இப்படி ஒரு பைக்கை கேள்வியேபட்டிருக்க மாட்டீங்க! ஆனா செமயா இருக்கு, மோட்டோ மோரினி எக்ஸ்-கேப் 650எக்ஸ் ரிவியூ

மோட்டோ மோரினி எக்ஸ்-கேப் 650 எக்ஸ் பைக்கை எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த டெஸ்ட் டிரைவ் குறித்த விமர்சனத்தைக் காணலாம் வாருங்கள்.

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

மோட்டோ மோரினி இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையைத் தொடர்ந்து பின்பற்றி வரும் பலருக்கே இப்படி ஒரு நிறுவனம் இருப்பது தெரியாத. 1937ம் ஆண்டே இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் 350 மற்றும் 500 சிசி ட்வின் சிலிண்டர் பைக்குக்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம். இது ஒரு சீன நிறுவனமான ஸோங்ஹெங் வெஹிகில் க்ரூப் என்ற அமைப்பில் துணை நிறுவனமாகும்.

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

இந்த நிறுவனம் தற்போது 2022ம் ஆண்டு இந்தியாவிற்குள் ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனத்தின் மூலம் நுழைந்துள்ளது. ஆதிஷ்வர் ஆட்டோ என்பது புதிய மோட்டோ வால்ட் மல்டி-பிராண்ட் மோட்டார் சைக்கிள் செட்டப். இந்தியாவில் இந்நிறுவனம் செய்எம்மீஸோ ஸ்கிரம்பிளர், எக்ஸ்-கேப் 650 மற்றும் 650எக்ஸ் அட்வெஞ்சர் ஆகிய பைக்குகளை இந்தியாவிற்குள் விற்பனை செய்கிறது.

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

இதில் மோட்டோ மோரினி எக்ஸ்-கேப் 650 எக்ஸ், பைக்கை டெஸ்ட் ரைடு செய்ய டிரைவ்ஸ்பார்க் குழு ஐதராபாத் சென்றிருந்தது. இந்த பைக் தான் அந்நிறுவனத்தின் முதன்மையான மாடல் பைக். இந்த மோட்டோ மோரினி எக்ஸ்-கேப் 650 எக்ஸ் பைக் மார்கெட்டில் கவாஸகி வெர்சிஸ் 650, சுஸூகி வி -ஸ்டிரோம் 650எக்ஸ்டி மற்றும் டிரையம்ப் டைகர் 660 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளது. இந்த பைக்குகளுக்கு போட்டியாக மார்கெட்டில் ஜெயிக்குமா? விமர்சனத்தைக் காணலாம் வாருங்கள்...

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

டிசைன் மற்றும் அம்சங்கள்

மோட்டோ மோரினி எக்ஸ்-கேப் 650 எக்ஸ் பைக்கின் டிசைனை பொருத்தவரை முற்றிலும் வித்தியாசமான, கவர்ச்சிகரமான வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்பு பகுதியில் ஆங்கிலர் ஹெட் லைட்டுடன் ஹைசெட் ஃபெரிங் மற்றும் அட்ஜெஸ்ட்டபுள் விண்ட் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது.

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

பக்கவாட்டு பகுதியில் வடிவமைக்கப்பட்ட ப்யூயல் டேங்க், ஃபங்கீ எக்ஸாஸ்ட், வைடு ஸ்பிலிட் சீட், ஸ்போக்டு வீல், பாயிண்டு ரியர் எண்ட், ஆகியன இந்த பைக்கின் முக்கியமான அம்சங்கள் இந்த பைக்கின் முக்கியமான அம்சம் பெரிய 7 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே தான். இது ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் வருகிறது. இது பயன்படுத்த கிரிஸ்பாகவும், எளிதாகவும் இருக்கிறது. இதில் மல்டிபிள் தீம்கள் உள்ளது. மேலும் இதில் 2 யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள் உள்ளன.

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

மோட்டோ மோரினி எக்ஸ்-கேப் 650 எக்ஸ் பைக்கின் பில்டு குவாலிட்டியை பொருத்தவரை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரமான பிளாஸ்டிக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சுவிட்ச்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

ஸ்பெக்ஸ்

மோட்டோ மோரினி எக்ஸ்-கேப் 650எக்ஸ் பைக்கை பொருத்தவரை 649 சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 59 பிஎச்பி பவரை 8250 ஆர்பிஎம்மிலும் 54 என்எம் டார்க் திறனை 7000 ஆர்பிஎம்மிலும், வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

இந்த பைக்கில் ஸ்டீல் ட்யூப்லர் ப்ரேம் வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்சனை பொருத்தவரை தலைகீழாக மார்ஸோச்சி ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் கயாபா மோனோ ஷாக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது.

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

இந்த மோட்டார் மோரினி எக்ஸ்-கேப் 650 எக்ஸ் பைக்கின் பிரேக்கிங்கை பொருத்தவரை முன்பக்கம் 4 பிஸ்டன் கேலிபர்களுடன், 298 மிமீ ஃப்ளோட்டிங் டிஸ்க்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பின்பக்கம் 2 பிஸ்டன் கேலிபர்களுடன் 255 மிமீ டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிரேக்குகள் எல்லாம் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

இந்த 650 எக்ஸ் பைக்கில் வீல் செட்டப்களை பொருத்தவரை முன்பக்கம் 19 இன்ச் வீல் மற்றும் பின்புறம் 17 இன்ச் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வீல்களில் பைரெலி ஸ்கார்பியன் எஸ்டிஆர் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 110/80-19 மற்றும் பின்பக்கம் 150/70-17 ஆகிய அளவுகளாலான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

இந்த மோட்டோ மோரினி எக்ஸ்-கேப் 650எக்ஸ் பைக்கை பொருத்தவரை 2200 மிமீ நீளம், 900 மிமீ அகலம், 1390 மிமீ உயரம் கொண்டது. இந்த பைக்கின் வீல் பேஸை பொருத்தவரை 1490 மிமீ நீளம் கொண்டது. இந்த பைக் மொத்தம் 215 கிலோ எடை கொண்டது. 175 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. சீட் தரையிலிருந்து 835 மீமீ உயரத்தில் இருக்கிறது. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் 18 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

ரைடிங் இம்பிரஷன்

மோட்டோ மோரினி எக்ஸ்-கேப் 650 எக்ஸ் பைக்கில் உள்ள 649 சிசி இன்ஜின் 59 பிஎச்பி பவரையும் 54 என்எம் டார்க் திறனையும் வழங்கும் எனத் தெரிவித்துள்ளனர். இது பேப்பரில் தான் இருக்கிறது. ஆனால் வாகனத்தை ஓட்டும் போது அதை விட அதிக பவர் ஃபுல்லாக தெரிகிறது. குறைவான ரேஸ் கொடுக்கும் போது அதிக டார்க் கிடைக்கவில்லை. வாகனம் எதிர்பார்த்ததை விட மெதுவாகத் தான் செல்கிறது. ஆனால் ரேஸ் அதிகமாகக் கொடுத்தால் செம பிக்கப் இருக்கிறது. எதிர்பாராத வேகத்தைக் கொடுக்கிறது.

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

ரோட்டில் இந்த எக்ஸ்கேப் 650 எக்ஸ்பைக்கை ஓட்டும் போது எளிமையாக இருக்கிறது. 100 கி.மீ வேகத்திற்கு மேல் சென்றாலும் பைக் கண்ட்ரோலில் இருக்கிறது. தொடர்ந்து அதே வேகத்தில் செல்ல முடிகிறது. இந்த பைக்கின் ரைடிங் போசிஷன் கமெண்டிங்காக இருக்கிறது. அட்ஜெஸ்டபிள் விண்ட் ஸ்கிரீன் சிறப்பாக இருக்கிறது. எழுந்து நின்று ஓட்டினால் ஃப்யூயல் டேங்க் கிரிப் சிறப்பாக இருக்கிறது.

இந்த பைக்கில் சிறிது நேரம் ஆஃப்ரோடிங்கில் பயணிக்கும் வாய்ப்பும் கிடை்ததது. சதிக்குள்ளும் இந்த எக்ஸ்கேப் 650 எக்ஸ் பைக்கை ஓட்டி பார்த்தோம். ஆஃப் ரோடிங்கிற்கு இது சிறப்பான பைக் என அப்பொழுது தான் எங்களால் உணர முடிந்தது.

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

இந்த பைக்கில் சில நெகடிவ் விஷயங்களும் இருக்கிறது. இதில் உள்ள ட்வின் சிலிண்டர் இன்ஜின் எளிதாக ஹீட்டாகிவிடுகிறது. இந்த சூடு டிராஃபிக் நிற்கும்போது எரிச்சலூட்டுகிறது. வாகனத்தில் சில ரேஸ் ரேஞ்ச்களில் அதிர்வுகள் இருக்கிறது. ஆனால் இது பைக்கை ஓட்ட ஓட்ட பழகிவிடுகிறது.

இப்படி ஒரு பைக்கை யாருமே கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க... ஆனா பைக் செமயா இருக்கு . . . - மோட்டோ மோரினி எக்ஸ் - கேப் 650 எக்ஸ் ரிவியூ . . .

இறுதித் தீர்ப்பு

இந்த மோட்டோ மோரினி எக்ஸ்-கேப் 650 எக்ஸ் பைக் ஒரு முழுமையான அட்வெஞ்சர் பைக், இந்த ரக பைக்கை விரும்புபவர்கள் இந்த பைக்கை நிச்சயம் ஒரு தேர்வாக எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் இந்த பைக்கை ஓட்டினால் தொடர்ந்து ஓட்ட தோன்றும், இப்படிதான் எங்களுக்கும் தோன்றியது.

Most Read Articles
English summary
Adventure bike Moto Morini X cape 650x review
Story first published: Friday, October 14, 2022, 13:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X