பெட்ரோல் விற்கிற விலைக்கு பேசாம ஒண்ணு வாங்கீர வேண்டியதுதான்... இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்ட் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு நட்பான பல புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. இதில், இவி நிறுவனமும் ஒன்று. இது எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமாகும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் இவி நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இவி நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பெட்ரோல் விற்கிற விலைக்கு பேசாம ஒண்ணு வாங்கீர வேண்டியதுதான்... இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ!

டிசைன்

இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் அமர்க்களப்படுத்துகிறது. டிசைன் என்ற அம்சத்தில்தான் இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகமாக ஸ்கோர் செய்கிறது. இந்த கவர்ச்சிகரமான டிசைன் மூலம் இளம் வாடிக்கையாளர்களை இவி நிறுவனம் குறி வைத்துள்ளது.

இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. ஹை மற்றும் லோ பீம்களுக்கு ஹெட்லேம்ப்பில் தனித்தனியான எல்இடி போடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் அப்ரானின் பெரும்பாலான இடத்தை ட்வின் ஹெட்லேம்ப் செட்-அப் எடுத்து கொண்டுள்ளது.

அப்ரானின் மேலே ஏர் இன்டேக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையானது அல்ல. இந்த ஏர் இன்டேக் மூலம் ஸ்கூட்டருக்கு ஸ்போர்ட்டியான லுக் கிடைக்கிறது. இதற்கு மேலே ‘EeVe' பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஹேண்டில்பார் உலோக மூடியில் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் இடம்பெற்றுள்ளன.

பெட்ரோல் விற்கிற விலைக்கு பேசாம ஒண்ணு வாங்கீர வேண்டியதுதான்... இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ!

பக்கவாட்டு பகுதியில் இருந்து பார்க்கும்போது, ட்யூயல் டோன் அலாய் வீல்கள் உடனடியாக கவனம் ஈர்த்து விடுகின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஃப்ளோர் போர்டு உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் பாடியில் கிராபிக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பெட்ரோல் விற்கிற விலைக்கு பேசாம ஒண்ணு வாங்கீர வேண்டியதுதான்... இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ!

பின் பகுதியின் கீழே ஸ்கூட்டரின் இரு பக்கமும் ட்யூயல்-டோன் ஸ்விங்ஆர்ம் கவர் கொடுக்கப்பட்டுள்ளது. அழகிற்காகவே இவி நிறுவனம் இதனை வழங்கியுள்ளது. அதே சமயம் பின்னால் அமர்பவர் பிடித்து கொள்வதற்கு வசதியாக பெரிய க்ராப் ரெயிலையும் இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. அதேபோல் இந்த ஸ்கூட்டரின் பெரிய டெயில் லேம்ப்பும் கவனம் ஈர்க்கிறது. இதன் பக்கவாட்டில் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மட்கார்டில் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை பதிவு செய்ய வேண்டியதில்லை என்பதால், நம்பர் பிளேட்டில் பதிவு எண்ணுக்கு பதிலாக ‘EeVe' என்பது மட்டுமே வழங்கப்படுகிறது. சிகப்பு மற்றும் கருப்பு, நீலம் மற்றும் கருப்பு என மொத்தம் 2 ட்யூயல் டோன் வண்ண தேர்வுகளில் இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கிறது.

பெட்ரோல் விற்கிற விலைக்கு பேசாம ஒண்ணு வாங்கீர வேண்டியதுதான்... இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ!

வசதிகள்

இது எளிமையான மற்றும் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள வசதிகளின் பட்டியல் மிகப்பெரியது இல்லை என்றாலும், இந்த விலைக்கு என்ன வசதிகளை வழங்க முடியுமோ அவற்றை கொடுத்துள்ளனர். இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சில முக்கியமான வசதிகளை கீழே காணலாம்.

 • எல்இடி லைட்கள்
 • ஜியோ-ஃபென்சிங் மற்றும் ஜியோ-டேக்கிங்
 • யூஎஸ்பி மொபைல் போன் சார்ஜர்
 • கீலெஸ் எண்ட்ரி
 • ரிமோட் லாக்/அன்லாக் மற்றும் ஸ்டார்ட்
 • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்
 • மூன்று ரைடிங் மோடுகள்
 • இதில், ஜியோ-ஃபென்சிங் மற்றும் ஜியோ-டேக்கிங் போன்ற வசதிகள், வர்த்தக ரீதியில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குபவர்களுக்கும், ஃப்ளீட் ஆபரேட்டர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் கீலெஸ் எண்ட்ரி வசதியை பயன்படுத்துவதும் மிகவும் எளிமையாக உள்ளது.

  பெட்ரோல் விற்கிற விலைக்கு பேசாம ஒண்ணு வாங்கீர வேண்டியதுதான்... இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ!

  இந்த ஸ்கூட்டரில் வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. டயல் சிறியதாக உள்ளது. ஒரு சில அடிப்படை தகவல்களை மட்டும் காட்டுகிறது. வேகம், தற்போதைய ரைடிங் மோடு, பேட்டரி வோல்டேஜ், மோட்டார் ஸ்பீடு மற்றும் கடைசியாக சார்ஜ் செய்யப்பட்ட பிறகு ஸ்கூட்டர் எத்தனை கிலோ மீட்டர் ஓடியுள்ளது? போன்ற தகவல்களை நீங்கள் பெறலாம்.

  பெட்ரோல் விற்கிற விலைக்கு பேசாம ஒண்ணு வாங்கீர வேண்டியதுதான்... இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ!

  பவர்ட்ரெயின், செயல்திறன் மற்றும் கையாளுமை

  இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 250 வாட் ஹப் மோட்டார், 27Ah 72V லீட் ஆசிட் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியை பூஜ்ஜியத்தில் 100 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு சுமார் 7-8 மணி நேரம் வரை ஆகும். பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 75 முதல் 85 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என இவி நிறுவனம் கூறுகிறது.

  இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஓரளவிற்கு ஏற்ற ரேஞ்ச் என்றாலும், செயல்திறனில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தலைசிறந்த ஒன்றாக கூற முடியாது. தட்டையான மேற்பரப்பு என்றால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகபட்சமாக மணிக்கு 45 கிலோ மீட்டர்கள் வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால் ஒரு சில சரிவான நிலப்பரப்புகளில் எங்களால் மணிக்கு 49 கிலோ மீட்டர் வேகம் வரை செல்ல முடிந்தது. அதே சமயம் ஆக்ஸலரேஷன் ஓரளவிற்கு நன்றாக உள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சுமார் 8 வினாடிகளில் எட்டுகிறது.

  பெட்ரோல் விற்கிற விலைக்கு பேசாம ஒண்ணு வாங்கீர வேண்டியதுதான்... இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ!

  நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1, 2 மற்றும் 3 என மொத்தம் மூன்று ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மூன்று ரைடிங் மோடுகளிலும் ஆக்ஸலரேஷன் ஒரே மாதிரியாகவே உள்ளது. டாப் ஸ்பீடில் மட்டுமே வித்தியாசம் இருக்கிறது.

  முதலாவது மோடில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 33 கிலோ மீட்டர் வேகத்தை எளிதாக எட்டுகிறது. இந்த மோடில் அதிகபட்சமாக மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ஸ்கூட்டர் செல்கிறது. அதே சமயம் இரண்டாவது மோடில் அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்திலும், மூன்றாவது மோடில் அதிகபட்சமாக மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கிறது. இந்த மூன்று ரைடிங் மோடுகளிலும், த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ஒரே மாதிரியாகவே உள்ளது.

  பெட்ரோல் விற்கிற விலைக்கு பேசாம ஒண்ணு வாங்கீர வேண்டியதுதான்... இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ!

  எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலையே ரேஞ்ச்தான். இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எங்களுக்கு 55 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கியது. இவி நிறுவனம் தெரிவிக்கும் ரேஞ்ச் உடன் ஒப்பிடும்போது இது மிகக்குறைவு. ஆனால் அதிகபட்ச வேகத்தில் செல்லக்கூடிய மூன்றாவது மோடில்தான், நாங்கள் இந்த 55 கிலோ மீட்டர் ரேஞ்ஜை பெற்றோம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாங்கள் டெஸ்ட் செய்து கொண்டிருந்தபோது சார்ஜ் தீர்ந்து விட்டது. ஆனால் அப்போதும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் 2 யூனிட் பேட்டரி பவர் இருப்பதாக காட்டி கொண்டிருந்தது.

  இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி தொகுப்பு ஃப்ளோர் போர்டுக்கு கீழே வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுபவரின் முழங்கால்கள் இடுப்புக்கு மேலே வரும் வகையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரைடிங் பொஷிஷன் இருக்கிறது. இட நெருக்கடியான பகுதிகளில் ஓட்டும்போது, யூ-டர்ன் எடுக்க முயலும்போதும் இது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உயரமாக இருப்பவர்களுக்கு இது நிச்சயம் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

  ஒரு நாள் முழுக்க இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டிய பிறகு, ரைடிங் பொஷிஷன் இன்னும் சௌகரியமாக இருந்திருக்கலாம் என நினைத்தோம். இதை தவிர்த்து விட்டு பார்த்தால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டுவது நல்ல அனுபவத்தைதான் தருகிறது. ஏனெனில் இருக்கைகள் சௌகரியமாக இருக்கின்றன.

  பெட்ரோல் விற்கிற விலைக்கு பேசாம ஒண்ணு வாங்கீர வேண்டியதுதான்... இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ!

  விலை, போட்டியாளர்கள், வாரண்டி

  இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 64,900 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒகினவா ஆர்30, ஒகினவா லைட், ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா எல்எக்ஸ், ப்யூர் இவி இட்ரான்ஸ்+, ஆம்பியர் ரியோ+ உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன், இவி ஏட்ரியோ போட்டியிடும்.

  2 ஆண்டுகள் அல்லது 20 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வாரண்டியுடன் ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இவி நிறுவனம் விற்பனை செய்கிறது. அனைத்து வாரண்டி பலன்களையும் பெற வேண்டுமென்றால், சரியான நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சர்வீஸ் செய்யப்பட வேண்டும்.

  பெட்ரோல் விற்கிற விலைக்கு பேசாம ஒண்ணு வாங்கீர வேண்டியதுதான்... இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ!

  தீர்ப்பு

  இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்ட் பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. இங்கே பிரீமியம் ஹை-பெர்ஃபார்மென்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் கிடைக்கின்றன. அவற்றின் விலை 1 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ளது. மறுபக்கம் பேஸிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் உள்ளன. ஆனால் அவற்றின் வேகம் மிகவும் குறைவாக இருப்பதுடன், ஓட்டுவதற்கு அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை.

  இந்த 2 ரகத்திற்கும் இடையில் இவி ஏட்ரியோ வருகிறது. இதை பேஸிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றும் சொல்ல முடியாது, பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஓட்டுமொத்தமாக பார்த்தால், இவி ஏட்ரியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதன் உரிமையாளர்களுக்கு இனிமையான அனுபவத்தை தரும் என்று சொல்லலாம்.

Most Read Articles

English summary
EeVe Atreo Electric Scooter Review: Design, Features, Performance, Handling, Price And More. Read in Tamil
Story first published: Monday, July 12, 2021, 22:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X