோடுகள் (ரெய்ன், அர்பன், ஸ்போர்ட் மற்றும் ரேஸ்) தொடர்ந்து வழங்கப்படுகின்றன. இதில், தேர்வு செய்யப்படும் ரைடிங் மோடை பொறுத்து, டிஎஃப்டி திரையின் தீம் மாறும். அத்துடன் நீங்கள் எந்த மோடில் பைக்கை ஓட்டி கொண்டுள்ளீர்களோ? அதை பொறுத்து, பவர் மற்றும் டார்க் அவுட்புட்டும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

      ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ரிவியூ!

      ஓட்டுதல் அனுபவம்

      டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 எப்போதுமே ஓட்டுவதற்கு சிறப்பான பைக்தான். இதன் இன்ஜினும், ரைடிங் பொஷிஷனும் சாதாரண சாலை அல்லது ரேஸ் டிராக் என அனைத்து இடங்களிலும் ரைடரை ஈர்க்க தவறாது. தொலைதூர பயணங்களையும் கூட இந்த பைக்கில் சௌகரியமாக மேற்கொள்ள முடியும்.

      நாங்கள் ஓட்டிய மோட்டார்சைக்கிளில் Race Kit மற்றும் Dynamic Kit என இரண்டும் பொருத்தப்பட்டிருந்தது. இது ரேஸ் டிராக்கில் ஆச்சரியங்களை நிகழ்த்துகிறது. இந்த பைக் உண்மையில் எங்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

      முழு அளவில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஸன் எப்படி உள்ளது? மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வசதிகள் எப்படி உள்ளன? என்பதை தெரிந்து கொள்வதற்காகதான் சென்னை மோட்டார் ரேஸ் டிராக்கில் இந்த ரைடு எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

      பைக்கின் மீது கால்களை தூக்கி போட்டு அமரும் தருணத்திலேயே, ரேஸ் பேக்கேஜ் செய்யும் வித்தியாசத்தை உடனடியாக உணர முடியும். இன்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பாகவே, பைக்கில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள பாகங்கள், கார்னர்களை வேகமாக எதிர்கொள்வதற்கு உதவும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

      ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ரிவியூ!

      தாழ்வாக வழங்கப்பட்ட ஹேண்டில்பார் மற்றும் உயர்வாக வழங்கப்பட்ட Footpegs ஆகியவை ரேஸ் கிட்டில் அடங்கும். இவை இரண்டும் ஏற்படுத்தும் வித்தியாசம் மகத்தானது. ஹேண்டில்பார் சுமார் 5 டிகிரி பின்னுக்கு இழுக்கப்பட்டிருப்பதுடன், சுமார் 8 டிகிரி தாழ்வாக வழங்கப்பட்டுள்ளது. இது நல்ல ரைடிங் பொஷிஷனை வழங்குகிறது. அதே சமயம் சிறப்பான ரைடிங் பொஷிஷன் கிடைப்பதற்கு உயர்வாக வழங்கப்பட்டுள்ள Footpegs-களும் காரணமாக உள்ளன. இந்த ரேஸ் கிட் மூலம் ரேஸ் டிராக்கிற்கு தேவையான ரைடிங் பொஷிஷன் கிடைக்கிறது.

      இதனுடன் முழு அளவில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஸனும் சேர்ந்து கொள்கிறது. டிவிஎஸ் ரேஸிங்கின் சாம்பியன்ஷிப் வென்ற ரைடர்களான கே.ஒய்.அகமது மற்றும் ஜெகன் குமார் டிராக்கில் எங்களை இரண்டு Lap அழைத்து சென்றனர். இந்த இரண்டு Lap-களிலும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் சஸ்பென்ஸன் அதன் Default Setting-ல் இருந்தது. அதிவேகங்களிலும் எங்களால் கார்னர்களில் எளிதாக வளைய முடிந்தது.

      இரண்டு Lap-களையும் நிறைவு செய்த பிறகு நாங்கள் திரும்பி வந்தோம். அப்போது சஸ்பென்ஸன் ரீ-ட்யூன் செய்யப்பட்டது. டிவிஎஸ் ரேஸிங்கின் திறமையான இன்ஜினியர்கள் சஸ்பென்ஸனை ட்யூனிங் செய்தனர். அதன்பின் நாங்கள் மீண்டும் பைக்கை ஓட்டினோம்.

      ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ரிவியூ!

      அப்போது எங்களால் வித்தியாசத்தை உடனடியாக உணர முடிந்தது. குறிப்பாக வளைவுகளில் திரும்பும்போது நம்பிக்கை பல மடங்கு அதிகரிப்பது சிறப்பான விஷயம். ரேஸ் சஸ்பென்ஸன் செட்டிங்கில், 4 Lap-களை நிறைவு செய்த பிறகு மீண்டும் நாங்கள் திரும்பி வந்தோம். அப்போது சஸ்பென்ஸன் அட்ஜெஸ்மெண்ட் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது? என்பதை சிந்திக்க எங்களுக்கு நேரம் கிடைத்தது. ஆனால் உடனடியாக நாங்கள் மீண்டும் டிராக்கிற்கு செல்ல வேண்டியிருந்தது.

      இம்முறை ஒவ்வொரு ரைடரிடமும் சஸ்பென்ஸன் குறித்து டிவிஎஸ் இன்ஜினியர்கள் கேட்டனர். Perfect என்பதுதான் இதற்கு பதில். குறை சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. கையாளுமை மிக சிறப்பாக இருந்தது. அத்துடன் மிச்செலின் ரோடு 5 டயர்கள் மூலம் கையாளுமை இன்னும் மேம்படுகிறது.

      அதே சமயம் ரேஸ் டிராக்கில் இந்த இன்ஜினின் செயல்திறன் மிக சிறப்பாக இருக்கிறது. இந்த இன்ஜின் 34 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் நிலையில், ஆக்ஸலரேஷன் விரைவாக உள்ளது. அதேபோல் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் கியர்களை விரைவாக மாற்ற முடிகிறது. ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் பயனுள்ளதாக உள்ளது. ஒட்டுமொத்தத்தில் கிட்டத்தட்ட ரேஸ் பைக்கிற்கு நெருக்கமாக புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மாறியுள்ளது.

      ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ரிவியூ!

      போட்டியாளர்கள்

      கவாஸாகி நின்ஜா 300 மற்றும் கேடிஎம் ஆர்சி 390 ஆகியவைதான் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் நேரடி போட்டியாளர்கள். ஆனால் ஓசூரில் இருந்து வரும் மோட்டார்சைக்கிள் வழங்கும் சில வசதிகளை, ஜப்பான் மற்றும் ஆஸ்திரியா பைக்குகள் வழங்குவதில்லை.

      கேடிஎம் இந்தியா நிறுவனம் வரும் மாதங்களில் அப்டேட் செய்யப்பட்ட ஆர்சி390 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நிச்சயமாக இதன் விலை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை விட அதிகமாகதான் இருக்கும். அதே நேரத்தில் கஸ்டமைசேஷன் வாய்ப்பை வழங்கியிருப்பது, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கு இன்னும் அதிக வாடிக்கையாளர்களை பெற்று தரலாம். டிவிஎஸ் இம்முறை சாதித்து விட்டதாகவே தெரிகிறது.

      ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ரிவியூ!

      டிரைவ்ஸ்பார்க் கருத்து

      சில ஆண்டுகள் பின்னோக்கி சென்றால், இந்தியாவில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஸன் போன்ற வசதிகள் ஒரு 300 சிசி பைக்கில் அறிமுகம் செய்யப்படும் என்பதை நாம் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. ஆனால் தற்போது நாம் வசதிகள் நிரம்பிய 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்குடன் இருக்கிறோம். இத்தனைக்கும் இதன் விலை அதிகமும் கிடையாது. அத்துடன் அதன் தோற்றமும் தற்போது நன்றாக இருக்கிறது. எனவே வரும் நாட்களில் இந்த பைக்கின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
2021 tvs apache rr 310 review design features riding impressions
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X