பெண்களுக்கான டாப் 10 'லைட் வெயிட்' ஸ்கூட்டர்கள்!!

Written By:

அலுவலகம், கல்லூரி செல்வதற்கும், குழந்தைகளை பள்ளியில் விடுவது போன்ற பணிகளுக்கும் இன்று பெண்கள் கையில் ஒரு வாகனம் இருப்பது அவசியமாகியுள்ளது.

குறிப்பாக, அவர்கள் எளிதாக ஓட்டுவதற்கும், அமர்ந்து செல்வதற்கும் ஸ்கூட்டர்தான் சிறந்த போக்குவரத்து சாதனமாக இருக்கிறது. இந்தநிலையில், பெண்கள் எளிதாக கையாள்வதற்கு ஏற்ற, இலகு எடை கொண்ட டாப் 10 ஸ்கூட்டர் மாடல்களை ஸ்லைடரில் தொகுத்து வழங்கியிருக்கிறோம். எடை அடிப்படையில் இந்த செய்தித் தொகுக்கப்பட்டிருக்கிறது.

10. ஹோண்டா டியோ

10. ஹோண்டா டியோ

எடை: 105 கிலோ

டீன் ஏஜ் வயதினரிடையே பிரபலமான மாடல் . மிக ஸ்டைலான இந்த ஹோண்டா ஸ்கூட்டர், கல்லூரி செல்லும் பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த ஸ்கூட்டர் 105 கிலோ எடை கொண்டிருப்பதால், கையாள்வதற்கும் எளிது. காம்பி பிரேக் சிஸ்டம், ட்யூப்லெஸ் டயர்களும் பெண்களுக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சங்களாக கூற முடியும். இந்த ஸ்கூட்டரின் செயல்திறன் மிக்க 110சிசி எஞ்சினும் ஓட்டுவதற்கு அலாதியான சுகத்தை தரும். லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் 4 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியும் உள்ளது. ரூ.51,452 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 09. ஹீரோ ப்ளஷர்

09. ஹீரோ ப்ளஷர்

எடை: 104 கிலோ

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல். அடக்கமான வடிவம், கையாள்வதற்கு எளிதான டிசைன் அம்சங்கள் கொண்டது. ஐபிஎஸ் பிரேக் சிஸ்டம் இருப்பது கூடுதல் பாதுகாப்பு தரும். சைடு ஸ்டான்டு போட்டிருந்தால் அதனை எச்சரிக்கும் இண்டிகேட்டர் வசதி, மொபைல் சார்ஜிங் பாயிண்ட், ட்யூப்லெஸ் டயர்கள், பொருட்கள் வைக்கும் இடத்தில் சிறிய லைட் போன்றவை முக்கிய அம்சங்கள். எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன் கிடைக்கிறது. 10 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. விலை குறைவான, அடக்கமான ஸ்கூட்டரை விரும்பும் பெண்களுக்கு சிறப்பானதாக இருக்கும். லிட்டருக்கு 60.4 கிமீ மைலேஜ் தரும் என்று ஹீரோ தெரிவிக்கிறது. ரூ.45,100 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

08. யமஹா ரே

08. யமஹா ரே

எடை: 104 கிலோ

ஹோண்டா டியோ போன்றே பெண்களுக்கு ஏற்ற மிக ஸ்டைலான ஸ்கூட்டர் மாடல். அதேநேரத்தில், ட்யூப்லெஸ் டயர்கள், டிஸ்க் பிரேக் சிஸ்டம் போன்றவை இல்லை. பொருட்கள் வைப்பதற்கு 15.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடவசதி இருக்கிறது. புளூகோர் தொழில்நுட்பத்தின் மூலமாக லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ரூ. 47,850 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

07. யமஹா ஆல்ஃபா

07. யமஹா ஆல்ஃபா

எடை: 104 கிலோ

யமஹா நிறுவனத்தின் மற்றொரு லைட் வெயிட் ஸ்கூட்டர் மாடல். வடிவமைப்பில் மட்டும், இந்த ஸ்கூட்டர் யமஹா ரே ஸ்கூட்டரிலிருந்து வேறுபடுகிறது. யமஹா ரே டிசைனை விரும்பாதவர்களுக்கான மாடலாக இதனை மாற்று தேர்வாக கூறலாம். மற்றபடி, எஞ்சின் மைலேஜ் போன்ற அனைத்தும் ஒன்றுதான். ரூ.49,892 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

06. ஹோண்டா ஆக்டிவா ஐ

06. ஹோண்டா ஆக்டிவா ஐ

எடை: 103 கிலோ

ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான ஆக்டிவா பிராண்டில் விற்பனை செய்யப்படும் லைட் வெயிட் ஸ்கூட்டர். காம்பி பிரேக் சிஸ்டம், ட்யூப்லெஸ் டயர்கள் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்கள். விலை குறைவான ஆக்டிவா ஸ்கூட்டர் என்பதும் இதன் முக்கிய விசேஷம். லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.44,200 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

05. யமஹா ஃபேசினோ

05. யமஹா ஃபேசினோ

எடை: 103 கிலோ

யமஹா நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் மாடல். பாரம்பரிய வடிவமைப்பையும், நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் கலந்து கட்டிய கலவையாக இருக்கிறது. இதன் டிசைன் நிச்சயம் வித்தியாசமானதாக குறிப்பிடலாம். லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் தரும் இந்த ஸ்கூட்டரில் 5.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ரூ.52,500 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

04. சுஸுகி லெட்ஸ்

04. சுஸுகி லெட்ஸ்

எடை: 98 கிலோ

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டாவுக்கு அடுத்து கலக்கி வரும் ஜப்பானிய நிறுவனமான சுஸுகியின் லெட்ஸ் ஸ்கூட்டர் மிக இலகுவான எடை கொண்ட மாடல். இந்த ஸ்கூட்டரில் டிரம் பிரேக் சிஸ்டம்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 160மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இந்த ஸ்கூட்டர் இரட்டை வண்ணக் கலவையில் கிடைக்கிறது. 112.8சிசி எஞ்சின் கொண்ட இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. மொபைல்சார்ஜர், ட்யூப்லெஸ் டயர்கள், டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், இருக்கை, இக்னிஷன் மற்றும் ஹேண்டில்பார் போன்றவற்றிற்கான ஒருங்கிணைந்த லாக் சிஸ்டம், மெயின்டனென்ஸ் ஃப்ரீ பேட்டரி, 5.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் போன்றவை முக்கிய அம்சங்கள். இந்த ஸ்கூட்டர் ரூ.46,597 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

03. டிவிஎஸ் ஸெஸ்ட் 110

03. டிவிஎஸ் ஸெஸ்ட் 110

எடை: 97 கிலோ

பெண்களுக்கான இலகு எடை கொண்ட ஸ்கூட்டர்களில் முதன்மை வகிப்பது டிவிஎஸ் மோட்டார்தான். அந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்களில் மிக சிறப்பான இலகு எடை கொண்ட மாடல் டிவிஎஸ் ஸெஸ்ட் 110. அடக்கமான அழகிய ஸ்கூட்டரான டிவிஎஸ் ஸெஸ்ட் 110 ஸ்கூட்டரில் இருக்கைக்கு கீழே 19 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடவசதி இருக்கிறது. இதன் செக்மென்ட்டில் மிகச்சிறந்த இடவசதி கொண்ட மாடல். லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ரூ.42,300 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இது மிக குறைவான விலை கொண்ட சிறப்பான மாடலாக கூறலாம்.

02. டிவிஎஸ் ஸ்கூட்டி ஸ்ட்ரீக்

02. டிவிஎஸ் ஸ்கூட்டி ஸ்ட்ரீக்

எடை: 96 கிலோ

மிக குறைவான எடை கொண்ட இந்த ஸ்கூட்டர் வடிவமைப்பிலும் சிறப்பானது. பவர் குறைவான 88சிசி எஞ்சின் முதல்முறையாக ஓட்டுபவர்களுக்கும் எளிதாகவும், கையாள்வதற்கு சிறப்பானதாகவும் இருக்கும். இந்த ஸ்கூட்டரில் 4.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ட்யூப்லெஸ் டயர்கள், எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதிகளும் குறிப்பிட்டு கூறலாம். லிட்டருக்கு 55 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 5 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. ரூ.43,676 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

01. டிவிஎஸ் பெப் ப்ளஸ்

01. டிவிஎஸ் பெப் ப்ளஸ்

எடை: 95 கிலோ

முதல்முறையாக ஸ்கூட்டர் ஓட்டிப் பழக விரும்பும் பெண்களுக்கு சிறப்பான சாய்ஸ். இலகு என்பதுடன் அடக்கமான வடிவம், ட்யூப்லெஸ் டயர்கள், எலக்ட்ரிக் ஸ்டார்ட், மொபைல் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன. 5 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பட்ஜெட், இலகு எடை, அதிக மைலேஜ் என பெண்களுக்கு ஏற்ற ஸ்கூட்டர் மாடலாக இதனை கூறலாம். ரூ.41,568 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

தேர்வு

தேர்வு

எடை அடிப்படையில் இந்த செய்தித் தொகுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு, வசதி, பட்ஜெட்டை பொறுத்து தேர்வு அமையும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

 

மேலும்... #டாப் 10 #top 10
English summary
Best Light Weight Scooters For Women And College Girls.
Story first published: Wednesday, September 23, 2015, 12:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more