நடிகர் அஜீத்தின் புதிய பிஎம்டபிள்யூ கே 1300 எஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்

திறமையான நடிகர் என்ற முத்திரையை தாண்டி கார், பைக் பந்தய வீரராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அஜீத் குமார் தற்போது சூப்பர் பைக்குகளை வாங்கி ஓட்டிப் பார்ப்பதில் அதிக நாட்டம் செலுத்தி வருகிறார். தனது பயணங்கள் தனிப்பட்ட ஒரு சந்தோஷத்தில் முடிந்து போய்விடக்கூடாது என்று எண்ணிய அவர் சமுதாய நலனுக்கு தகுந்தவாறு தனது பயணங்களை நெடியதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றிக் கொண்டுள்ளார்.

ஆம், போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அவர் தொடர்ந்து பைக்குகளில் நீண்ட தூர பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் சென்னையிலிருந்து பெங்களூருக்கு சூப்பர் பைக்கில் சென்ற அவர் அடுத்ததாக, பிஎம்டபிள்யூ கே1300 எஸ் சூப்பர் பைக்கில் புனேயிலிருந்து சென்னைக்கு நெடிய பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். அஜீத் குமாரின் புதிய பிஎம்டபிள்யூ கே 1300எஸ் பைக் பற்றிய முக்கிய அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

முன்னோட்டம்

முன்னோட்டம்

2004ல் அறிமுகம் செய்யப்பட்ட கே1200எஸ் மாடலுக்கு மாற்றாக 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பைக் மாடல்தான் பிஎம்டபிள்யூ கே1300எஸ். குறிப்பாக, எஞ்சின் திறன் மேம்படுத்தப்பட்டு வந்தது. சூப்பர் டூரர் ரகத்தை சேர்ந்த இந்த பைக் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற விசேஷ அம்சங்களை கொண்டது. இந்தியாவில் கே 1300 வரிசையில் ஆர் மற்றும் எஸ் என இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கே1300எஸ் மாடலை அஜீத் வைத்துள்ளார்.

 எஞ்சின்

எஞ்சின்

175 பிஎச்பி ஆற்றலையும், 140 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1293சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு சராசரியாக 19 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 361 கிமீ வரை செல்ல முடியும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சமாக 200 கிமீ வேகத்தில் செல்லத்தக்கது. இருப்பினும், சாலை விதிகள் மற்றும் வேகக்கட்டுப்பாடுகளை அனுசரித்து 1300 கிலோமீட்டர் தொலைவை 19 மணிநேரத்தில் கடந்துள்ளார் அஜீத். வழியில் பெங்களூரில் 3 மணி நேரம் ஓய்வு எடுத்துள்ளார்.

 பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த பைக்கில் 19 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது. 3.5 லிட்டர் ரிசர்வ் வசதி கொண்டது.

எடை

எடை

இந்த பைக் 254 கிலோ எடை கொண்டது. இதில், விசேஷ தன்மை கொண்ட ஸ்போர்ட்ஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிரேக் அமைப்பு

பிரேக் அமைப்பு

முன்புறத்தில் 320 மிமீ விட்டம் கொண்ட ட்வின் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 265 மிமீ விட்டம் கொண்ட சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

 விலை

விலை

பெங்களூரில் ரூ.25 லட்சம் விலை கொண்டதாக கிடைக்கிறது.

விசேஷ ஹெல்மெட்

விசேஷ ஹெல்மெட்

அஜீத் தனது பயணத்தின்போது பயன்படுத்திய ஹெல்மெட் புளூடூத் வசதியும், கேமராவும் கொண்டது.

பயணக் குழு

பயணக் குழு

இந்த பயணத்தின்போது அஜீத் குமாருடன் அவரது நண்பர் மனோகர் மற்றொரு பைக்கிலும், மருத்துவக் குழுவினரும் பின்தொடர்ந்து வந்தனர்.

அஜீத் ஆதங்கம்

அஜீத் ஆதங்கம்

போக்குவரத்து கலாசாரத்தை பார்த்தே ஒரு நாடு எந்தளவு முன்னேறியிருக்கிறது? சொல்லிவிட முடியும். ஆனால், நம் நாட்டில் போக்குவரத்து கலாச்சாரம் இன்னும் முன்னேற வேண்டியிருக்கிறது என்று பயண முடிவில் அஜீத் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X