ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் செம... புதிய பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

இந்திய பைக் பிரியர்கள் மத்தியில் பஜாஜ் பல்சர் பிராண்டுக்கு பெரும் வரவேற்பும், தனி மதிப்பும் இருந்து வருகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக இருந்து வரும் பல்சர் பிராண்டில் தற்போது அதிக திறன் வாய்ந்த இரண்டு 250 சிசி திறன் கொண்ட மாடல்கள் மிக சவாலான விலையில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டன. பல்சர் என்எஸ்250 (நேக்கட் டிசைன்) மற்றும் பல்சர் எஃப்250 (செமி ஃபேரிங் டிசைன்) என இரண்டு மாடல்களில் வடிவமைப்பை பொறுத்து களமிறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த பைக்குகளை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் டீம் சார்பில் மீடியா டிரைவில் வைத்து ஓட்டிப் பார்த்தோம். அப்போது இந்த பைக்குகள் குறித்த கிடைத்த தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம். இந்த செய்தியில் பல்சர் எஃப்250 பைக் குறித்த முழுமையான தகவல்களை பார்க்கலாம்.

ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் செம... புதிய பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

டிசைன்

பல்சர் வரிசை பைக்குகளின் டிசைன் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் விஷயமாக இருந்து வருகிறது. இதனை மனதில் வைத்து மிகவும் சிறப்பாக பல்சர் எஃப் 250 பைக்கை வடிவமைத்துள்ளனர் பஜாஜ் நிறுவனத்தின் வடிவமைப்பு நிபுணர்கள். முரட்டுத்தனமான தோற்றத்தை தரும் எல்இடி புரொஜெக்டர் ஹைட்லைட்டுகள், முறுக்கிய தோற்றத்துடன் பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு, அதனை ஒட்டி செமி ஃபேரிங் பேனல்கள் என முதல் பார்வையிலேயே வசீகரிக்கிறது.

ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் செம... புதிய பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

ஸ்பிளிட் இருக்கைகள், ரோஸ் கோல்டு வண்ணத்தில் பூச்சு செய்யப்பட்ட எஞ்சின் கேஸ், ட்வின் போர்ட் சைலென்சர், இரட்டை எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை பல்சர் பைக்கின் வசீகரத்தை கூட்டுகின்றன. மொத்தத்தில் பல்சர் எஃப்250 பைக் வாடிக்கையாளர்களை எளிதாக கவர்ந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் செம... புதிய பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

புதிய பஜாஜ் பல்சர் எஃப் 250 பைக்கில் அனலாக் மற்றும் டிஜிட்டல் திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆர்பிஎம் மீட்டர் அனலாக் முறையிலும், ஸ்பீடோ மீட்டர் மற்றும் இதர தகவல்களை டிஜிட்டல் திரை மூலமாகவும் பெற முடியும்.

ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் செம... புதிய பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

முக்கிய அம்சங்கள்

புதிய பல்சர் எஃப் 250 பைக்கில் க்ளிப் ஆன் ஹேண்டில் பார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் புதிய டிசைனில் சுவிட்சுகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இவை இயக்குவதற்கு எளிதாக இருப்பதுடன் பேக்லிட் இருப்பதால், இரவிலும் எளிதாக இயக்க முடியும். இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் உள்ள எல்சிடி திரை மூலமாக பல்வேறு தகவல்களை பெற முடிகிறது. ஸ்பீடோமீட்டர், வாகனம் ஓடிய தூரம், ட்ரிப் மீட்டர்கள், எரிபொருள் அளவு, நிகழ்நேர எரிபொருள் செலவு, இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் செம... புதிய பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

இந்த பைக்கில் ஒவ்வொரு டிரிப்பிற்கும் எவ்வளவு சராசரி மைலேஜ் கிடைத்துள்ளது என்ற விபரத்தை பெறும் வசதியும் இருப்பது மிக முக்கிய அம்சமாக கூறலாம். இந்த பைக்கில் மொபைல்போனை சார்ஜ் செய்வதற்கு யுஎஸ்பி சார்ஜர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மட்டுமே இருக்கிறது. அதேபோன்று, புளூடூத் கனெக்ட்டிவிட்டி மற்றும் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி வசதிகள் இல்லை என்பது ஏமாற்றம் தரும் விஷயங்களாக உள்ளன.

ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் செம... புதிய பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் சிஸ்டம்

இந்த பைக்கில் ட்யூபியூலர் சேஸீ கொடுக்கப்பட்டு இருப்பதுடன் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இந்த பைக்கின் முன்புறத்தில் 100/80-17 டயரும், பின்புறத்தில் 130/70-17 டயரும் உள்ளன.

ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் செம... புதிய பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

எஞ்சின் விபரம்

புதிய பஜாஜ் பல்சர் எஃப் 250 பைக்கில் ஏர் மற்றும் ஆயில் கூல்டு சிஸ்டம் கொண்ட 249சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 24.1 பிஎச்பி பவரையும், 21.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பாக கூறலாம்.

ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் செம... புதிய பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

பெர்ஃபார்மென்ஸ்

புதிய பல்சர் எஃப் 250 பைக்கின் எஞ்சின் ஐட்லிங்கில் இருக்கும்போது எஞ்சின் சப்தம் சாதாரணமாக இருந்தாலும், த்ராட்டில் கொடுக்கும்போது மிகச் சிறப்பானதாகவும், அழுத்தமான சைலென்சர் சப்தத்தையும் கொடுத்து நம்மை உற்சாகப்படுத்துகிறது. பல்சர் 220எஃப் பைக்கின் சைலென்சர் சப்தத்தை நினைவூட்டுகிறது. இந்த பைக்கின் எஞ்சின் பவர் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மட்டுமே இருக்கிறது என்று நினைத்து பைக்கை இயக்கியபோது நம் எண்ணத்தை மாற்றத் துவங்கியது.

இதன் எஞ்சின் 3,000 ஆர்பிஎம் வரை சற்று திறன் குறைவாக இருந்தாலும், அதன் பிறகு மிகச் சிறப்பான செயல்திறனை வெளிக்கொணர்கிறது. மிட்ரேஞ்சில் மிக அசத்தலான பெர்ஃபார்மென்ஸை இந்த பைக் வழங்குகிறது. இந்த பைக்கின் எஞ்சின் அதிர்வுகள் குறைவாக இருப்பதுடன் 5,000 முதல் 8,000 ஆர்பிஎம் வரை உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது. இந்த பைக் 100 கிமீ வேகத்தை தாண்டும்போது, 6வது கியர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் செம... புதிய பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

ஓட்டுதல் தரம்

புதிய பல்சர் எஃப் 250 பைக்கின் இருக்கை மற்றும் க்ளிப் ஆன் ஹேண்டில்பார் ஆகியவை சிறப்பான அமரும் வசதியை அளிக்கிறது. இதனால், நீண்ட தூர பயணங்களின்போது அலுப்பில்லாமல் செல்வதற்கு உதவும். வளைவுகளில் நம்பிக்கையாக திருப்ப முடிவதுடன், கையாளுமையில் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. சஸ்பென்ஷன் சற்று கடினமானதாக இருந்தாலும், ஓட்டுதல் தரத்தில் அது பெரிய பாதிப்புகள் எதையும் காட்டவில்லை. இதன் ரகத்தில் மிகவும் சொகுசான பைக் மாடல்களில் ஒன்றாக இதனை குறிப்பிடலாம்.

ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் செம... புதிய பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

பஜாஜ் பல்சர் 250 வண்ணத் தேர்வுகள்

புதிய பஜாஜ் பல்சர் எஃப் 250 பைக் ரேஸிங் ரெட் மற்றும் டெக்னோ க்ரே என்ற இரண்டு வண்ணத் தேர்வுகளில் மட்டுமே கிடைக்கிறது. இரண்டு வண்ணத் தேர்வுகளுமே மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. மேலும், ரேஸிங் ரெட் வண்ணம் கூடுதல் கவர்ச்சியாக தெரிகிறது.

ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் செம... புதிய பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

விலை மற்றும் போட்டியாளர்கள்

புதிய பஜாஜ் பல்சர் எஃப் 250 பைக்கிற்கு ரூ.1.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதன் ரகத்தில் மிகவும் குறைவான விலை கொண்ட பைக் மாடலாகவும் குறிப்பிடலாம். இந்த பைக் யமஹா பேஸர் 25, சுஸுகி ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது.

ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் செம... புதிய பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

தீர்ப்பு

புதிய பஜாஜ் பல்சர் எஃப் 250 பைக் டிசைன், வசதிகள், செயல்திறன் ஆகியவற்றில் சிறப்பானதாக இருப்பதுடன் மிக சவாலான விலையில் அதிக மதிப்பை பெறுகிறது. அதேநேரத்தில், இந்த பைக்கில் கனெட்ட்விட்டி வசதிகள், எஞ்சினுக்கு லிக்யூடு கூல்டு சிஸ்டம் இல்லை மற்றும் 6வது கியர் இல்லை என்ற சில விஷயங்கள் வாடிக்கையாளர்களால் குறையாக பார்க்கப்படுகிறது. ஆனால், கொடுக்கும் பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தேர்வாக இருக்கிறது. இந்த பைக்கின் நேக்கட் ஸ்டைல் மாடலாக வந்துள்ள பல்சர் என்250 பைக்கின் ரிவியூவை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

Most Read Articles

English summary
Bajaj Pulsar F250 first ride review in Tamil.
Story first published: Saturday, November 6, 2021, 10:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X