புதிய பெனெல்லி 600சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கின் ஃபர்ஸ்ட் டிரைவ் அனுபவம்!

இந்திய பைக் மார்க்கெட் பக்குவப்பட்ட நிலையை அடைந்து வருவதை மனதில்கொண்டு, உலகின் பல முன்னணி ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய மார்க்கெட்டுக்கு படையெடுத்து வருகின்றன. இந்த பட்டியலில் லேட்டஸ்ட் வரவு இத்தாலியை சேர்ந்த பெனெல்லி பைக் நிறுவனம்.

வாகன விற்பனையில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் பெனெல்லி நிறுவனம் சமீபத்தில் தனது தயாரிப்புகளை இந்திய மண்ணில் அறிமுகம் செய்தது. மேலும், இந்தியாவில் 5 புதிய பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பைக்குகள் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளன.

பெனெல்லி நிறுவனம் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் பிஎன்600ஐ, டிஎன்டி899 ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் 600ஜிடி டூரிங் பைக்குகளை சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தளம் பெற்றது. டெஸ்ட் டிரைவ் செய்த மூன்று மாடல்களில், பெனெல்லி பிஎன்600ஐ பைக்கை ஓட்டிய அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


 1. டெஸ்ட் டிரைவ் மாடல் விபரம்

1. டெஸ்ட் டிரைவ் மாடல் விபரம்

மாடல்: 2014 டிஎஸ்கே பெனெல்லி பிஎன்600ஐ(டிஎன்டி600)

எஞ்சின்: 600சிசி, லிக்யூடு கூல்டு

கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு

இடம்: புனே

டிசைன்

டிசைன்

டிரான்ஸ்ஃபார்மர் சினிமாவில் பயன்படுத்தப்படும் மாடல் போன்றதொரு தோற்றம். நேக்டு ஸ்டைலிலான இந்த பைக்கில் மூடி மறைக்கப்பட்ட இடங்கள் சொற்பமே. அதேநேரத்தில், கொஞ்சமாக மூடப்பட்டிருக்கும் பாகங்கள் பைக்கின் தோற்றத்தை மிரட்டலாக காட்டுகிறது. ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன், எக்ஸ்சாஸ்ட் குழாய்கள் முறுக்கேறிய தேகத்துடன் காட்சி தருகிறது.

வித்தியாசம்

வித்தியாசம்

நம் நாட்டு மார்க்கெட்டில் இருக்கும் பைக் மாடல்களிலிருந்து பின்புறம் வித்தியாசமாகவும், அசத்தலாக இருக்கிறது. இருக்கைக்கு கீழே பொருத்தப்பட்டிருக்கும் டியூவல் எக்ஸ்சாஸ்ட் குழாய்கள் நிச்சயமாக இளைஞர்களை குதூகலப்படுத்தும் டிசைன் அம்சம். அகலமான டயர், டியூவல் எக்ஸ்சாஸ்ட், டெயில் லைட்டிலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் ஃபென்டர், கூர்மையான இன்டிகேட்டர் விளக்குகள் பைக்கின் மிரட்டலான தேகத்துக்கு வலுவூட்டும் அம்சங்கள்.

எஞ்சின்

எஞ்சின்

பெனெல்லி பிஎன்600ஐ பைக்கில் 600சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 எச்பி பவரையும், 52 என்எம் டார்க்கையும் வழங்கும். டெல்பி நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் வெட் கிளட்ச் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டிய அனுபவம்

ஓட்டிய அனுபவம்

முதல்முறையாக ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு மாறுபவர்களுக்கு ஏதுவான மாடல். ஓட்டுவதற்கு எளிதான 600சிசி பைக்குகளில் பெனெல்லி பிஎன்600ஐ மாடலும் ஒன்றாக கூறலாம். உடனடி பிக்கப் கிடைப்பதும், இதன் இலகுவான டிசைன் அமைப்பும் சிறப்பான கையாளுமையை தருகிறது. தினசரி பயன்பாட்டுக்கும், நீண்ட தூர பயணங்களுக்கும் சிறப்பானதாக இருக்கும். நிமிர்ந்த நிலையிலான இருக்கை அமைப்பு ஓட்டுவதற்கு சவுகரியத்தை தருகிறது.

 சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்றாற்போல் முன்புறம் மற்றும் பின்புற ஷாக் அப்சார்பர்களை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். பைக்கின் தோற்றத்திற்கு வலது பின்புறத்தில் இருக்கும் மோனோ ஷாக் அப்சார்பரின் பங்கு முக்கியமானதாகவும் தெரிகிறது. மேலும், நம் நாட்டு சாலை நிலைகளை எளிதாக சமாளிக்கும் வகையில், அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்கிறது. இதனால், உடல் சோர்வை தவிர்க்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

புதுமையாக இல்லை. பெரும்பாலான மோட்டார்சைக்கிள்களில் இருப்பது போன்ற எளிமையான டிசைன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனலாக் ஆர்பிஎம் மீட்டரும், அதனையொட்டியே டிஜிட்டல் டிஸ்ப்ளேயில் ஸ்பீடோமீட்டர், டிரிப் மீட்டர் எஞ்சின் வெப்பநிலை ஆகிய தகவல்களை பெற முடியும்.

சுவிட்சுகள்

சுவிட்சுகள்

சுவிட்சுகள் எதிர்பார்த்த அளவு தரமில்லை. இன்டிகேட்டர் விளக்குகளை ஒரே நேரத்தில் ஒளிரச் செய்யும் ஹசார்டு லைட் வசதி உள்ளது. சுவிட்சுகள் எதிர்பார்த்த தரமில்லை என்றாலும், ஹேண்டில் கிரிப் கவர் நன்றாகவே இருக்கிறது. மேலும், கைகளுக்கு போதுமான பிடிமானத்தை வழங்குகிறது.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

சூப்பர் பைக்குகளில் இருப்பது போன்று பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பைக்கில் முன்புறத்தில் ரேடியல் காலிபர்களுடன் கூடிய 320மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் பிஸ்டன் காலிபர் கொண்ட 260மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரேக் பிடிக்கும்போது, போதுமான செயல்திறனை வெளிப்படுத்தி பாதுகாப்பான உணர்வை தருகிறது.ஏபிஎஸ் பிரேக் இல்லை என்பது பெரும் குறை. அடுத்த ஆண்டு இதுபற்றி பெனெல்லி பரிசீலிக்கும் என்று அந்த நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

பிடித்த விஷயம் - 1

பிடித்த விஷயம் - 1

இந்த பைக்கின் மிக முக்கியமான சிறப்புகளில் ஒன்று கம்பீரமான தோற்றம்.

பிடித்த விஷயம் - 2

பிடித்த விஷயம் - 2

அடுத்த விஷயம் டியூவல் எக்ஸ்சாஸ்ட் குழாய்கள். இருக்கையை தாங்கி பிடிப்பது போன்று இருப்பதுடன், எக்ஸ்சாஸ்ட் குழாயின் டிசைன் பெரிதும் கவர்வதாக இருக்கிறது. பின்னால் அமர்பவர்களுக்கு வசதியாக கிராப் ரெயில் கொடுக்கப்பட்டிருக்கிறது. எக்ஸ்சாஸ்ட் குழாய்களின் சப்தமும், அனலும் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு தொல்ல தருமா என்ற சந்தேகம் எழுகிறது. பெரும்பாலானோர் இதுபோன்ற பைக்குகளில் சிங்கிளாக செல்வதை விரும்புவர் என்பதையும் மனதில் வைக்க வேண்டும்.

 பிடித்த விஷயம் -3

பிடித்த விஷயம் -3

டெஸ்ட் டிரைவ் செய்த மூன்று பெனெல்லி பைக்குகளிலுமே வாள் போன்ற டிசைனிலான சாவி கொடுக்கப்பட்டருக்கிறது. இது மடக்கி விரிக்க முடியும் என்பதால் பாக்கெட்டில் எளிதாக வைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால், இந்த சாவி டிசைனை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பிடித்த விஷயம் - 4

பிடித்த விஷயம் - 4

இருக்கை அமர்வதற்கு வசதியாக இருக்கிறது. பின் இருக்கை சிறியதாக தெரிந்தாலும், போதுமான இடவசதியை அளிக்கிறது. சீட்டிங் பொஷிசன் நிமிர்ந்த நிலையில், ஓட்டும் வகையில் இருப்பதால், ஓட்டும்போது மிகுந்த உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் அளிப்பதோடு, கட்டுப்படுத்துவதும் எளிதாக தெரிகிறது.

 பிடிக்காத விஷயம் - 1

பிடிக்காத விஷயம் - 1

சைடு ஸ்டான்ட் போட்டிருக்கும்போது எஞ்சின் ஸ்டார்ட் ஆகாது. இது நல்ல பாதுகாப்பு தொழில்நுட்பம். அதேவேளை, சைடு ஸ்டான்ட்டை காலால் துழாவி கண்டுபிடிப்பதும், சைடு ஸ்டான்ட் போடுவதும் கடினமாக இருக்கிறது.

 பிடிக்காத விஷயம் - 2

பிடிக்காத விஷயம் - 2

ரியர் வியூ கண்ணாடிகளின் டிசைன் நன்றாக இருந்தாலும், பயன்பாடு என்று வரும்போது சொதப்பல். பிம்பங்கள் மிகவும் சிறியதாக தெரிகின்றன. இது பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக பார்ப்பதற்கு போதிய பார்வையை அளிக்கவில்லை.

பிடிக்காத விஷயம் - 3

பிடிக்காத விஷயம் - 3

இருக்கைக்கு கீழே இடவசதி இல்லை. ஆவணங்களை வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், டூல் கிட்டும் கொடுக்கப்படவில்லை.

சிறப்புத் தகவல்கள்

சிறப்புத் தகவல்கள்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மோட்டார்சைக்கிள்களின் பெயர்களுக்கு முன்னால் TNT என்ற மாடல் பெயருடன் வர இருப்பதாக பெனெல்லி நிறுவனம் தகவலை எங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளது. தற்போது நாம் டெஸ்ட் டிரைவ் செய்த பிஎன்600ஐ என்ற மாடல் டிஎன்டி600ஐ என்ற மாடல் பெயரில் வர இருக்கிறது.

சாதகங்கள்

சாதகங்கள்

1.இத்தாலிய டிசைன் மோட்டார்சைக்கிள்

2. இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளது

3.சூப்பர் பைக்குகளை ஓட்டுவது போன்ற உணர்வு

4.எக்ஸ்சாஸ்ட் சப்தம்

 பாதகங்கள்

பாதகங்கள்

1இந்திய மார்க்கெட்டிற்கு அறிமுகமில்லாத பிராண்டு

2. விலையை பொறுத்துதான் வர்த்தகம்

எடுபடுமா?

எடுபடுமா?

விலை நிர்ணயம், சர்வீஸ் கட்டமைப்பு போன்றவற்றின் மூலமாக இந்த பைக்குகளின் எதிர்காலம் இந்தியாவில் அமையும். ஹயோசங் நிறுவனத்துடன் இணைந்து டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம் வெற்றிகரமான வர்த்தகத்தை நிலைநாட்டி காண்பித்திருப்பதும், பெனெல்லிக்கு பக்கபலமாக இருக்கும். விலை அறிவிப்பை தெரிந்துகொள்ள, உங்களுடன் சேர்ந்து நாங்களும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

Most Read Articles
English summary
Recently we tested a few of their bikes and here is our review and analysis of their BN600i motorcycle. We believe this is the motorcycle the manufacturer is expecting a lot from. They have promised us that the pricing will be ‘explosive’ and will put it in reach of many enthusiasts.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X