ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தக்கவாறு பல புதிய மாடல்களும் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், விலை, சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் நிறைவை தரும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஆம்பியர் நிறுவனம் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. ஆம்பியர் மேக்னஸ் புரோ என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸ்கூட்டரை பெங்களூரில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதில், இந்த ஸ்கூட்டரில் இருக்கும் சாதக, பாதகங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்

ஆம்பியர் மேக்னஸ் புரோ ஸ்கூட்டரின் முன்புறத்தை பார்த்தவுடன் ஹோண்டா ஆக்டிவா சாயல் தெரிந்தாலும், உருவத்தில் சற்று அடக்கமாக இருப்பதுடன் டிசைனில் உள்ள சில மாற்றங்கள் தனித்துவத்தை வழங்குகிறது. முன்புற அப்ரான் பகுதியில் வி வடிவிலான க்ரோம் பட்டை அமைப்பு வசீகரத்தை கூட்டுகிறது. அதிலேயே இன்டிகேட்டர்களும் இடம்பெற்றுள்ளன. பின்புற வடிவமைப்பும் எளிமையாக உள்ளது. இதன் கிராப் ரெயில் கைப்பிடி வசீகரத்தை கூட்டுவதுடன், பின்னால் அமர்ந்து செல்பவருக்கு அதிக பிடிமானத்தை வழங்கும்.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எல்இடி லைட்டுகள்

இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் கொண்ட க்ளஸ்ட்டர், டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருப்பதுடன், ஸ்கூட்டரின் வசீகரத்தையும் கூட்டுவதாக அமைந்துள்ளது. சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போல விந்தையான வடிவமைப்பு இல்லாமல், பாந்தமாக இருப்பது இதன் டிசைன் ஹைலைட்டாக குறிப்பிடலாம்.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கிறது. சார்ஜ் அளவு, வாகனத்தின் வேகம் உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை பெறலாம். இது சிறப்பானதாக இருக்கிறது. ஆனாலும், தற்போது வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஸ்மார்ட்ஃபோனுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை இணைய வழியாக இணைத்துக் கொள்ளும் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் வசதி இல்லை. இதனால், நேரடியாக அப்டேட் எதையும் பெற இயலாது.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ரிமோட் கீ

இதன் கீ ஃபாப் மூலமாக ரிமோட் முறையில் இருக்கைக்கு கீழாக இருக்கும் ஸ்டோரேஜ் பகுதியை திறக்க முடியும். அதேபோன்று, இக்னிஷனை ஆன் செய்தவுடன் புஷ் பட்டனை அழுத்தி ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்வதற்கும் வசதி உள்ளது. இது சிறந்ததாக இருக்கும். பேட்டரியானது இருக்கைக்கு கீழ் பகுதியில் இருப்பதால், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட மாடலாக உருவாக்கப்பட்டு இருப்பது சிறப்பு.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பேட்டரி & மின் மோட்டார்

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 60V 30Ah லித்தியம் அயான் பேட்டரியும், 1,200 வாட் மின் மோட்டாரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 முதல் 6 மணிநேரம் பிடிக்கிறது.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஃபாஸ்ட் சார்ஜர் இல்லை

இந்த ஸ்கூட்டரில் மற்றுமொரு குறை என்னவெனில், ஃபாஸ்ட் சார்ஜர் கிடையாது என்பதேயாகும். இது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை தரலாம்.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ரேஞ்ச் எவ்வளவு?

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், சோதனை கள தரவுகளின்படி, 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று ஆம்பியர் தெரிவிக்கிறது. இந்த ஸ்கூட்டரில் Low மற்றும் High என இரண்டு ரைடிங் மோடுகள் உள்ளன. Low மோடில் வைத்தால் 100 கிமீ தூரமும், High மோடில் வைத்து இயக்கினால் 80 கிமீ தூரம் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

செயல்திறனில் வித்தியாசம்

லோ மோடில் வைத்து இயக்கும்போது பவர் டெலிவிரி வெகுவாக குறைவதை உணர முடிகிறது. மேலும், அதிகபட்சமாக மணிக்கு 35 கிமீ வேகத்தை தொட முடிந்தது. ஹை மோடில் வைத்து இயக்கும்போது அதிகபட்ச செயல்திறனை வெளிக்கொணர்கிறது. 55 கிமீ வேகம் வரை செல்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், ரேஞ்ச் தடாலடியாக குறைகிறது. அதாவது, 65 முதல் 70 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை மட்டுமே வழங்குகிறது.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதுதான் பெஸ்ட் ரைடிங் மோடு?

நடைமுறை பயன்பாட்டில் பலருக்கும் ஹை மோடில் வைத்து இயக்குவதற்கே சிறப்பாக கருதலாம். ஏனெனில் செயல்திறன் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு போதுமான ரேஞ்ச் உள்ளதாகவே கூறலாம். மிக குறைந்த தூரம் செல்ல வேண்டி இருந்தால், லோ மோடில் வைத்து இயக்குவது பலன் அளிக்கும்.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சவுகரியமான உணர்வு

இதன் இருக்கை அமைப்பும், கால் வைப்பதற்கான ஃபுட்போர்டு இடவசதியும் மிகச் சிறப்பாக உள்ளன. இதனால், சவுகரியமாக அமர்ந்து ஓட்ட முடிகிறது. இது நிச்சயம் முதல்முறை ஓட்டும்போதே உணரும் விஷயமாக இருக்கிறது.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கையாளுமை

இந்த ஸ்கூட்டர் 82 கிலோ மட்டுமே எடை கொண்டிருப்பதால் ஓட்டுவதற்கு மிக எளிதாக இருக்கிறது. மேலும், 150 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பதால், மேடு பள்ளங்களில் அச்சப்படாமல் ஓட்ட முடிகிறது. ஆண், பெண் இருபாலரும் எளிதாக ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அமைப்பும் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டரில் 10 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் சஸ்பென்ஷன் சிறப்பாக இல்லை. நகரச் சாலைகளை கையாள்வதற்கு இது போதுமானதாக ஆம்பியர் கருதி இருந்தாலம், இன்னும் சிறப்பாக இருந்தால் பயணம் சவுகரியமாக அமையும்.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிரேக் சிஸ்டம்

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இரண்டு சக்கரங்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. டிஸ்க் பிரேக் இல்லை. எனினும், காம்பி பிரேக்கிங் சிஸ்டம் இருப்பதால், இதன் வேகத்திற்கு போதுமானதாகவும், பாதுகாப்பானதாகவும் தெரிகிறது. பிரேக் சிஸ்டம் நன்றாகவே இருப்பதாக சொல்லலாம்.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாரம் சுமக்கும் திறன்

இந்த ஸ்கூட்டர் 150 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சராசரி எடை கொண்ட இரண்டு பேர் பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், செயல்திறன் மற்றும் ரேஞ்ச் ஆகியவற்றில் குறைபாடு ஏற்படுகிறது.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

லிம்ப் டு ஹோம் வசதி

இந்த ஸ்கூட்டரின் மிக முக்கிய வசதியாக, லிம்ப் டு ஹோம் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. சார்ஜ் குறைவாக இருக்கும் நேரங்களில், இந்த ஆப்ஷனில் வைத்து இயக்கும்போது, அதிகபட்ச வேகம் குறைக்கப்பட்ட மிதமான வேகத்தில் செல்லும். இதன்மூலமாக, 10 கிமீ தூரம் வரை சார்ஜ் தீர்ந்து போகாமல் பயணிக்க முடியும். அதாவது, நடுவழியில் ஸ்கூட்டர் நிற்காமல் வீடு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடலாம்.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

விலை & வாரண்டி

பெங்களூரில் ரூ.73,990 எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஆம்பியர் மேக்னஸ் புரோ ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பெங்களூரில் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது. படிப்படியாக பிற நகரங்களிலும் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்ட உள்ளது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரி உள்ளிட்ட பல முக்கிய சாதனங்களுக்கு 3 ஆண்டுகள் அல்லது 20,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மின்சார செலவு

ஆம்பியர் மேக்னஸ் புரோ ஸ்கூட்டரில் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணிப்பதற்கு 15 பைசா மட்டுமே செலவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. சராசரியக ஆண்டுக்கு ரூ.2,700 மட்டுமே சார்ஜ் ஏற்றுவதற்கான மின்சார செலவாக இருக்கும் என்றும் ஆம்பியர் தெரிவிக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கான எரிபொருள் செலவை கணக்கிடும்போது, பெட்ரோல் ஸ்கூட்டர்களைவிட இதற்கான எரிபொருள் செலவு பன்மடங்கு வரை குறைவாக இருக்கும் என்றும் ஆம்பியர் தெரிவிக்கிறது.

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் பட்ஜெட் என்ற நிலை உள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் பலர் பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது பைக்குகளை வாங்குவதற்கு மனதை மாற்றிக் கொள்ளும் நிலை தொடர்கிறது. இதுபோன்ற வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், போதுமான வசதிகளுடன் சரியான பட்ஜெட்டில் இந்த ஸ்கூட்டரை கொண்டு வந்துள்ளது ஆம்பியர் நிறுவனம்.

அதிக தொழில்நுட்ப வசதிகள் இல்லாத போதும், போதுமான ரேஞ்ச், எளிதான கையாளுமை, லிம்ப் டு ஹோம் வசதி ஆகியவை இந்த ஸ்கூட்டரை வாங்குவதற்கான மதிப்பை தரும். பட்ஜெட்டும் தோதாக இருப்பதுடன், அதிக விற்பனை மையங்களுடன் ஆம்பியர் இயங்குவதும் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

 

Most Read Articles

English summary
Ampere Vehicles recently launched their latest flagship electric scooter, the Magnus Pro in the Indian market last month. The flagship electric scooter promises to offer strong performance from its electric powertrain and also come with a host of features and equipment. We got our hands on the Magnus Pro recently and here are our impressions of it.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X