கல்லூரி மாணவர்களை கலக்கல் ஹீரோக்களாக மாற்றும் 5 பைக்குகள்...!!

Written By: Krishna

செம ஸ்டைலாகவும், ஸ்மார்ட்டாகவும் வலம் வரும் நமது காலேஜ் ஹீரோக்கள், நாளுக்கு நாள் புது டிரெண்ட்களை உருவாக்குவதில் கில்லாடிகள். அவர்களது தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஈடுகொடுக்கும் பல வகையான டெக்னாலஜிகளும், உடைகளும் மார்க்கெட்டில் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.

சிறந்த பைக்குகள்

காலேஜ் ஸ்டூடன்ஸின் ஸ்டைலையும், கெத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான இரண்டு விஷயங்கள் ஒன்று டிரெஸ் மற்றொன்று அவர்களது பைக்.

எந்த பைக்கில் நமது ஹீரோக்கள் வலம் வருகிறார்கள்? என்பது கூட படிக்கும் அனைவரும் கவனிக்கும் விஷயம்.

அவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸாக 5 பைக்குகள் தற்போது உள்ளன. அதிக மாணவர்களின் அட்ராக்ஷனைத் தன் பக்கம் திரும்ப வைத்துள்ள பைக்குகள் அவை. அந்த மாடல்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைப் பார்க்கலாம்....

ஹோண்டா நவி...

ஹோண்டா நவி

புதுமையான வடிவமைப்புதான் நவியின் ஹைலைட். சிறிய பெட்ரோல் டேங்க், இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கை வசதி, ஹோண்டா ஸ்டன்னர் மாடலைப் போன்ற பிற்பகுதி (டெய்ல்) வடிவமைப்பு ஆகியவை இந்த மாடலில் உள்ளன.

எஞ்சினைப் பொருத்தவரை நவியில் அப்படியே, ஹோண்டா ஆக்டிவா என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, 109 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின். 7.8 பிஎச்பி (முறுக்கு விசை) மற்றும் 8.9 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. விலை - ரூ.39,500 - ரூ.49,500 (தில்லி எக்ஸ்-ஷோரூம் விலை).

பியாஜியோ வெஸ்பா...

பியாஜியோ வெஸ்பா

வெஸ்பாவின் கிளாசிக் மாடல் ஸ்கூட்டர் வடிவமைப்பு அனைவரையும் கவரும் முக்கிய அம்சங்களில் ஒன்று. வித்தியாசமான பல கலர்களில் விற்பனைக்கு வந்திருப்பது மற்றொரு சிறப்பு.

எஞ்சினைப் பொருத்தவரை, 125 சிசி மற்றும் 150 சிசி என இருவேறு மாடல்களில் உள்ளன. விலை ரூ.77,308 - ரூ.82,137

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி

டிவிஎஸ் அப்பாச்சி

பக்கா ஸ்போர்ட் மாடல் பைக்கான இது, இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற முக்கிய பைக்களில் ஒன்று. மேட் ஃபினிஸ்டு வண்ணங்களில் அறிமுகமாயிருப்பது மற்றொரு சிறப்பு.

வண்டியை எடுத்த 3.9 விநாடிகளுக்குள் 60 கிலோ மீட்டர் வேகத்தை அடையும் செயல்திறன் இருப்பது அப்பாச்சி ஆர்டிஆர் 200 மாடலின் ஹைலைட்.

200 சிசி எஞ்சின் மற்றும் 5 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளன. விலை ரூ.89,215 - ரூ.94,215.

கேடிஎம் டியூக் 200

கேடிஎம் ட்யூக் 200

இளைஞர்களின் மனங்கவர்ந்த மாடல்களில் ஒன்றான கேடிஎம் டியூக் 200 பைக், சாலைகளில் செல்லும்போதே அனைவரது கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. அதன் காரணமாகத்தான், இந்த மாடலுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகாகிக் கொண்டே இருக்கிறது.

அதன் செம ஸ்டைலான வடிவமைப்பு, முதல் பார்வையிலேயே நம்மை வீழ்த்தி விடும். கேசிஎம் டியூக் 200 மாடலில் 199 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 கியர்கள் உள்ளன.

விலை - ரூ.1,43,401 (தில்லி எக்ஸ் ஷோரூம் விலை).

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

ராயல் என்ஃபீல்டு

இந்த மாடலின் பெயரே புது கம்பீரத்தையும், பெருமையையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த பைக்கில் வலம் வந்தால் செம கெத்தாக இருக்கும் என்பதால், இளைஞர்களின் பெஸ்ட் சாய்ஸாக ராயல் என்ஃபீல்டு மாடல் உள்ளது.

கிளாசிக் வித் மாடர்ன் லுக்தான் இந்த வண்டியின் சிறப்பம்சம். 346 சிசி கொண்ட எஞ்சினில் 20 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மொத்தம் 5 கியர்கள் இதில் உள்ளன.

மேலே உள்ள 5 மாடல்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்... கல்லூரி மாணவர்களை கலக்கலான ஹீரோக்களாக மாற்றுவதில் இந்த பைக்குகளுக்கு நிகர் அவைதான் என்பதை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

English summary
Best Five Two-Wheelers For College Students.
Please Wait while comments are loading...

Latest Photos

 
X